கர்நாடக சினிமாக்கள் கே.ஜி.எஃப்க்குப் பின்னால இப்போதான் வெளில தெரிய ஆரம்பிச்சிருக்கு. கே.ஜி.எஃப் ஹீரோ மட்டும்தான் கர்நாடக ஹீரோ மாதிரி பெரும்பாலும் எல்லோரும் நினைக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா ராக்கிக்கெல்லாம் அப்பா ராக்கி ஒருத்தர் இருக்கார். அவர் பெயர் சிவராஜ்குமார்.
கன்னட மக்களைப் பொறுத்தவரைக்கும் இவர்தான் ரஜினி, இவர்தான் விஜய், இவர்தான் அஜித்.. சுமார் 35 வருஷமா ஃபீல்டுல இருக்கார். ஆனா இன்னைக்கும் இவர்தான் எல்லோருக்கும் மேல்தான். இவர்தான் இப்போ ரஜினி கூட ஜெயிலர்லயும், தனுஷ் கூட கேப்டன் மில்லர்லயும் இணைஞ்சு நடிச்சுக்கிட்டிருக்கார். அவரைப் பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.
சிவராஜ்குமார் – ஆரம்பமே ஹாட்ரிக் ஹீரோ!
நாகராஜு சிவ புட்டசுவாமிங்குறது சிவராஜ் குமாரோட உண்மையான பெயர். கர்நாடக சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரோட மகன்ங்குறது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். சென்னையிலதான் பிறந்து வளர்ந்து காலேஜ் படிச்சார். திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் வற்புறுத்தலால1983-ல அடையார் பிலிம் இன்ஸ்ட்யூட்ல ஜாய்ன் பண்ணி சினிமா கத்துக்கிட்டார்
சின்ன வயசுல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருந்தாலும், 1986-ம் வருஷம் ஆனந்த் சினிமா மூலமா கன்னட சினிமாவுல அறிமுகம் ஆனார். முதல் படம பெரிய நடிகரோட மகன்ங்குறதால கிடைச்சிடுச்சுனு சொன்னாங்க பலபேர். ஆனா, அடுத்ததா வெளியான ரத சப்தமி, மனமெச்சிட ஹூடுகினு ஆரம்பமே ஹாட்ரிக் ஹிட்டுகள்தான். ஹாட்ரிக் ஹீரோ என மக்களாலும், பத்திரிக்கைகளாலும் கொண்டாடப்பட்டார். அதன் பின்னர் 1995-ம் வருஷம் ஓம்னு ஒரு ட்ரெண்ட் செட்டர் படத்தைக் கொடுத்தார். இது ஒரு டானோட கேரெக்டர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை புதுசா உருவாக்கினதுனே சொல்லலாம். கூடவே அன்னைக்கு முக்கியமான இயக்குநராவும், இன்னைக்கு நடிகராவும் இருக்கிற உபேந்திரா இயக்கியிருந்தார். பல மொழிகள்ல ஓம் ரீமேக் ஆனது. அதுக்குப் பின்னால ஜனுமதா ஜோடி, நம்மூர மந்தார ஹூவே, ஏ.கே. 47, ஜோகி, பஜரங்கி, மஃப்டி, சிவலிங்கா, டகரு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சிவலிங்கா, டகருவும் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனைகளைப் படைத்தது. இதுதவிர, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர், தயாரிப்பாளர், பாடகர் என பலவிதமா தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
பலம்!
