நாடு முழுவதுமுள்ள ஏடிஎம் மையங்களில் கார்டுகள் இல்லாமல் UPI மூலமே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக இருக்கிறது… இதன் நோக்கம் என்ன?
Card-less வசதி
ரிசர்வ் வங்கி, கடந்த 8-ம் தேதி monetary policy பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் இடம்பெற்றிருந்த முக்கியமான அம்சம், நாடு முழுவதும் ஏடிஎம் மையங்களில் Card-less வசதியை அறிமுகப்படுத்துவது. இந்த ஏடிஎம்களில், கார்டுகள் எதுவும் இல்லாமல் UPI மூலமே நீங்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம். தற்போது, இந்த வசதி மிகச்சில வங்கிகளின் ஏடிஎம்-களில் மட்டுமே இருக்கிறது.
அப்போது பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ’Card-less வசதியை நாடு முழுவதுமுள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது ஏடிஎம்களில் UPI ஆப்களைப் பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம். கார்டுகள் இல்லாத இந்த வசதி, ஸ்கிம்மிங், குளோனிங் போன்ற ஏடிஎம் கார்டு மோசடிகளைத் தடுக்கும்’ என்று கூறியிருந்தார்.
ரிசர்வ் வங்கி
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ‘UPI ஆப் மூலம் அங்கீகரிக்கப்பட்ட Card-less பணம் எடுக்கும் வசதியை அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. UPI மூலம் Authorization பெறப்பட்ட பணபரிவர்த்தனைகளில் பணம், ஏடிஎம்கள் மூலம் அளிக்கப்படும். இதுகுறித்து அனைத்து வங்கிகளுக்கும் விரைவில் வழிகாட்டு நடைமுறைகள் அனுப்பப்படும்.
எப்படி நடக்கும்?
கார்டு லெஸ் பணபரிவர்த்தனைகளைக் குறைந்தபட்சம் ரூ.100 முதல் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரையில் மேற்கொள்ள முடியும். அதேநேரம், ஒரு Beneficiary-க்கு மாதத்தில் ரூ.25,000 வரை பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இந்த லிமிட் வருங்காலத்தில் அதிகரிக்கப்படலாம். NCR Corporation நிறுவனம் UPI பணபரிவர்த்தனைகள் செய்யப் பயன்படும் மொபைல் ஆப்களைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் Interoperable cardless cash-withdrawal (ICCW) என்கிற தொழில்நுட்பத்தை இம்மாதத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், உங்கள் மொபைலில் UPI பணபரிவர்த்தனைகளுக்குப் பயன்படும் BHIM, Gpay, Paytm உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுத்துக்கொள்ள முடியும். அதேபோல், UPI பரிவர்த்தனைகள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும் ஏடிஎம்களில் பணமெடுக்க உங்களுக்கு ஏடிஎம் கார்டுகள் தேவையில்லை.
Also Read –