UPI டிஜிட்டல் பணபரிவர்த்தனை
கட்டணங்கள் செலுத்துவது முதல் டிக்கெட் புக்கிங் வரை நாம் இன்று பெரும்பாலான விஷயங்களுக்கு டிஜிட்டலாகப் பணம் செலுத்தும்போது UPI பேமெண்ட்டைப் பயன்படுத்துவதைத்தான் வாடிக்கையாக வைத்திருக்கிறோம். அதேபோல், பணத்தை அனுப்பவும், சில நொடிகளில் பெறவும் இந்த முறை எளிதாக இருக்கிறது என்பதால், இதன் பயன்பாடுகளும் அதிகம். ஒருபுறம் இதன் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் கிரைம்களும் மறுபக்கம் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே புதுப்புது முறைகளில் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே இதுபோன்ற மோசடிகளில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும்.
UPI டிஜிட்டல் பணபரிவர்த்தனையின்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
அப்டேட்டா இருங்க பாஸ்
சைபர் கிரைம் மோசடிகளில் சிக்காமல் இருக்க உங்களோட UPI ஆப் அப்டேட்டா இருக்க வேண்டியது அவசியம் பாஸ். ஒவ்வொரு அப்டேட்டிலும் உங்களின் பாதுகாப்புக்காக சில feautures கொடுத்துட்டே இருப்பாங்க. அதனால, உங்க ஆப் எப்போதும் அப்டேட்டா இருக்க வேண்டியது அவசியம் பாஸ்.
ரிசீவிங் பேமெண்ட்ஸ்
எந்தவொரு UPI ஆப்பிலும் நீங்கள் பணம் பெறும்போது உங்கள் PIN நம்பரைக் கேட்க மாட்டார்கள். அதனால், எந்தவொரு சூழலிலும் நீங்கள் பணம் பெறும்போது யாரேனும் உங்கள் பின் நம்பரை போடச்சொன்னால், கண்டிப்பாகச் செய்யாதீர்கள். இந்த மாதிரியான மோசடியான நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
மோசடி அழைப்புகள்
லிங்குகளை அனுப்பி மோசடி செய்வது ஒருவகை என்றால், நேரடியாக போன் செய்து உங்கள் பின் நம்பர், பாஸ்வேர்டு போன்றவற்றைக் கேட்டும் மோசடி செய்வதுண்டு. எந்தவொரு வங்கியும், அதன் வாடிக்கையாளர்களிடம் பாஸ்வேர்டுகள் போன்ற தனிப்பட்ட விவரங்களை எப்போதுமே கேட்காது. அதனால், இப்படியான மோசடிகளின் வலையில் சிக்கிவிடாதீர்கள்.
பின் நம்பர்
UPI ஆப்பைத் தவிர உங்களுக்கு வரும் வேறெந்த லிங்கில் உங்கள் பின் நம்பரைப் போட வேண்டாம். மெயில் அல்லது வாட்ஸ் அப் மூலம் உங்களுக்கு ஆஃபர் தருகிறோம் என்று வரும் மோசடி இணைப்புகளை நம்ப வேண்டாம். குறிப்பாக பண்டிகை காலங்களில் இதுபோன்ற மோசடிகள் அதிகம் நடக்கும். அப்படியாக உங்களுக்கு வரும் லிங்குகள், நீங்கள் கேஷ்பேக் அல்லது பரிசுகளை வெல்ல உங்க பின் நம்பரை என்டர் செய்யுங்கள் என்று கேட்பார்கள். அப்படியான மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்.
பாஸ்வேர்டு
UPI பின் நம்பர் என்பது பொதுவாக 4 அல்லது 6 இலக்கங்களைக் கொண்டதாக இருக்கும். இந்த நம்பரை யாரும் அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாதபடி செட் செய்து கொள்ளுங்கள்.
Also Read – ஆதாரில் இருக்கும் போட்டோ பிடிக்கவில்லையா.. எப்படி மாத்தணும்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!