வெள்ளை சட்டை போட்ட டான்.. விக்ரமனின் தரமான சம்பவங்கள்!

பிக்பாஸ் வீட்டுல இன்னைக்கு எல்லாருக்கு புடிச்ச மனிதர், விக்ரமன். இப்படி பொலிட்டிக்கல் ஸ்டேண்டோட, கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இருக்குற ஆள் பிக்பாஸ் வீட்டுக்குள்ள வர்றது இதுதான் முதல் தடவை.  நாளுக்கு நாள் அவரோட ஃபேன் பேஸ் அதிகமாகிட்டேதான் போகுது. எல்லாத்தையும் டாமினேட் பண்ணி கத்தும் போது அசீமை வைச்சு செய்றது, நாடகம் டாஸ்க்ல மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு எதிரா நாடகம் போட்டது, பாலியல் ரீதியா ஒருத்தரை ஒருத்தர் தாக்கும்போது அவங்க தவறை சுட்டிக்காட்டுறது, சுயமரியாதைப் பத்தி பேசுறதுனு ஏகப்பட்ட சம்பவங்களை விக்ரமன் உள்ள இருந்து பண்றாரு. கிடைக்கிற கேப்லலாம் ஆப்பு வைக்கிறியே சிவாஜின்ற மாதிரிதான் விக்ரமன் பண்றாரு. பிக்பாஸ் போட்டில கலந்துக்க போகுறதுக்கு முன்னாடியும் அவர் நிறைய சம்பவங்களை பண்ணிருக்காரு.

Vikraman
Vikraman

அசீம் – விக்ரமன் பஞ்சாயத்துதான் அல்டிமேட். வீட்டுல இருக்க தகுதியானவங்க யாருலாம்னு நம்பர் படி நிக்க வைப்பாங்க.அசீம் ரொம்பவே தலை கனத்தோட பேசிட்டு இருப்பாரு. விக்ரமன்கிட்ட, “நீ என்ன வேலை பண்ணிருக்க”, “யோவ்”னு மரியாதை இல்லாமல் பேச ஆரம்பிப்பாரு. விக்ரமன் மரியாதையா பேசுங்கனு சொல்லுவாரு. ஆனால், அசீம்க்கு அதெல்லாம் காதுலயே விழாது. “நீ யாரு எனக்கு? உனக்கும் எனக்கும் என்னடா பிரச்னை?”னு அசீம் ரொம்ப இறங்கி பேசுவாரு. சரி, அசீம் தன்னை பேசுனதுனால இப்படி பேசுனாருனு கடந்து போகலாம். அவருக்காக மட்டும் அவர் குரல் கொடுக்கலை. ஆயிஷாவையும் போடினு சொல்லுவாரு. அதுக்கும் சேர்த்துதான் மனுஷன் குரல் கொடுப்பாரு. அதுதான் முக்கியம். “வெள்ளை சட்டை போட்டா நீ ஒண்ணும் டான் இல்லை”னுலாம் அசீம் பேசுவாரு. அப்போகூட மரியாதை இல்லாம பேசாதீங்கனுதான் விக்ரமன் சொல்லுவாரு. அமுதவாணன்கிட்ட போய் பாடி லாங்குவேஜை கிண்டல் பண்ணி அசீம் பேசுவாரு. எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்க. விக்ரமன் உள்ள வந்து அவர்கிட்ட போய் பாடி லாங்குவேஜ் காமிச்சு பேசுறீங்கனு சண்டை போடுவாரு. திருநங்கை ஷிவின்கிட்ட பாடி லாங்குவேஜ் காமிச்சு அசீம் பேசுவாரு. அப்போவும் அவருதான் வந்து, “ஸ்டாப் இட்”னு சொல்லி சண்டை போடுவாரு. பொம்மை சண்டைல தனலட்சுமை சண்டை போடும்போதும் விக்ரமந்தான் குரல் கொடுப்பாரு. இந்த மாதிரி அசீம் பண்ற தப்பை மட்டுமில்லாமல், யாரு தப்பு பண்னாலும் சுட்டிக்காட்டி சொல்லி அடிச்சு கில்லை மாதிரி விக்ரமன் விளையாடிட்டு இருக்காரு.

