தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்த தவறிக்கொண்டிருக்குற ரொம்ப முக்கியமான நடிகர் ஜீவானு அவரோட பழைய படங்களையெல்லாம் பார்க்கும்போது தோணூம். இன்னைக்கு சரியான கதாபாத்திரம், கதைகள் கிடைக்காமல் ஜீவா தடுமாறிட்டு இருக்காரு. ஆனால், ராம், பிரபாகர், சிவா, சேவற்கொடி செந்தில், வருண் கிருஷ்ணன்னு ஜீவா பண்ண தரமான சம்பவங்கள் எக்கச்சக்கமா இருக்கு. அதைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
ராம் – தாலாட்டு பாடல்கள் எக்கச்சக்கமா தமிழ்ல வந்துருக்கு. 10ல 9 பாடல்கள் தாய் தன்னுடைய மகனுக்கு பாடுற பாட்டாதான் இருக்கும். ஆனால், மகன், தாய்க்கு தாலாட்டு பாடுனது ராம் படத்துலதான். அந்த ஒரு பாட்டுல ஜீவா பண்ற விஷயங்கள் இருக்குல. அதுவே மனுஷன் எவ்வளவு சிறப்பான நடிகன்றதுக்கு சாட்சி. அந்தப் படத்துல ஜீவா கிட்டத்தட்ட மனநலம் பாதிக்கப்பட்ட ஒருத்தரா நடிச்சிருப்பாரு. ஒப்பனிங்ல அம்மாவை கொலை பண்ணி போட்ருக்கும்போது, முகம், கை, கால்லாம் ரத்தத்தோட கைல கத்தியோட வீட்டுக்குள்ள வேகமா நடப்பாரு, போலீஸ்கிட்ட அம்மா தூங்கிட்டு இருக்காங்க சத்தமில்லாம போனும்னு சொல்றதுலாம் பார்க்குற நமக்கே அல்லு உட்ரும். அப்படி நடிச்சிருப்பாரு. அப்புறம் ஃப்ளாஷ்பேக்ல அம்மாவுக்கும் ராமுக்கும் இடைலான உறவை காட்டுவாங்க. ஜீவா எவ்வளவு இன்னசென்ட்டா நடிச்சிருப்பாரு. அம்மாவை மடில படுக்க வைச்சு தாலாட்டுறது, ஊஞ்சல்ல உட்கார வைச்சு விளையாடுறது, அம்மாவை கொஞ்சுறதுனு அம்மாவை பயித்தியமா காதலிக்கிறவன், ராம்.
மெச்சூரிட்டியான நடிகன்னு ஜீவா எப்ப தெரிவாரு தெரியுமா? அம்மாக்கிட்ட சாப்பாடு எடுத்து வைக்க சொல்லுவாரு. அம்மா தலையை புடிச்சு தள்ளி விடுவாங்க. டக்னு உள்ள இருக்குற ஒரு கோவம் வெளிய வரும். அம்மா பயந்து சாப்பாடு எடுத்து வைச்சு. இனி நீ என்ன சொன்னாலும் கேப்பேன்ன்னு அம்மா தலைல அடிச்சு சத்தியம் பண்ணுவாரு. பாசம், கோவம், கொஞ்சல் எல்லாம் ஒரு குழந்தைக்குதான் டக்டக்னு மாறும். அந்த குழந்தைத்தனம் ராம் படத்துல ஜீவாக்கிட்ட தெரியும். அப்போ, செம நடிகன்யா நீனு நினைக்க வைக்கும். ராம் கேரக்டரை சுத்தி உள்ளவங்க, அவனை தெரிஞ்சவங்க, ஊர்ல உள்ளவங்கனு யார் சொல்றதும் ராம் இல்லை. அவன் உலகமே வேற. அவன் உலகத்துல அம்மாவையும் கடவுளையும் தவிர வேற யாருக்கும் இடமில்லை. அதேமாதிரி அவன் உலகத்துல கோபம்தான் நிறைய இருக்கு. அதை கட்டுப்படுத்துறது அவன் அம்மா மட்டும்தான். கோபத்தையும் அந்த அன்பை உள்வாங்கிக்கிறதையும் உடல்மொழிலயும் கண்கள் வழியாகவும் ஜீவா வெளிப்படுத்துறதுலாம் செம. கிளைமாக்ஸ்ல “எங்க அம்மாவை நான் எப்படிலாம் பார்த்துப்பேன்னு தெரியுமா? இப்போ எங்க அம்மா இல்லை”னு அழும்போதுலாம் நமக்கே கண்ணு கலங்கிரும். ஜீவா கரியர்ல ராம் கேரக்டர் எப்பவுமே ஸ்பெஷல்தான்.
