ஆண்டிபட்டி கோயில்

சென்னையைத் தாண்டுனா இதெல்லாம் நார்மல்!

சென்னையில வாழ்றதுக்கும் தமிழ்நாட்டுல மத்த ஊர்கள்ல வாழ்றதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. சென்னை தாண்டினா தமிழ்நாடு வேற மாதிரி இருக்கும். சிட்டில வாழ்றதுல வசதிகள் நிறைய இருக்கும். உதாரணத்துக்கு மெட்ரோ ட்ரெயின், ஏசி பஸ், மால்.. அது மத்த இடங்கள்ல இருக்காது. இந்த மாதிரி வசதிகளை நான் சொல்லல. பழக்க,வழங்கங்களாகவே நிறைய வித்தியாசங்கள் இருக்கு.  சென்னைல இருக்குறவங்ககிட்ட இதெல்லாம் தமிழ்நாட்டுல நடத்திட்டு இருக்குனு சொன்ன ஆச்சர்யப்படுவாங்க. அப்படியான சில விஷயங்களைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

* பத்து ரூபாய் காயின் செல்லாது

சென்னைவாசிகள் பல பேருக்கு ஷாக்கா இருக்கலாம். ஆனா இது சத்தியமான உண்மை. சென்னை தாண்டி பல இடங்கள்ல இன்னமும் பத்து ரூபா காயின் செல்லாதுனு நம்புறாங்க. கிராமங்கள் மட்டுமில்ல. சிட்டிகள்ல கூட இதுதான் நிலைமை.  கடைல போய் 10 ரூபா காயின் நீட்டுனா ‘தம்பி நான் வாங்கிடுவேன்.. என்கிட்ட யாரும் வாங்க மாட்டாங்க. அதனால நோட்டா கொடுங்க’ என்ற ரிப்ளையதான் நிறைய கேட்க முடியும். ஆனா சென்னைல 10 ரூபா காயின் சாதாரணம்.

* ஹோட்டல்ல சாப்பிட்டு நாமதான் இலை எடுக்கணும்

எஸ். இது மத்த ஊர்கள்ல ரொம்பவே சாதாரணம். ஹோட்டல்ல நாம சாப்பிட்ட இலைய நாமதான் எடுக்கணும். சென்னைல பெரும்பாலானா ஹோட்டல்ல நீங்களே விரும்பினாலும் உங்களை எடுக்க விடமாட்டாங்க. சில செல்ஃப் சர்வீஸ் ஹோட்டல்ல மட்டும் சென்னைலயும் இது நடைமுறைல இருக்கு. நாம சாப்பிட்ட இலையை நாமதானே எடுக்கணும்னு ஒரு க்ரூப்பும் காசு கொடுத்து சாப்பிடுறோம் அவங்களே எடுக்க மாட்டாங்களானு இன்னொரு க்ரூப்பும் அடிக்கடி சண்டை போடுவாங்க. நீங்க என்ன நினைக்குறீங்க. எது சரினு கமெண்ட்ல சொல்லுங்க.

* சீரகசம்பா பிரியாணி மட்டுமே

சென்னைல  தெருவுக்குத் தெரு 100 ரூபாய்க்கு ஒரு கிலோ பிரியாணி கிடைக்கும். எல்லாமே பாசுமதி ரைஸ் பிரியாணிதான். ஆனா ஊர் சைடு பாசுமதி பிரியாணிகள் ரொம்ப அபூர்வம். பெரும்பாலான கடைகள்ல சீரகசம்பா பிரியாணி மட்டும்தான். சொல்லப்போனா அங்கெல்லாம் பிரியாணினு சொன்னாலே சீரக சம்பா ரைஸ் மட்டும்தான்.

* ஹெல்மெட் தேவையில்லை

சென்னைல ஹெல்மெட் போடாமல் சுற்றினால் தெருவுக்கு தெரு போலீஸ் நிற்கும். மாட்டினால் 1000 ரூபாய் வரை அபராதம். பின்னால உட்கார்றவங்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம். மற்ற ட்ராஃபிக் விதிகள் எப்படியோ இதில் சென்னை கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்தான். ஆனால் இந்த சட்டம் ஊர்களில் இருக்கா இல்லையா என்று யாருக்குமே தெரியாது. கொரானோ காலத்தில் மாஸ்க்கே போடாமல் சுற்றியவர்கள் ஹெல்மெட்லாம்… அட போங்க பாஸ்.

* பஸ்ல லேடீஸ் சீட்டெல்லாம் கிடையாது.

சென்னையின் நகரப் பேருந்துகளில் ஒரு பக்கம் ஃபுல்லா லேடீஸ் சீட்தான். பஸ்ஸில் பெண்களே இல்லையென்றாலும் அந்த சீட்களில் ஆண்கள் உட்காரக்கூடாது என்று கண்டிப்பார்கள் கண்டக்டர்கள். ஊர்களிலும் ஆண்கள், பெண்கள் என்று பிரித்து பஸ்ஸில் எழுதியிருக்கும்னாலும் அதை யாரும் ஃபாலோ செய்வது கிடையாது. யார் வேணாலும் எங்கே வேணும்னாலும் உட்காரலாம்.

* பஸ்ல போகும்போது கோவில் வந்தா

பஸ்ல போறப்போ கோவில் வந்தா ஜன்னல் வழியா காசு தூக்கி போடுற நிறைய பேரை ஊர்கள்ல பார்க்கலாம். அதை கலெக்ட் பண்ணி கோவில் உண்டியல்ல போடுறதுக்குனே ஒருத்தர் இருப்பார். குறிப்பா tier 2 சிட்டில இருந்து tier 3 சிட்டிக்கோ கிராமங்களுக்கு போற பஸ் இந்த மாதிரி ஒரு கோவிலையாச்சும் கிராஸ் பண்ணி வரும். சென்னைவாசிகளுக்கு இது பெரிய சர்ப்ரைஸா இருக்கலாம்.

இதுபோல வேற என்னெல்லாம் வித்தியாசங்கள் இருக்குனு நீங்களும் சொல்லுங்க…

Also Read – ‘சசி, பரணி ரோலின் முதல் சாய்ஸ் இவர்கள்தான்’  – நாடோடிகளின் சுவரஸ்ய கதை இது!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top