பிக்பாஸ்ல இப்படியொரு போட்டியாளரை இதுவரைக்கும் வந்த சீசன்ல யாரும் பார்த்துருக்க மாட்டாங்க. கமல் இதுவரைக்கும் உச்சக்கட்ட கோபத்துல போட்டியாளரை திட்டுனதும் இந்த சீசன்லதான். அதாங்க, அசீம். ஷிவின், அமுதவாணன், விக்ரமன் எல்லார்கிட்டயும் நடந்துகிட்ட விதம், பயன்படுத்துற வார்த்தைகள் வரைக்கும் எல்லாமே அவ்வளவு அறுவெறுப்பான விஷயங்களாதான் பண்ணிட்டு இருக்காரு. திரும்புற பக்கம்லாம் போட்டு பொளந்துட்டு இருக்குற அசீம்க்கும் இன்னைக்கு அல்ட்டிமேட்டா இருக்குற நடிகருக்கும் இன்ட்ரஸ்டிங் கனெக்ஷன் இருக்கு. அது என்ன? அசீம் பேச்சுலாம் பார்த்தா அந்த தலைவர் டக்னு நியாபகம் வருவாரு. அப்படி என்ன பேசிருக்காரு? சினிமால அவரு… அரசியல்ல இவரு… அதான் அசீம் இப்படி இருக்காரா.. சேச்சே இருக்காதுனு நம்புவோம்! ஆமா, அந்த ரெண்டு பேர் யாரு? கடைசில சொல்றேன். வெயிட்!
எல்லா சீசனையும்விட இந்த சீசன்ல சண்டை சீக்கிரமே தொடங்கிடுச்சுனு சொல்லலாம். யாரால, நம்ம அஸீம் தான். அதாவது இந்த வீட்டுல இருக்க தகுதியானவங்க யாருனு நம்பர் அடிப்படைல நிக்க வைப்பாங்க. அப்போ அசீம் எல்லாத்தையும் திமிரா பேசி வம்புக்கு இழுப்பாரு. அதாவது, நான் பண்றது மட்டும்தான் கரெக்ட். இந்த வீட்டுல மத்தவங்க பண்றதுலாம் தப்புனுதான் பேசுவாரு. முதல்ல ஆயிஷாக்கிட்ட, “இந்த விட்டுல முக்கால் வாசி நேரம் தூங்குறதை தவிர வேற என்ன பண்ணிருக்க?”னு அசீம் கேட்க காரசாரமா விவாதங்கள் ஏற்படும். அப்படியே, விக்ரமன்கிட்ட வம்புக்குப் போவாரு. விக்ரமன் மரியாதையா பேசுன்னு சொல்லுவாரு. உடனே, அசீம், “நீ யாரு எனக்கு?, உனக்கும் எனக்கும் என்னடா பிரச்னை? போடா போய் வேலையை பாரு” அப்டினு மரியாதை இல்லாமல் பேசுவாரு. ஆயிஷா சொல்லுவாங்க. வீட்டுல நடக்குற சின்ன பிரச்னையெல்லாம் உள்ள புகுந்து பெரிய பிரச்னையா மாத்துனதைத் தவிர வேற என்ன பண்றீங்கனு கேப்பாங்க. கையை நீட்டி பேசுற வேலை வைச்சிக்காத, கிளம்பு காத்துவரட்டும், கத்தி பேசுற வேலையை வைச்சிக்காதனு சவுண்டை ஏத்தி பேசுவாரு. வாங்க போங்கனுதான் அயிஷா பேசுவாங்க.