ஜீவா ஆர்ட் ஃபிலிம்ஸ் பண்ற மாதிரியே கமர்ஷியல் படங்கள்லயும் நடிப்புல மாஸ் பண்ணியிருப்பாரு. அது என்னென்ன படங்கள்? வெயிட் சொல்றேன்.
பிரபாகர் – இந்தப் பெயரை சொன்னதும் நமக்கு டக்னு நியாபகத்துக்கு வர்றது கற்றதுதமிழ் ஜீவாதான். அந்த படத்துல நடிக்கும்போது ஜீவாவுக்கு 19,20 வயசுதான். வெறும் தாடியை மட்டும் ஒட்டிக்கொட்டு மனுஷன் நடிச்ச நடிப்பு இருக்கே. தரமா இருக்கும். பள்ளிக்கூடத்துல பாடம் நடத்துன பசங்க முன்னாடியே போலீஸ் பொடனில தட்டி ஜீப்ல கூட்டிட்டுப்போகும்போது குற்ற உணர்ச்சில பார்க்குற பார்வை, போலீஸ் கஞ்சா வழக்குல கைது பண்ணும்போது குழப்பத்தோட பார்க்குறது, தப்பிச்சுப் போகும்போது டிக்கெட் கவுண்டர்ல கொலை பண்ணிட்டு ரத்தக் கைகளோட நான் கடவுள்னு நினைச்சு சிரிச்சிட்டே பார்க்குற பார்வை எல்லாமே அவ்வளவு வித்தியாசமா நான் நடிகன்டானு சொல்ற மாதிரி இருக்கும். அந்த பிரபாகர் மூட் செட் ஆன பிறகு படத்துல ஒவ்வொரு ஃபிரேமும் பிரபாகர்தான் நம்ம கண்ணுக்கு தெரிவாரு. ஜீவாவோட முகம்லாம் தெரியாது. ஒரு நடிகன் அங்கதான் வெற்றியடைவான். படம் முழுக்க கண்கள்ல சோகம், ஏமாற்றம், காதல் இருந்துட்டே இருக்கும்.
எனக்கு ரொம்ப புடிச்சது, பிளாக் டீ குடிக்கிற சீன். அப்போதான் லெட்டர் சீன் பத்தி பேசுவாரு. என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்னு ஜீவா பேசும்போது உடம்பு அப்படியே சிலிர்க்கும். உடனே, பறவையே எங்கு இருக்கிறாய் பாட்டு. அவ்வளவு தூரம் தேடிப்போய் ஆனந்தியை கண்டுபிடிச்சதும் “இங்க எப்படி வந்த?”னு கேக்கும்போது, கண்ணுல ஒரு தவிப்பு தெரியும். அந்த இடத்தை பாஸ் பண்ணிட்டு, நம்ம காதலர்களை பத்தி நினைப்போம். மேஜிக் அந்த சீன். நாக்கு பொத்துப்போச்சுனா, உங்களை நினைக்கிறவங்களை நினைச்சுக்கோங்கனு சொல்றதுலாம் அப்படியே உள்ள புகுந்து எதோ பண்ணும். அப்புறம் கார் காரனை உட்கார வைச்சு தமிழ் சொல்றது, ஐ.டி கம்பெனில நடக்குற சீன், தமிழ் படிச்சவன்லாம் டொக்குனு நினைக்காதீங்கனு சொல்ற சீன்லாம் அட்டகாசம். இந்தப் படத்தைப் பத்தி மட்டும் பேசணும்னா பேசிட்டே இருக்கலாம். ஜீவா கரியர்ல ரொம்பவே ஸ்பெஷலான படம் கற்றது தமிழ்.
Also Read: கர்ஜனை மொழி… கனிமொழி – 5 தரமான சம்பவங்கள்!
