தமிழ் சினிமாவின் மாஸ்டர், பீஸ்ட் ஆக்டர் விஜய் செய்த கேமியோ ரோல்களைப் பற்றிய ஒரு ரீவைண்ட்.
சுக்ரன் (2005)
ரவிகிருஷ்ணாவை வைத்து எஸ்.ஏ.சி இயக்கிய இந்தப் படத்தில், காதல் ஜோடி ஒரு பிரச்னையில் சிக்கிக்கொள்ள, அவர்களை மீட்க ஆபத்பாந்தவனாக வரும் வக்கீல் சுக்ரன் கேரக்டரில் நடித்திருப்பார் விஜய். சற்றே நீட்டிக்கப்பட்ட கேமியோவான இந்த ரோலில் கோக்கில் சரக்கை மிக்ஸ் பண்ணி அடிக்கும் அசால்டான வக்கீலாக மாஸ் காட்டியிருப்பார் தளபதி. தன்னுடைய ஆரம்பகால விமர்சனங்களை குறிக்கும் விதமாக ‘சொந்தங்காரங்களே என்னை சொத்தைன்னு சொன்னாங்க..’ என்பதுபோன்ற மோட்டிவேஷனல் டயலாக்குகளையும் பேசி நடித்திருப்பார் விஜய்
பந்தயம் (2008)
மீண்டும் தன் தந்தை இயக்கத்தில் நிதின் சத்யா ஹீரோவாக நடித்த ‘பந்தயம்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பார் விஜய். ஆனால் இந்தமுறை சின்ன வித்தியாசம் , நடிகர் விஜய்யாகவே நடித்திருப்பார் விஜய். ஒரு காட்சியில் தன்னைக் காண்பதற்காக ஊரிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி வந்த சிறுவர்களை அரவணைத்து அட்வைஸ் செய்து நடித்ததில் விஜய்யின் அக்கறை மிளிர்ந்தது
ரவுடி ராத்தோர் (ஹிந்தி – 2012)
இதுவரைக்கும் பிறமொழிகளில் விஜய் நடித்த ஒரே படம் இதுதான். தன் நண்பரும் இயக்குநருமான பிரபுதேவா ஹிந்தியில் அக்ஷ்ய் குமார் நடிப்பில் ‘விக்ரமாங்குடு’ (சிறுத்தை படத்தின் ஒரிஜினல் வெர்சன்) படத்தை ரீமேக் செய்தபோது அதன் ஓப்பனிங் ஸாங்கில் கேமியோ செய்திருப்பார் விஜய். அரே சவுத் இந்தியன் சூப்பர் ஸ்டார்’ என அக்ஷய் குமார் அழைக்க, தனக்கேயுரிய வெட்கச்சிரிப்புடன் உள்ளே வந்து `ஜிந்தாங்கு ஜிந்தா ஜிந்தா.. ‘ என ஸ்டெப் போட்டு அசத்தியிருப்பார் தளபதி.
ஹீரோவா ஜீரோவா (குறும்படம் 2008)
இதை கேமியோ என ஏற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும் இந்த லிஸ்டிலில் இந்தக் குறும்படத்தை சேர்ப்பதில் தவறில்லை. பாதியிலேயே கல்வியை நிறுத்தும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இயக்குநர் ப்ரியா ஒரு குறும்படத்தை இயக்கியிருந்தார். தமிழக கல்வித்துறை ஸ்பான்சரில், சூர்யா தயாரித்த இந்தக் குறும்படத்தில் சூர்யா, ஜோதிகா, மாதவன் போன்ற ஸ்டார்களுடன் விஜய்யும் நடித்துக்கொடுத்து குழந்தைகளுக்கு மெசேஜ் சொல்லியிருப்பார் விஜய்.
Also Read – Suriya: சூர்யாவின் 8 ஆஃப் ஸ்கிரீன் மாஸ் சம்பவங்கள்!