சிவராஜ்குமார் மிகப்பெரிய பலமே அவரது பார்வையும், கம்பீரமான பாடி லாங்வேஜூம்தான். அதை ஆரம்பம் முதல் இப்போதுவரை விடாமல் தொடர்ந்து வருகிறார். இன்னும் கன்னடத்தில் எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் சிவராஜ்குமாருக்கு அடுத்துதான் என்ற நிலையை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கும், இவரது நடிப்பும் ஒரு காரணம். ஓம் பட டிரான்ஸ்பர்மேஸன்தான் இவரது திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வந்தது. அதுக்குப் பின்னால சிவராஜ்குமார் டானா நடிக்கிறார்னாலே படம் ப்ளாக்பஸ்டர்தான் அப்படிங்குற ஸ்டேஜ்லதான் இன்னைக்கு வரைக்கும் மெயிண்டெய்ன் பண்றார். அதேபோல இவரோட ஓம் பட மேனரிசத்தை அமர்க்களம் படத்துல அஜித் கேரெக்டர்ல பார்க்க முடியும். ஸ்டண்ட்க்காக ரொம்பவே மெனெக்கெடுவார் சிவராஜ்குமார். அதேபோல 60 வயசு ஆனாலும் டான்ஸ்ல பட்டையைக் கிளப்புவார். சரியா உதாரணம் சொல்லணும்னா, வஜ்ரகயா படத்துல ஒரு டான்ஸ்ல சிவராஜ்குமாரும், சிவகார்த்திகேயனும் ஆடியிருப்பாங்க. அதை பார்த்தா தெரியும் இவர் எவ்ளோ எனர்ஜியா இருக்கார்னு. நடிப்புனு வந்துட்டா டைரக்டர் ஆர்டிஸ்ட். இயக்குநர்கள் என்ன சொல்றாங்களோ அதை மட்டும்தான் செய்வார். எக்ஸ்ட்ரா இன்புட்லாம் கொடுக்க மாட்டார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கிற அளவுக்கு காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார், சிவராஜ்குமார்.
மெனெக்கெடல்!
இவர் மெனெக்கெடல் எந்த அளவுக்கு இருக்கும்னா, படத்துக்கு என்ன ஹேர்ஸ்டைல், உடைகள் தேவையோ, அதை தயங்காமல் செய்பவர். இதனால் கெட்டப்புக்காக பலமுறை ட்ரோல் செய்யப்பட்டும் இருக்கிறார். ஆனால் இயக்குநர் சொல்லிட்டாரேனு பண்ணி முடிச்சுக் கொடுத்துடுவார். அதேபோல அடுத்த மொழிகள்ல பாடகர்கள் இருந்தாலும், அவங்களை கூப்பிட்டு தன் படத்துல பாட வைச்சிடுவார். அப்படி டகரு படத்துல அந்தோணிதாசனை அழைச்சு பாட வைச்சார். அமிதாப் பச்சனோட தீவிரமான ரசிகன். அதனால அவரோட பாடிலாங்வேஜை பலமுறை கொண்டுவருவார்.
Also Read – யார் என்று தெரிகிறதா.. இவன் தீ என்று புரிகிறதா.. தமிழ் சினிமா பெஸ்ட் மாஸ் சீன்ஸ்!
குணம்!
எல்லோரைப் பத்தியும் சொல்றப்போ சிலருக்கு மட்டும்தான் குறிப்பிட்டு சொல்ற மாதிரி குணம் இருக்கும். கர்நாடக முதல்வராக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி, எப்போதுமே பயம் சிவராஜ்குமாருக்கு கிடையாது. உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொப்பளிக்க மேடைகளில் பேசுவார், ஆனால் உணர்ச்சியில் சிறிதளவும் எல்லை மீறல் இருக்காது. ஒருமுறை கூட்டத்துல பேசிட்டு அமைதியாகும்போது ரசிகர் ஒருத்தர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பத்தி சத்தமாக கமெண்ட் அடித்தார். அப்போதே மைக்கில் ரசிகரை பெண்களைப் பத்தி எப்பவுமே தப்பா சொல்லக் கூடாது என கடிந்து கொண்டார்.
இவரோட கரியரை பார்க்குறப்போ ஒன்னு நல்லா தெரியும்.. ஆரம்பத்துல இருந்தே இவரோட படங்கள் ப்ளாக்பஸ்டர், சூப்பர் ஹிட், ஹிட் ரகம்தான். இவரோட கரியரை பொறுத்தவரைக்கும் ப்ளாப்புங்குறது அரிதா நடக்குறதுதான். நிச்சயமா இவரோட பெர்ஃபார்மென்ஸ் ஜெயிலர்ல தெறிக்க வைக்கிற மாதிரி இருக்கும்னு நம்பலாம்.
எனக்கு இவர் நடிப்புல பிடிச்சது மப்டி படம்தான். அதைத்தான் இப்போ சிம்பு நடிப்புல பத்து தலனு வெளியாக இருக்கு. உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.