2011 ஜூன்.. கிரிக்கெட் உலகமே ஒருவிதமான உச்சகட்ட டென்ஷனில் இருந்த டைம். கிரிக்கெட்டின் ஆகப்பெரும் இரண்டு தலைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலைமை. எதுக்காகனு கேக்குறீங்களா… அதுதான் டிஆர்எஸ் மெத்தட் கிரிக்கெட்டுக்கு வேணுமா வேணாமாங்குறதைப் பத்திதான்.. டிஆர்எஸ்ஸை முதல்முறையா ஐசிசி கொண்டுவந்தப்போ, அதை எக்ஸ்பிரிமெண்ட்டா பயன்படுத்த முதல் ஆளா தலையாட்டுன பிசிசிஐ பின்னாடி அதை ரொம்ப உக்கிரமா ஏன் எதிர்த்தாங்க… இதுல தோனி பண்ண முக்கியமான சம்பவம் என்ன… டிஆர்எஸ்ஸுக்காக நடந்த போரைப் பத்திதான் நாம பார்க்கப்போறோம்.
திரை தீப்பிடிச்ச மொமண்ட்
2008 இந்தியா – இலங்கை சீரிஸப்போ டிஆர்எஸ் மெத்தட் எக்ஸ்பிரிமெண்டா பயன்படுத்தப்பட்டுச்சு. அதுல 12 சக்ஸஸ்ஃபுல் டிஆர்எஸ் ரிவ்யூஸ்ல ஒண்ணே ஒண்ணுதான் இந்தியாவோடது. அந்த சீரிஸுக்குப் பிறகு பிசிசிஐ டிஆர்எஸ்ஸுக்கு எதிரா தீவிரமா கொடி பிடிச்சாங்க. ஒரு கட்டத்துல அது சரியான முடிவுகளைக் கொடுக்குறதில்ல. அதை ஏன் யூஸ் பண்ணனும்னு நினைச்சது பிசிசிஐ. அப்போ பிசிசிஐ தலைவரா இருந்த சீனிவாசனும் ஐசிசி சீஃப் எக்ஸிகியூட்டிவா இருந்த ஹரூன் லார்காட் இடைல பனிப்போரே நடந்துச்சுன்னு சொல்லலாம். இப்படி கேட் அண்ட் மவுஸ் கேம் போய்ட்டு இருந்த சமயத்துல, 2011 இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் சீரிஸோட முதல் மேட்ச் டிஆர்எஸ் விவகாரத்துல பெரிய தீயைக் கொளுத்திப் போட முக்கியமான காரணமா அமைஞ்சது. பல சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா அந்த மேட்ச்ல ஜெயிச்சது. ஆனா, போஸ்ட் மேட்ச் பிரசண்டேஷன்ல அம்பயர் டேரல் ஹார்ப்பர் கேப்டன் தோனி இடையிலான வாக்குவாதம்தான் பெரிய ஃபோகஸா இருந்துச்சு. அந்த மேட்ச் முழுக்கவே, இந்தியாவோட அப்பீல்களுக்கு ஹார்ப்பர் பெரும்பாலும் தலையைத்தான் அசைச்சார். பிளேயர்ஸ் எல்லாருமே ஒரு மாதிரி விரக்தியோட இருந்தது வெளிப்படையாவே தெரிஞ்சது. ஒரு கட்டத்துல இந்தியன் டீமோட சீனியர் பிளேயர் ஒருத்தர், அவர் வேண்டவே வேண்டாம்’னு மீடியாகிட்ட சொன்னாரு. அத்தோட, இதுதான் ஒட்டுமொத்த இந்தியன் டீமோட மைண்ட்செட்னும் திரியைக் கொளுத்திப் போட்டுட்டுப் போனாரு.
அம்பயர் ஹார்ப்பரும் ஒரு கட்டத்துல அந்த மேட்ச்ல அறிமுக வீரரா களமிறங்கியிருந்த பிரவீன் குமாரை ban பண்ற லெவலுக்குப் போனாரு. இதனால அம்பயர் ஹார்ப்பர் கூட ஆன் கிரவுண்ட்லயே தோனி பயங்கரமா ஆர்க்யூ பண்ணாரு. இதெல்லாம் தாண்டி போஸ்ட் மேட்ச் பிரசண்டேஷன்ல கேப்டன் தோனி ஒரு சம்பவமும் பண்ணாரு.மேட்ச்ல சரியான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தா… மேட்ச் சீக்கிரமாவே முடிஞ்சிருக்கும். இந்நேரம் நான் ஹோட்டல்ல இருந்திருப்பேன்’னு அம்பயர் டிசிஷன்களை வெளிப்படையாவே விமர்சனம் பண்ணாரு. இதையெல்லாம் விட அதிர்ச்சியா இன்னொரு விஷயம் அதத் தொடர்ந்து நடந்துச்சு. அடுத்த ரெண்டு மேட்சுகளுக்கும் நான் அம்பயரிங் பண்ண மாட்டேன்னு அறிவிச்ச டேரல் ஹார்ப்பர், ரிட்டயர் ஆகுறதாவும் அறிவிச்சார்.
