சின்ன வயசுல சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்தது, முதல் கணவரோட மரணம்னு வாழ்க்கைல நிறைய சரிவுகளை பாவனி சந்திச்சிருக்காங்க. சந்தோஷமா எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்குற அந்த முகத்துக்குப் பின்னால அவ்வளவு வலியும் வேதனையும் நிறைந்த இன்னொரு முகம் இருக்கு. யார் இந்த பாவனி? எப்படி சினிமா, சீரியல், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குலாம் வந்தாங்க?
பிக்பாஸ் பாவனி, சின்ன வயசுல இருந்து நல்ல பணக்கார ஃபேமிலில வளர்ந்தவங்கதான். அவங்க அப்பா சின்ன வேலைகூட செய்ய விடமாட்டாராம். அம்மா வேலை செய்ய சொன்னாக்கூட வேணாம்னுதான் அப்பா, “எதுக்கு அவங்ககிட்ட வேலை சொல்ற”னு சொல்லுவாராம். அவங்க குடும்பம் முழுக்கவே அப்பாவை மட்டுமே டிபெண்ட் பண்ணிதான் வாழ்ந்துருக்காங்க. எல்லாத்தையும்தாண்டி பசினா எப்படி இருக்கும்னுகூட பாவனிக்கு தெரியாதாம். அதாவது, அம்மா பசிக்குதுனு சொன்னதில்லையாம். அப்படி வளர்த்துருக்காங்க. ஒருநாள் அப்பாக்கு பாரலைஸிஸ் பிரச்னை வந்திருக்கு. வேலைக்கு போக முடியாத சூழல். ஸ்கூல்ல அவங்க ஃப்ரெண்ட்ஸ் ஃபீஸ் கட்டலைனா வீட்டுல இருந்து அம்மாப்பாவை கூட்டிட்டு வர சொல்றதெல்லாம் பார்த்த பாவனிக்கு, அதே நிலைமை வந்துருக்கு. ஒருநாள் ஸ்கூல்க்கு போய்ட்டு வரும்போது, வீட்டுல சாப்பாடு இல்லை. ஏன்னா, சாப்பாடு வாங்க காசில்லையாம். என்ன பண்றதுனு தெரியாமல் முழிச்ச அந்த நேரம்தான் பசின்னா இதுதான்னு உணர்ந்துருக்காங்க. அப்புறம், அவங்க அக்காலாம் வேலை செய்ய தொடங்கிருக்காங்க. பாவனியும் படிக்கும்போதே வேலைகள் செய்ய ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. வேலை எவ்வளவு முக்கியம்னு பாவனி அப்போதான் உணர்றாங்க. டிபென்டன்டா இருக்கக்கூடாது. இன்டிபென்டன்டா இருக்கணும்னு அப்போதான் நினைக்கிறாங்க. இன்னைக்கு இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்காங்கனா அதுக்கு அவங்க அப்பாக்கு நடந்த சம்பவம்தான் காரணம்.
வாழ்க்கைல என்ன பிரச்னை வந்தாலும் நான் வேலை செய்துட்டேதான் இருக்கேன். வேலை ரொம்ப முக்கியம். பிரேக் டௌன் ஆனால்கூட திரும்ப நான் வந்து வேலை பார்க்குறதுக்கு காரணம் என்னோட ரெஸ்பான்ஸிபிலிட்டிதான். அதுதான் என்னை பௌன்ஸ்பேக் பண்ண வைக்குதுனு சொல்லுவாங்க. நான் உட்கார்ந்து அழுதுட்டு இருக்க முடியாது. சோஷியல் மீடியால பாவனி பேசுன இந்த விஷயம்தான் இன்னைக்கு நிறைய பேரோட ஸ்டேட்டஸா, மார்னிங் மோட்டிவேஷனா மாறியிருக்கு. சின்ன வயசுல இருந்து படிப்பு மேல பாவனிக்கு பெரிய ஆர்வம்லாம் இல்லை. சுமாராதான் படிப்பாங்க. ஆனால், கிரியேட்டிவிட்டி சைட்ல எதாவது பண்ணனும்னா ஆசை. அப்படிதான் ஸ்கூல் முடிஞ்சதும் ஃபேஷன் டிசைனிங் படிக்க வந்துருக்காங்க. ஒருநாள் ஷூட் பண்ண வேண்டிய மாடல் வரலை. வேறவழியில்லாமல் பாவனியே அன்னைக்கு மாடலிங் ஃபோட்டோ ஷூட் பண்ணியிருக்காங்க. அதைப் பார்த்துட்டு இம்ப்ரஸ் ஆயிட்டாங்க. அப்படிதான் மாடலிங் துறைக்குள்ள வந்துருக்காங்க.
Also Read – குறிச்சு வைச்சுக்கோங்க… நம்பிக்கை தரும் ஸ்டார் கிட்ஸ்!