அசீம் உடனே, “போடி, அடிடி பார்ப்போம், வேலையை பாருடி, மூஞ்சியும் முகறையும் பாருடி”னு பேசுவாரு. அப்போ, விக்ரமன் உள்ள வந்து மரியாதையா பேசுங்கனு சொல்லுவாரு. “வெள்ளை சட்டை போட்டா டானா?”னு கேட்டு, எனக்கு கோவம் வந்துரும்டானு சொல்லுவாரு. அசீமோட முழு கான்வர்சேஷனைப் பார்த்தாலே அவ்வளவு கடுப்பு நமக்கு வரும். அதுல அசீம் தலை கனத்தோட பேசுறதை பார்த்தா, ‘பெரிய பிரிட்டிஷ் சார்லஸ் இவரு’ன்ற மாதிரிதான் தோணும். எல்லாத்தப் பார்த்தும் நீ யாரு? நீ யாரு?னு அசீம் கேக்குறாரு. முதல்ல நீ யாரு? நிஜ ரௌடி கத்தமட்டான்னு டயலாக் ஒண்ணு இருக்கு. அசீம் இவ்ளோ கத்து கத்தும்போதே தெரியுது. உள்ள ஒண்ணும் இல்லை டம்மி பீஸ்தான்னு. தனலட்சுமியை தள்ளி விட்ட சம்பவம். எவ்வளவு பொய். வன்முறையை கைல எடுக்கக்கூடாதுனு அவரே சொல்லுவாராம், அப்புறம் அவரே அதை வைச்சு விளையாடுவாராம். சரியான கிறுக்கனா இருப்பான் போலயேனுதான் தோணும். ரொம்பவே சீப்பான, எல்லாரையும் முகம் சுழிக்க வைச்ச பிகேவியர்னா, அது ஷெரின்கிட்ட நடந்துக்கிட்டதுதான். கை தட்டி தட்டி பாடி லாங்குவேஜ் பண்றது, அமுதவாணன் பாடி லாங்குவேஜ் இமிடேட் பண்ணி கலாய்க்கிறது. மொத்தத்துல பக்கத்துல இருக்குறவங்களை அசிங்கப்படுத்தி விளையாடுறதுதான் இவரோட பிளான்.
கமல் எதுவுமே சொல்லாமல் இருக்காருனு சோஷியல் மீடியால பொங்கினப்போதான், கடைசியா கமல் அசீமை வைச்சு செய்தாரு, “அசீம், உங்கக்கிட்ட நான் எதுவும் கேக்கப்போறதில்லை. நீங்க என்ன சொல்லுவீங்கனு எனக்கு தெரியும். உங்களை நான் விமர்சிக்கலை. கண்டிக்கிறேன்”னு செம டோஸ் கொடுப்பாரு. ஆனால், அப்போக்கூட முகத்துல திமிரோடவும் தலைகனத்தோடவும் நின்னு சிரிச்சிக்கிட்டு இருப்பாரு. கமல்கிட்ட டோஸ்லாம் வாங்குனதுக்கு அப்புறம் கேமரா முன்னால வந்து அம்மாப்பாக்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருப்பாரு. முதல்ல, காயப்படுத்துனவங்கக்கிட்ட மன்னிப்பு கேக்குறதுதான உலக வழக்கம். “அசீம் தன்னை ரக்கர்ட் பாயாக உணர்கிறார். நாட்டாமை பண்ற, அட்வைஸ் பண்ற இல்லைனா அடிதடில இறங்குற யார்ரா இவன் கோமாளி, அசல் கோளாறு ஒருபக்கம் தடவுறான்னா, ஆர்வக்கோளாறு ஒருபக்கம் கத்துறான், சீரியல் பார்க்குறவங்களுக்கு உன்னை முழுசா தெரியாது, இதுல அகில உலக சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் வேற”னுலாம் மீம்ஸ் போட்டு தாளிச்சுட்டு இருக்காங்க. அதேமாதிரி ஆணாதிக்க திமிரும் அசீம்கிட்ட அதிகமாவே இருக்கும். இதெல்லாம் பார்த்து இவங்க ரிலேஷன்ஸ் வெக்ஸ் ஆகதான் போறாங்க. இப்படி ஒருத்தர்கூட இருக்குறவங்க உண்மையிலே பாவம்தான்னு பரிதாபமாகவும் பேசுறாங்க.
Also Read – அசல் கோளாறு… நீங்க உண்மையிலேயே கோளாறா?