விக்ரமனை எல்லாரும் இன்னைக்கு புகழ்றதுக்கு மிகப்பெரிய காரணங்கள்ல ஒண்ணு, அவர் போட்ட மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு எதிரான நாடகம்தான். ஆரம்பத்துல விக்ரமன்லாம் எதுக்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ள போய் தன்னோட பெயரை கெடுத்துக்குறாருனு நிறைய பேர் சொல்றதை கேட்க முடிஞ்சுது. அந்த நிகழ்ச்சி வழியா தன்னால என்ன செய்ய முடியும்னு விக்ரமன் தெளிவா இருக்காருனு சொல்லலாம். இல்லைனா, இந்த மாதிரி ஒரு நாடகத்தை கண்டிப்பா போட்ருக்க மாட்டாரு. அந்த நாடகத்தைப் பார்த்ததுக்கு அப்புறம் எல்லார் மனசுலயும் கேள்வியும் குற்ற உணர்ச்சியும் கண்டிப்பா வந்துருக்கும். அந்த எண்ணத்தை இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் வழியாதான் எளிமையா ஏற்படுத்த முடியும். அதுக்கு விக்ரமன் மாதிரியான ஆள்கள் கண்டிப்பா தேவைனு சொல்லலாம். அந்த நாடகம் முடிஞ்ச பிறகு அசீம் அப்படி பாராட்டுவாரு. ஆரம்பத்துலயே அவரை எல்லாரும் புறக்கணிக்க தொடங்குனாங்க. யாருமே தன்னோட பேசலைனா, பிக்பாஸ்கிட்டயோ கமல்கிட்டயோ அதை காரணமா சொல்லி பெரிய பஞ்சாயத்தை கிரியேட் பண்ணியிருப்பாங்க.  ஆனால், விக்ரமன் தைரியமா நின்னு, “நான் எல்லார்கூடவும் பேசதான் செய்றேன். நீங்க நான் பேச வரும்போது மூஞ்ச திருப்பிட்டு போனால், நான் தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழந்து பேச முடியாது. ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி, இவ்வளவு வன்மம்”னு சொன்னது, வீட்டுல உள்ளவங்க அதிகமா கோவப்படுத்துனாகூட நாகரீகமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துறதுனு தன்னை நோக்கி எறியுற பந்துகள் எல்லாத்தையும் சிக்ஸருக்கு பறக்க விடுறாரு.

Vikraman
Vikraman

ஒரு தப்புகூட விக்ரமன் பண்ணலையானு நீங்க கேக்கலாம். அவரோட தப்பும் சோஷியல் மீடியாக்கள்ல விமர்சனம் செய்யப்பட்ருக்கு. அது என்னனு கடைசில சொல்றேன்.

கமலே விக்ரமனை நிறைய இடங்கள்ல பாராட்டுவாரு. “சுயமரியாதை கொடுக்கவும் அவர் தயாராதான் இருந்துருக்காரு. பதிலடியாகூட அவமரியாதை பண்ணலை. அவர் வெற்றி பெற்றாலும், முக்கால்வாசில வெளிய வந்தாலும் மரியாதையோடதான் நடந்துப்பாருன்ற நம்பிக்கை அரசியல்வாதியாக எனக்கு இருக்கு”னு சொல்லுவாரு. இப்போவே, விக்ரமந்தான் ஜெயிப்பாருனு நிறைய பேர் ரைட்டப்லாம் போட ஆரம்பிச்சிட்டாங்க. அல்டிமேட் என்னனா, எ.டி.கேவே சொல்லுவாரு இப்படியே இருந்தா, விக்ரமன் டைட்டில் வாங்கிட்டு போய்ட்டே இருப்பாருனு. காரணம், அந்த ஜெனியூனான விளையாட்டுதான். விக்ரமன் முதல்ல வைரலானது மோகன் ஜி இன்டர்வியூலதான். திரௌபதி படம் ரிலீஸ் ஆன சமயத்துல விக்ரமன், மோகன் ஜியை இன்டர்வியூ பண்ணாரு. அந்த இன்டர்வியூல விக்ரமன் கேட்ட கேள்விகளுக்கு கடுப்பாகி, பாதியில எழுந்து போய்டுவாரு. அந்த வீடியோ செம வைரல் ஆச்சு. ஆனால், அது சம்பவம் இல்லை. அடுத்த நாள் அவர் ஆஃபீஸ்க்கு போய் அங்க கலாட்ட பண்ணி, விக்ரமன் சாதி என்னனுலாம் கேட்டு மிரட்டியிருக்காரு. நான் இன்டர்வியூல இருந்து வெளிய போகலை. நீங்கதான் அப்படி போர்ட்ரெயிட் பண்ணிட்டீங்க. அதை டெலிட் பண்ணுங்கனுலாம் மோகன்ஜியை கதற விட்ருக்காரு. மோகன் ஜி ஃபேன்ஸ்லாம் அப்புறம் அவருக்கு ஃபோன் பண்ணி வீட்டைக் கொளுத்திருவோம்னுலாம் சொல்லிருக்காங்க. ஏங்க, எப்பவும் அப்படிதான் யோசிப்பீங்க. என்ன? சரி, அதை விடுவோம். அதன் தொடர்ச்சியா விக்ரமன் நேரா போலீஸ்கிட்ட போய் கம்ப்ளெயிண்ட கொடுத்துட்டாரு. ஒரு முக்கியமான விஷயம் என்னனா, அப்பவும் அவர் மரியாதை குறைவா நடக்கலை.