சிவா மனசுல சக்தி படத்துல டோட்டலா வேர பெர்ஃபாமென்ஸ் கொடுத்துருப்பாரு. “மச்சி ஒரு குவாட்டர் சொல்லுனு” தமிழ் நாட்டையே சொல்ல வைச்சிட்டாரு. சக்திக்கு ஃபோன் பண்ணி கலாய்க்கிறது, ஏர் ஹோஸ்டர்ஸ் ஆஃபிஸ்க்கு போய் அசிங்கப்படுறது, வீட்டுக்கே போய் சரக்கு கொடுக்குறது, பைக்ல ஏத்திட்டு போய் சக்தியை அலற விடுறது, சக்தி காதலிக்கிறானு தெரிஞ்சதும் டான்ஸ் ஆடுறது, சந்தானம் ஃபோனை உடைக்கிறது, லவ் பிரேக்கப்ல கஷ்டப்படுறது இப்படி காமெடி, காதல், பிரேக்கப்னு எல்லாத்துலயும் அடிபொலியா நடிச்சிருப்பாரு. அப்புறம் கோ படம். செமயா நடிச்சிருப்பாரு. யங் ஃபோட்டோகிராஃபரா கலக்கி எடுத்துருப்பாரு. ஜீவாவை பார்க்கும்போது நாமளும் நல்ல ரிப்போர்ட்டர் ஆகணும்னு தோணும். அவ்வளவு சிறப்பா பண்ணியிருப்பாரு. கமர்ஷியலா அவர் நடிச்ச படங்கள்ல எனக்கு ரொம்ப புடிச்சது ரௌத்திரம் படம். மாஸா இருக்கும். எதுக்கெடுத்தாலும் கோவப்படுற இளைஞனா வந்து மிரட்டியிருப்பாரு. தங்கச்சி கல்யாணம், காதல்னு எமோஷன்லயும் பின்னியிருப்பாரு. சமூக பொறுப்பு முக்கியம்னு சொல்லி நடிச்சிருப்பாரு. ஜீவாவோட வேற ஒரு டைமன்ஷன் இந்தப் படத்துல இருக்கும்.
சேவற்கொடி செந்தில்ன்ற கேரக்டரை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். நம்மள ஈஸியா கனெக்ட் பண்ணிக்கிற மாதிரியான கேரக்டர். வாழ்க்கையை நினைச்சு பயப்படுறது, புரொஃபஸர் சொல்றதை கேக்குறது, ஃப்ரெண்ட்ஸ அவாய்ட் பண்றது, மாடில இருந்து குதிக்கிறதுனு தன்னோட கேரக்டரை ரொம்ப சரியா பண்ணியிருப்பாரு. கிளைமாக்ஸ்ல இண்டர்வியூ சீன்லலாம் நம்மளையே கலங்க வைச்சிருவாரு. நீ தானே என் பொன் வசந்தம் படத்துலயும் ஜீவாவோட பெர்ஃபாமன்ஸ் செமயா இருக்கும். ஸ்கூல், காலேஜ், வேலைனு அந்த மூணு டைம் பீரியடையும் கரெக்டா பண்ணியிருப்பாரு. எனக்கு ரொம்ப புடிச்சது காலேஜ் டைம்ல வர்ற வருண்தான். அவன் கனவுகளோட இருக்குறதை ரொம்ப அழகா வெளிப்படுத்தியிருப்பாரு. குறிப்பா ஸ்டேஜ்ல் பாடி கரெக்ட் பண்ற சீன்லாம் செம. கடைசியா எல்லாருக்கும் புடிச்ச என்றென்றும் புன்னகை. அப்பா வெறுப்பு, பெண்கள் மேல வெறுப்புனு வெறுப்புலயே வாழ்ற மனுஷனா கலக்கிருப்பாரு. கடைசியா ஜீவாவுக்கு ஹிட் ஆன படம்னா இதுதான்னு நினைக்கிறேன். 83 படத்துலயும் நக்கல் நையாண்டி பண்ணிட்டு ஸ்ரீகாந்த் கேரக்டரை அப்படியே பண்ணியிருப்பாரு.
கமர்ஷியலா ஜீவா பண்ண பல படங்களைவிட கிளாசிக்கா அவர் பண்ண படங்கள்தான் இன்னைக்கும் நின்னு பேசுது. அதேமாதிரியான படங்களை அவர் திரும்பவும் பண்ணனும். அதுதான் ஜீவா ரசிகர்களோட ஆசை.