இந்த காண்ட்ரோவெர்ஸிக்கு ஐசிசி தரப்பில இருந்து மிகப்பெரிய சைலன்ஸ்தான் பதிலாவே இருந்துச்சு. பிசிசிஐக்கு அடங்கிப் போகுதா ஐசிசினு அடுத்த சர்ச்சையையும் இது கிளப்புச்சு. அதேநேரம், டேரல் ஹார்ப்பர், `தோனி அப்படி பேசுனது தப்பு. அவர் மேல ஐசிசி நடவடிக்கை எடுத்திருக்கணும்’னு தன்னோட தரப்பு நியாயத்தைச் சொன்னார். ஆனால், டிஆர்எஸ்-ங்குற பெரிய போருக்குத் தயாராகிட்டு இருந்த ஐசிசி, இந்த விஷயத்தைக் கண்டுக்கக் கூட இல்ல. அவரோட விமர்சனம் `unfair’னு ஐசிசி ஜெனரல் மேனேஜர் டேவிட் ரிச்சர்ட்சன் கருத்துச் சொன்னார். ஆனால், அவரோ, மேட்ச் ரெஃப்ரி ஜெஃப் குரோவோ தோனி மேல நடவடிக்கை எடுக்கல. என்ன நடக்குதுங்குறது எல்லா கிரிக்கெட் போர்டுகளுக்கும் வெளிப்படையாவே தெரிஞ்சிருந்தும் எந்த சலசலப்பும் எழவே இல்ல. பால் டிராக்கிங் அக்யூரட்டா இல்ல; டிஆர்எஸ்-ஸுக்குப் பயன்படுத்துற எக்யூப்மண்ட்ஸோட விலைனு எதிர்ப்புக்குக் காரணம் சொல்லுச்சு பிசிசிஐ. ஆனால், என்ன ஆனாலும் டிஆர்எஸ்ஸை நடைமுறைப்படுத்தியே தீருவோம்னு ஐசிசி நின்னுச்சு. இந்த இடைப்பட்ட காலத்துல பல கிரிக்கெட் போர்டுகளும் டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த ஆரம்பிச்சிருந்தாங்க.
இந்த சமயத்துல ஹாங்காங்ல நடந்த ஐசிசியோட வருடாந்திர மீட்டிங்ல என்ன ஆனாலும் டிஆர்எஸ்ஸை எதிர்ப்போம்னு பிசிசிஐ சொல்லுச்சு. மீடியால இந்த டிஸ்கஷன்ஸ் அதிகமாக, மீட்டிங்ல தீவிரமா விவாதிச்சு ஒரு முடிவுக்கு வந்தாங்க. ஹாக் ஐ டெக்னாலஜி சரியில்லனு பிசிசிஐ சொல்ல, பால் டிராக்கர் விஷயத்துல பைலேட்டரல் சீரிஸ் விளையாடுற ரெண்டு கிரிக்கெட் போர்டுகளோட முடிவுக்கே அதை விடுறதா ஐசிசி தர்ப்புல சமாதானம் சொல்லப்பட்டது.
Also Read – `இது ஃபர்ஸ்ட் டைம் இல்ல பாஸ்; இது லாஸ்ட் டைமும் இல்ல’ – துனித் வெல்லலகே மிரட்டல் ஸ்டோரி
2011 வேர்ல்டு கப் சீரிஸ்ல இங்கிலாந்து பிளேயர் இயான் பெல் அவுட் விவகாரத்துலயும் டிஆர்எஸ்ஸை கடுமையா விமர்சனம் பண்ணார் தோனி. 2012ல டிஆர்எஸ் மேண்டேட்டரியா ஐசிசி அறிவிச்சப்பவும் பிசிசிஐ அதை எதிர்க்கவே செஞ்சது. கிரிக்கெட் ரூல்ஸ்ல அதிக முறை சேஞ்சுக்குள்ளான எல்.பி.டபிள்யூ மாதிரி, டிஆர்எஸ்லயும் பல்வேறு டெக்னாலஜிகள் இம்ப்ளிமெண்ட் பண்ணது, ஒவ்வொரு டீமும் ரிவ்யூ பண்ற எண்ணிக்கைனு காலத்துக்கேற்ப மாற்றம் கொண்டுவந்தாங்க. 2016 நவம்பருக்குப் பிறகு பிசிசிஐயும் டிஆர்எஸ்ஸை முழுமையாப் பயன்படுத்த ஆரம்பிச்சுச்சு. இப்போ ஐபிஎல்லயும் டிஆர்எஸ் முழுமையான பயன்பாட்டுல இருக்கு. எந்த சிஸ்டத்தை தோனி ஆரம்பத்துல எதிர்த்தாரோ, அதுவே பின்னாட்கள்ல அவரோட சக்ஸஸ்ஃபுல் ரிவ்யூஸ்னால அவரோட பெயராலேயே தோனி ரிவ்யூ சிஸ்டம்னும் சொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்ததை நாம பார்த்தோம்.
மாடர்ன் டே கிரிக்கெட்ல டிஆர்எஸ் இல்லாட்டி என்னலாம் நடக்கும்?… ஜாலியா கமெண்ட்ல சொல்லுங்க.
Noodlemagazine You’re so awesome! I don’t believe I have read a single thing like that before. So great to find someone with some original thoughts on this topic. Really.. thank you for starting this up. This website is something that is needed on the internet, someone with a little originality!