முதல்ல சொன்னேன்ல அந்த நடிகர் அஜித்தான். அஜித்தோட மிகப்பெரிய ஃபேன், அசீம். அஜித் படிச்ச ஸ்கூல்லதான் அசீமும் படிச்சிருக்காரு. அவரை மாதிரி ரியல் லைஃப்ல இருக்கணும்னு நினைக்கிறாருனு முன்னாடிலாம் சொல்லியிருக்காரு. அஜித்தை பத்தி அதிகமா நமக்கு தெரியாது. அவரை மாதிரி இருக்கணும்னா, அப்போ அஜித் இப்படியா? இல்லை போற போக்குல சொல்லிட்டாரா? ஆனால், நமக்கு தெரிஞ்ச வரை அஜித் நல்ல மனுஷன். இப்படி, ஒரு ஃபேன் இருக்காருனு தெரிஞ்சா அவரே டிப்ரஷனுக்கு போய்டுவாரு. நீங்க வெளிய வராதீங்க தல. அது உங்களுக்கு நல்லதுதான். அவரோட இன்டர்வியூலாம் பார்த்தாலே தெரியுது, அசீம் உண்மையான கேரக்டரே அப்படிதான் போல. சீன் போட்டுட்டு, எனக்கு எல்லாம் தெரியும், நான் ரொம்ப ஃபேமஸான ஆள்னு தலைக்கனத்தோட தான் பேசுறாரு. சிலரை பார்த்தாலே அடிக்கணும்னு தோணும்ல, அசீம் அந்த கேட்டகிரிலதான் வருவாரு. வைஷ்ணவா காலேஜ்ல யு.ஜி, லயோலால பி.ஜி படிச்சி, பி.ஹெச்டிலாம் பண்ணியிருக்காராம். அவ்வளவு படிச்சு என்னத்துக்கு? சக மனுஷங்ககிட்ட எப்படி பேசணும்னு தெரியலையே. நடிச்சது அழுது வடிக்கிற சீரியல், எதோ மணிஹெய்ஸ்ட் மாதிரி பெரிய சீரீஸ்ல நடிக்கிற மாதிரி பெருமை வேற.
சரி, பிஹெச்டி எதுல பண்ணிருக்காரு தெரியுமா? அரசியல் தொடர்பான டாப்பிக்லதான் ரிசர்ச்லாம் பண்ணியிருக்காரு. அரசியல்னா அவருக்கு அப்படியொரு ஆர்வமாம். அப்போ, அவர் அரசியல் பார்வை என்னனு பார்த்தோம்னா, “நம்மை ஆளக்கூடியவன் நம்ம இனத்தவனாதான் இருக்கணும். எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே” அப்டின்றதுதான். இதுல இருந்தே தெரியலை? இவர் யாருனு?. “நான் இஸ்லாமியனா இருந்தாலும்கூட தமிழ் மீது எனக்கு பற்று அதிகம். என்னுடைய மொழி தான் இந்தியாவோட அரசியலைப் படிக்கிறதுக்கு எனக்கு தூண்டுதலா இருந்துச்சு தமிழ் பிடிக்கும் அப்டின்றதால கலைஞர் கருணாநிதியையும் சீமானையும் திருமாவளவனையும் புடிக்கும்”னு சொல்லுவாரு. எந்தக் கட்சி சார்புனு இன்டர்வியூக்கள்ல வெளிப்படுத்துனது இல்லை. ஆனால், அவரோட கருத்துகளைப் பார்த்தால் ஒருமுடிவுக்கு நம்மளால வர முடியும். “நீ அரசியல் வேணாம் என்று விலகி நின்றால், யாரை வெறுக்கிறாயோ, அவனுடைய ஆட்சியிலேயே வாழ்ந்து வீழ வேண்டிய வரும்” அப்டிலாம் பேசியிருக்காரு. முக்கியமான ஒரு கட்சில இளைஞரணி பிரிவுல அவர் இருந்துருக்காருனும் அந்த பதவியை ராஜினாமா பண்ணதாகவும் செய்திகள் இருக்கு. வி.சி.க துணைப் பொதுச்செயலாளர், எம்.எல்.ஏ ஷா நவாஸ் இவரோட மாமா. இதை பிக்பாஸ்ல அவரே சொல்லியிருக்காரு. விக்ரமன் அந்தக் கட்சில சாதாரண உறுப்பினர். அதனாலதான் எங்கிட்ட பேசமாட்றாருனும் குறிப்பிட்ருக்காரு.
பிக்பாஸ் வீட்டுல உள்ளவங்க எல்லாரும் சேர்ந்து அசீம்க்கு ரெட் கார்டு கொடுத்து எதிர்ப்பை காட்டுனாங்க. ஆனால், அஜித் தோல்விக்கு சொல்ற டயலாக் மாதிரிதான். தான் பேசுனது தப்புனு உணர்ந்து தானா திருந்துற வரைக்கும் எதுவும் மாறப்போறதில்லை. அவர் மாறுறதாவும் தெரியலை. திரும்பவும் நீ வேண்னா சண்டைக்கு வா-னு தான் நிக்கப்போறாரு.