விநாயகருக்கே ஆதார் கார்டு… எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. கடந்த சில ஆண்டுகள் கொரோனா பிரச்னைகள் காரணமாக அதிக கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமாக விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாக, டிரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களை வைத்து விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுவது உண்டு. அந்த வகையில், இந்த ஆண்டும் வித்தியாசமான பல விநாயகர் சிலைகளை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு ஜாம்ஷெட்பூர் பகுதியில் விநாயகருக்கு ஆதார் கார்டு ஒன்றை பேனர் வடிவல் வைத்துள்ளனர். அந்த பேனரில் விநாயகர் குறித்த தகவல்கள் ஆதார் கார்டில் இடம்பெற்றுள்ளது போல உள்ளன. அதாவது, “பெயர்: ஸ்ரீ கணேஷ், பிறந்த தேதி: 01/01/600 CE, முகவரி: ஸ்ரீ கணேஷ், தந்தை பெயர்: மகாதேவ், கைலாச மலை, மேல்தளம், மானசரோவர் ஏரி அருகில், கைலாசம், பின் கோடு: 000001” என ஆதார் கார்டில் தகவல்கள் எழுதப்பட்டுள்ளன. விநாயகருக்கு என பிரத்யேகமாக ஆதார் எண்ணும் அந்த பேனரில் அச்சடிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் விநாயகருக்கான இந்த ஆதார் கார்டு வைரல் ஆகி வருகிறது.

புஷ்பா
புஷ்பா

அல்லு அர்ஜூன் இயக்கத்தில் வெளியாகி இந்திய அளவில் வெற்றிபெற்ற திரைப்படம், ‘புஷ்பா தி ரைஸ்’. இந்த படத்தின் டிரேட் மார்க் ஆக்‌ஷன், இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களில் ரீல்ஸாக அதிகம் பகிரப்பட்டது. இந்த நிலையில், அந்த டிரேட் மார்க் ஆக்‌ஷனை வைத்து விநாயகர் சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த புகைப்படமும் அதிகளவில் கவனத்தைப் பெற்றது. அதேபோல ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரணின் போஸ் ஒன்றையும் விநாயகர் சிலையாக சிலர் வடிவமைத்துள்ளனர். அந்த புகைப்படமும் வைரல் ஆகியது. இந்த விநாயகர் சிலைகளுக்கு எதிராகவும் சிலர் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

Also Read: விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது… இந்த தகவல்கள் தெரியுமா?

ஜெயிலர்
ஜெயிலர்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் ரஜினியின் லுக்கை வைத்தும் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளனர். விநாயகர் ‘ஜெயிலர்’ விநாயகராகவும் சமூக வலைதளத்தை வலம் வருகிறார். லட்டு போன்ற இனிப்பு வகைகளை வைத்து மட்டுமே விநாயகர் சிலைகளையும் மக்கள் செய்துள்ளனர். கே.ஜி.எஃப் படத்தின் மாஸ் காட்சிகளில் ஒன்று காவல்நிலையத்தில் நடக்கும் ஃபைட் சீன். அதில் ஹீரோ சுடும் காட்சியைப் போன்றும் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்படி, வித்தியாசமாக களம் இறங்கிய விநாயகர்களை மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கே.ஜி.எஃப்
கே.ஜி.எஃப்

விநாயகர் சிலைகளை பல இடங்களிலும் மக்கள் கரைத்து வருகின்றனர். பொதுவாக இப்படியான ஊர்வலங்களில் அதிகம் பிரச்னைகள் ஏற்படுவது உண்டு. இந்த வருடம் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் பல மாவட்டங்களிலும் காவல்துறையினர் அதிகளவில் பாதுகாப்பிற்காக குவிந்துள்ளனர். ஏற்கனவே, வெளியிடப்பட்ட நெறிமுறைகளையும் சிலைகளை கரைக்க செல்பவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

1 thought on “விநாயகருக்கே ஆதார் கார்டு… எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!”

  1. Hi there! Do you know if they make any plugins to assist with SEO?
    I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very
    good gains. If you know of any please share. Thank you!
    You can read similar art here: Eco wool

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top