Vikraman
Vikraman

ஆ.ராசா, “நீ கிறிஸ்தவராகவோ இஸ்லாமியராகவோ பெர்சியராகவோ இல்லைனா இந்துதான்னு உச்ச நீதிமன்றம் சொல்லுது. இப்படியொரு கொடுமை வேற எந்த நாட்டுலயாவது இருக்கா?”னு இந்து மதத்தை பயங்கரமா விமர்சித்து பேசுவாரு. இதுதொடர்பா ஆங்கில ஊடகங்கள் வரை விவாதங்கள் நடந்துச்சு. அதுல
ஒரு விவாதத்துல பா.ஜ.க சார்பாக குஷ்புவும் வி.சி.க சார்பாக விக்ரமனும் கலந்துருந்தாங்க. அப்போ, ராசா தனித்தமிழ்நாடு பற்றி பேசியதை பற்றியும் விவாதம் எழுந்துச்சு. ராசா என்ன சொல்லுவாருனா, பெரியார் தனித்தமிழ்நாடு வேணும்னு கேட்டாரு. பெரியாரை முழுமையாக ஏற்றுக்கொண்ட திமுக, ஜனநாயகம் வேணும்னு அதுல இருந்து விலகி இந்தியாவுக்காக ஒற்றுமையுடன் இருக்குனு பேசுவாரு. குஷ்பு இதைக் குறிப்பிட்டு தனித்தமிழ்நாடு கேட்டாங்கனு சொல்லுவாங்க. விக்ரமன் உடனே, தமிழை புரிஞ்சுக்காமல் தப்பாக மொழி பெயர்க்குறீங்கனு சொல்லுவாரு. குஷ்பு கடுப்பாகி, “எனக்கு தமிழ் தெரியும். உங்க தலைவர் என்ன சொன்னாருனும் தெரியும்”னு சொல்லுவாங்க. விக்ரமன் தயங்காமல், “உங்களுக்கு துணிச்சல் இருந்தா இந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுங்க”னு சொல்லுவாரு. ஆனால், குஷ்பு அதை சொல்லாமல் விக்ரமன் பக்கமே திருப்பி விடுவாங்க. விக்ரமன் அதுக்கு மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டுக்கு சில சிறப்பான குணங்கள் இருக்குனு சொல்லி விளக்கம் கொடுப்பாரு. எதையும் காதுல வாங்காமல் குஷ்பு பா.ஜ.க தலைவர்களேக்கு உரிய குணத்தோட கத்திட்டு இருப்பாங்க. செம மாஸா இருக்கும், அதெல்லாம். இப்படி நிறைய சம்பவங்களை பண்ணிருக்காரு.

Also Read – பொறாமைப்பட வைக்கும் காதலா… ராபர்ட் மாஸ்டர் – ரக்‌ஷிதா ரொமான்ஸ்!

விக்ரமனை செய்றதுக்கு எப்போ கேப் கிடைக்கும்னு சுத்திட்டு இருக்காங்க. அப்படிதான், அவர் தண்ணீரை திறந்துவிட்டுட்டு போனது கிடைச்சுது. அவர் பண்ணது தப்புதான். கருத்து கந்தசாமியா இருக்குற நீங்க, தண்ணியை ஏன் வேஸ்ட் பண்றீங்கனு அவரை செய்ய ஆரம்பிச்சாங்க. ஆனால், ஒண்ணு அவர் இந்தப் போட்டில ஜெயிக்கலாம், இல்லை தோக்கலாம். ஆனால், அவர் உள்ள பண்ண சம்பவங்களை இனி யாராலும் பண்ண முடியாது. வெளிய வந்தும் பல சம்பவங்களை சமூகத்துக்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்னு பண்ணதான் போறாரு. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top