குழந்தைகளின் மொபைல் அடிக்‌ஷனைக் குறைப்பது எப்படி – 4 டிப்ஸ்!

உங்களின் குழந்தை மொபைலுடன் அதிக நேரம் செலவிடுகிறதா… அவர்களின் மொபைல் அடிக்‌ஷனைக் குறைக்க 4 டிப்ஸ்.

மொபைல் அடிக்‌ஷன்

கொரோனா பெருந்தொற்று சூழல், கல்வி தொடங்கி வேலை வரை அனைத்தையும் ஆன்லைனை நோக்கித் தள்ளியிருக்கிறது. லாக்டவுன் போன்ற முன்னெப்போதும் பார்த்திராத நிலையில், குழந்தைகள் ஸ்மார்ட்போன், டிவி, கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவிட்டு வந்தனர். இன்றைய சூழலில் பெரும்பாலானோர் பெருந்தொற்று காலத்துக்கு முன்பிருந்ததைப் போல மாற முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், குழந்தைகளோ இன்றும் கேட்ஜெட்களிலேயே அதிக நேரத்தை செலவிட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.

மொபைல் அடிக்‌ஷன்
மொபைல் அடிக்‌ஷன்

உங்கள் குழந்தையின் கேட்ஜெட் அடிக்‌ஷனைக் குறைக்க 4 டிப்ஸ்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

இயற்கை மீதான ஈடுபாடு

ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட கேட்ஜெட்களில் இருந்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப இயற்கையை நேசிக்க ஊக்கப்படுத்துங்கள். விலங்குகள், மரங்கள், செடிகள் உள்ளிட்டவைகள் பற்றி இன்ட்ரஸ்டிங்கான தகவல்களை அவர்களுக்குச் சொல்வதோடு, அருகிலிருக்கும் பூங்கா, குளம் போன்றவற்றுக்கு அவர்களை குட்டி வாங்கிங் கூட்டிட்டு போய்ட்டு வாங்க..

புத்தகம் வாசிப்பு

ஆன்லைன் கிளாஸ்களின் காலத்தில் புத்தக வாசிப்பு என்பதையே குழந்தைகள் மறந்து போய்விடும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துங்கள். பள்ளி பாடப் புத்தகங்கள் என்றில்லாமல், குழந்தைகளுக்கு அவர்களுக்கு விருப்பமான கார்ட்டூன், காமிக்ஸ் உள்ளடக்கங்களைக் கொண்ட புத்தகங்களை வாசிக்கக் கொடுங்கள்.

குழந்தைகள்
குழந்தைகள்

வீட்டு வேலைகள்

வீட்டு வேலைகளைச் செய்யும்போது சின்ன சின்ன உதவிகளை அவர்களிடம் கேட்டுப் பெறுங்கள். துணிகளைக் காயவைப்பது, அறைகளை சுத்தம் செய்வது, சமையலின்போது பொருட்களை எடுத்துக் கொடுப்பது என அவர்களைக் கொஞ்சம் பிஸியாக்குங்கள். இந்த வேலைகளின்போது அவர்களுடன் விளையாடுவதை மறக்காமல் செய்யுங்கள். அவர்கள் செய்யும் வேலைகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பதையும் மறந்துவிட வேண்டாம்.

ஸ்மார்ட்போன் லாக்

குழந்தைகள், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க லாக் செட் செய்யுங்கள். தினசரி இவ்வளவு நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற நேரக்கட்டுப்பாட்டையும் அமல்படுத்துங்கள்.

குறிப்பு: இந்த டிப்ஸ்கள் எல்லாம் பொதுவான வழிகாட்டுதல்களுடனே கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் குழந்தைகளை கேட்ஜெட் அடிக்‌ஷனில் இருந்து மீட்டெடுக்க எக்ஸ்பர்ட்களின் உதவியை நாடுவது சிறந்தது.

Also Read –

சம்மரில் ஏசி கரண்ட் பில்லைக் குறைப்பது எப்படி… 5 எளிய வழிகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top