‘ஆசை’ படத்தின் ‘கொஞ்சநாள் பொறுதலைவா’ பாடலில் அஜித்தைவிட கூட இருந்த டான்ஸர்கள்தான் அதிகம் ஆடியிருப்பார்கள். அந்த அளவுக்குத்தான் அப்போது அவரது டான்ஸ் திறமை இருந்தது. பின்னாட்களில் அஜித் பல்வேறு வழிகளில் மாஸ் காட்டி தன் ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருந்தாலும் விடாமுயற்சியாக தன்னால் முடிந்த அளவுக்கு டான்ஸைக் கற்றுக்கொண்டு அதில் கலக்கவும் தவறியதில் இல்லை.
அட்டகாசம் –‘தெக்குச் சீமையிலே’
சிம்பிளான ஸ்டெப்ஸ்தான் அஜித் போடுவார். பெரிய குத்தாட்டமெல்லாம் அவருக்கு வராது என தமிழ்நாடு தப்பு கணக்கு போட்டிருந்த நேரத்தில். ‘அட்டகாசம்’ படத்தில் வேட்டியை மடித்துக்கொண்டு நாக்கை துறுத்திக்கொண்டு ‘தீபாவளி.. தல தீபாவளி..’ என அவர் போட்ட வெறியாட்டத்துக்கு தமிழ்நாடே ஆடியது. அஜித்துக்கு இப்படியெல்லாம் ஆட வருமா என போட்டி நடிகர்களின் ரசிகர்களே ஒரு கணம் ஜெர்க் அடித்துதான் போனார்கள்.
வரலாறு – ‘இன்னிசை அளபெடையே’
2006-ஆம் ஆண்டுக்கு முன்பு, ‘உங்காளு பரதநாட்டியம் ஆடப்போறாருப்பா’ என சொல்லியிருந்தால் அஜித் ரசிகர்களே நம்பாமல் நமுட்டு சிரிப்பு சிரித்திருப்பார்கள். ஆனால், ‘வரலாறு’ படத்தில் பெரும் சிரத்தையெடுத்து குறுகிய காலத்தில் பரதநாட்டியம் கற்று அசத்தியிருப்பார் அஜித். கண் அசைவில் தொடங்கி விரல்களில் அபிநயம் பிடிப்பதுவரை ஃபர்ஃபெக்சன் நோக்கி நகர்ந்து அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்த்திருப்பார் அஜித். ஃப்ரஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ படம் பார்த்துவிட்டு வந்த அவரது ரசிகர்கள், ‘தல பரதநாட்டியத்துக்கே டிக்கெட் காசு சரியாப்போச்சுப்பா’ என செம்ம ஹேப்பியானதை மறக்கமுடியுமா..?
ஏகன் – ‘ஹே சாலா’
டான்ஸ் மாஸ்டரான ராஜூ சுந்தரம் டைரக்ட் செய்த படம் ‘ஏகன்’. சும்மா விடுவாரா..? ‘ஹே சாலா’ பாடல் தொடக்கமே அஜித் முட்டி போட்டு கையை ஊன்றாமல் எழுந்திருக்கும் ஸ்டெப்புடன் தொடங்க, தியேட்டரில் விசில் பறந்தது. அவர் போட்ட அந்த ஸ்டெப்கள் எல்லாமே பர்ஃபெக்டா என்ற லாஜிக்கைவிடவும், இது தன் ஏரியா இல்லை என்றபோதும் அதை நிராகரிக்காமல் தன் ரசிகர்களுக்காக செய்த அவரது பேரன்புதான் கவனிக்கத்தக்கது.
மங்காத்தா -‘ஆடாம ஜெயிச்சோமடா..’
இந்த பாட்டில் போட்ட அஜித்தின் குத்து டான்ஸ் செம்மதான் என விஜய் ரசிகர்களே ஒத்துக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அஜித் இந்த பாட்டில், போதை கண்களுடன், வியர்த்து நனைந்த சட்டையுடனும் செம்ம குத்து குத்தியிருப்பார். அதிலும் பாட்டின் கடைசியில் முடிவது போல் முடியப்போய் இன்னொரு பீட் குத்து மியூசிக் தொடங்க, அதற்கேற்ப ரியாக்சன்களுடன் பட்டையைக் கிளப்பியிருப்பார் அஜித்.
ஆரம்பம் – ‘அடடா ஆரம்பமே’
ஒரு நார்த் இந்தியன் ஸ்டைல் காஸ்டியூமில் பெரிய அலட்டல் இல்லாமல், சிம்பிளான அதேசமயம் எனர்ஜி குறையாமல் டான்ஸ் ஆடி மாஸ் காட்டியிருப்பார் அஜித். பாட்டின் செகண்ட் பி.ஜி.எம்மில் சிரித்தபடி அசால்டாக அஜித் போடும் குத்து, அவரது ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கும்.
விஸ்வாசம் ‘அடிச்சு தூக்கு’
இந்தப் பாட்டை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அஜித்தின் சின்ன சின்ன அசைவையும் பாடலுக்கேற்ப பயன்படுத்தி மாஸ் காட்டியிருப்பார்கள். அதிலும் பாடலின் கடைசி பி.ஜி.எம்மான ‘டுருக்கு டகிட’வுக்கு, சுற்றிலும் டான்ஸர்கள் கூடி நிற்க, வேட்டியை மடித்துகொண்டு அஜித் போட்ட வெறியாட்டம் ‘கொல மாஸ்’
Also Read : OPPO Reno 6 முதல் Redmi 10 வரை… ஜூலை மாதம் வெளியாகும் கேட்ஜெட்கள்!