துர்காதான் பாவனியோட உண்மையான பெயர். நடிப்புக்கு வந்தப்பிறகு பெயரை மாத்திக்கிட்டாங்க. ஒரு நாள் வேலை பிடிக்காமல் பேப்பர்ல ஆக்டிங் சம்பந்தமா இருந்த நியூஸ் பார்த்துட்டு ஃபோன் பண்ணிருக்காங்க. அப்புறம், தப்பா ஃபோன் பண்ணிட்டோம் போலனு பேசிட்டு வைச்சிருக்காங்க. ஆனால், திரும்ப ஃபோன் வந்துருக்கு. “நீங்க நல்லா பேசுறீங்க. கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுத்துட்டு வாங்க”னு சொல்லிருக்காங்க. பாவனி பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோஸ் எடுத்துட்டுப் போய்ருக்காங்க. அப்புறம், அவங்க ஆக்டிங் கத்துட்டு வர்ற சொல்லிருக்காங்க. இவங்களும் நடிப்புலாம் கத்துட்டுருக்காங்க. அப்படி, முதல் படம் நடிச்சாங்க. இவங்க ஃபஸ்ட் படம், ட்ரீம். அப்புறம், இந்தில லாகின் படம்லாம் பண்ணிருக்காங்க. படத்துக்குப் போகும்போதுதான் பிரதீபை மீட் பண்ணியிருக்காங்க. ரெண்டு பேரும் காதலிக்கவும் செய்துருக்காங்க. இப்படியே, படத்துல இருந்தா கரியர் சரியாகாது. சீரியலுக்கு போகலாம்னு முடிவு பண்ணி ரெண்டு பேரும் சீரியல் ட்ரை பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அப்போ, ரெண்டு பேருக்குமே ஒரேமாதிரி சீரியல்ல ஜோடியா நடிக்க வாய்ப்பு கிடைச்சுது. அவங்க வாழ்க்கை நல்லா போய்ட்டு இருக்கும்போதுதான் வாழ்க்கையை திருப்பி போடுறமாதிரி அவங்க வாழ்க்கைல ஒரு சம்பவம் நடந்துச்சு. பிரதீப் தற்கொலை பண்ணிக்கிட்ட சம்பவம்தான் அது. ஆக்சுவலா ரெண்டு பேரும் அவ்வளவு லவ் பண்ணாங்களாம். அவர் தற்கொலை பண்ணிக்கிட்டது அவருக்கே தெரியாதுனுதான் சொல்லுவாங்க.
கணவரோட தற்கொலையால ரொம்பவே பாதிக்கப்பட்டு இருந்தப்போ, நிறைய வதந்திகள் பரவிச்சு. தெலுங்கு இண்டஸ்ட்ரீயே வேணாம்னு இருந்தப்போதான், விஜய் டிவில இருந்து ஃபோன் பண்ணிருக்காங்க. தமிழ் சீரியல் பண்றீங்களானு கேட்ருக்காங்க. அந்த சம்பவங்கள் எல்லாத்தையும் மறக்க வேலைக்கு போனாதான் சரியா இருக்கும்னு சீரியல்ல நடிக்க அக்சப்ட் பண்ணிக்கிட்டாங்க. வீட்டுக்கு போனால் யாருமே இருக்க மாட்டாங்க, தனியா இருப்பாங்களாம். அப்புறம் அரேஞ்ச் மேரேஜ் பண்ண வீட்டுல சொல்லிருக்காங்க. அதுக்கு அக்சப்ட் பண்ணி அதுவும் நடக்கலை. கல்யாணம் நம்ம வாழ்க்கைல இனி நடக்காது. அதுக்கு நமக்கு கொடுத்து வைக்கலைனு முடிவு பண்ணி வாழ்க்கை ஓடிட்டு இருக்கும்போது, விஜய் டிவில இருந்து இன்னொரு ஃபோன், பிக்பாஸ் வர்றீங்களானு கேட்ருக்காங்க. பிக்பாஸ் வந்தப் பிறகு பாவனியோட வாழ்க்கை ரொம்பவே மாறிடுச்சுனு சொல்லலாம். றெட்டை வால் குருவி, சின்னத்தம்பி, பாசமலர், இஎம்ஐ, ராசாத்தினு நிறைய சீரியல்கள்ல நடிச்சாங்க. எல்லாமே அவங்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துச்சு. பிக்பாஸ்ல பாவனிக்கும் தனியா ஆர்மிலாம் ஸ்டார்ட் பண்ணாங்க. மிகப்பெரிய ஃபேன் பேஸ் அவங்களுக்கு வந்துச்சு. அப்படியே அமீரோட நட்பும் கிடைச்சுது. அமீர் – பாவனி காதல் பண்றாங்கன்றதுதான் இன்னைக்கு சின்னத்திரைல ஹாட் டாப்பிக்கா இருக்கு. எப்போ கல்யாணம் பண்ண போறீங்கன்றதுதான் எல்லாரோட கேள்வியும். அந்த ஜோடிக்கு செமயான ஃபேன் பேஸும் இருக்கும்.
வாழ்க்கைல நிறைய தடவை விழுந்துருக்காங்க. ஆனால், விழுந்த ஒவ்வொரு தடவையும் எழுந்து நின்னு ஓட ஆரம்பிச்சிருக்காங்க. பாவனியோட வாழ்க்கையை பார்க்கும்போது அவங்க அழகெல்லாம் தாண்டி நம்மள ஈர்க்குற விஷயம் அந்த கான்ஃபிடன்டாதான் இருக்கும்னு நினைக்கிறேன். பாவனியை உங்களுக்கு ஏன் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!
Muchas gracias. ?Como puedo iniciar sesion?