80’ஸ் கிட்ஸுக்கு திருவிழா நிகழ்ச்சிகள் மூலமா அறிமுகமாகி 90’ஸ் கிட்ஸுக்கு டிவி மூலமா பிரமலமாகி இப்போ 2கே கிட்ஸுக்கு யூடியூப் மூலமா ஃபேமஸா இருக்கிற ஒருத்தர்தான் சுட்டி அரவிந்த். இந்த மூன்று ப்ளாட்பார்ம் ஆடியன்ஸையும் ஒரே ஆளா திருப்தி படுத்துறதுங்கிற அவ்ளோ ஈசியான காரியம் இல்லைங்க. அதை சுட்டி அரவிந்த் எப்படியெல்லாம் பண்ணியிருக்கார்; அதுக்காக என்னென்ன சிரமங்கள் பட்டிருக்கார்னுதான் இந்த வீடியோவில் பார்க்கப்போறோம்.
சுட்டி அரவிந்தோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே கேரளா. அவரும் அங்கதான் பிறந்தார். 4 ஆம் வகுப்பு வரைக்கும் கேரளாவில் இருந்தவர், அதுக்கப்பறம் மதுரைக்கு குடி போறாங்க. இங்கதான் சுட்டி அரவிந்தோட கலை பயணம் ஆரம்பமாகுதுனு சொல்லலாம். சின்ன வயசுல இருந்தே ஸ்டேஜ் ஏறி மக்களை எண்டர்டெயின் பண்றதுதான் இவரோட ஆசையே. அதை பள்ளிகளில் படிக்கும் போதே பண்ண ஆரம்பிச்ச சுட்டி அரவிந்த், 1999-ல பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் அவர்கள் நடத்திய வந்த ஹியூமர் க்ளப்ல சேர்ந்தார். அங்கதான் ரோபோ சங்கர், ராமர், மதுரை முத்துனு எல்லாரும் ஒன் பயணிக்க ஆரம்பிச்சாங்க. ‘தி எவர்க்ரீன் காம்போ’வான ரோபோ சங்கர் – சுட்டி அரவிந்த் அங்கதான் உருவாச்சு.
அந்த காம்போ பற்றி சொல்லணும்னா கோவில் திருவிழாக்களில் ஆரம்பிச்சு அமெரிக்கா வரைக்கும் போய் ஷோ பண்ணுன ஹிட் காம்போ. இந்த காம்போவுக்கான தொடக்கப்புள்ளி எதுனு பார்த்தா, ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட சமயம் அந்த சீசன் முடிஞ்சதும் 2006ல கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்னு ஒன்னு ஆரம்பிச்சாங்க. அதுல ஜோடியாக சேர்ந்துதான் கலந்துக்கணும்னு சொன்னப்போ, மதுரை ஸ்டேஜ் ஷோ பண்ணிட்டு இருந்த தன் நண்பர் அரவிந்தை ரோபோ சங்கர் கூப்பிட்டார். எந்த மாதிரி பண்ணலாம்னு யோசிக்கும் போதுதான் நடிகர்கள் மாதிரி பண்ணாமல் நான் ஒரு குட்டி பையன் மாதிரி பேசுறேன். நீ என்னை எப்படியெல்லாம் சமாளிக்கிறனு பண்ணலாம்னு ஸ்டார்ட் பண்ணுனதுதான் இந்த காம்போவோட தொடக்கம். இதுல இருந்துதான் சுட்டி அரவிந்த்னு பெயரும் வந்துச்சு. இந்த காம்போவில் வந்த ஒரு கிளி உருகுது பாடலை கேட்டால் பலருக்கும் இவங்க பண்ணுன ஆக்ட்தான் ஞாபகம் வரும். அதுமட்டுமில்லாமல் மதுரையில் லோக்கல் சேனல்களில் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வி.ஜேவா நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியிருக்காங்க. அந்தளவுக்கு ஃபேமஸா இருந்த ஜோடி எப்போ இனிமேல் சேர்ந்து பண்ண வேணாம்னு முடிவு பண்ணுனாங்கன்னா, இவங்க ரெண்டு பேரும் வந்தா இதைத்தான் பண்ணுவாங்கனு ஆடியன்ஸ் எப்போ கணிக்க ஆரம்பிச்சாங்களோ அப்போ இந்த காம்போவை ஸ்டாப் பண்ணிட்டாங்க.
இந்த காம்போ மூலமா ஸ்டேஜ் நிகழ்ச்சிகளில் இருந்து தொலைக்காட்சியில் வர ஆரம்பிச்ச சுட்டி அரவிந்த் தொடர்ந்து டிவி சேனல்களிலேயே பயணிக்க ஆரம்பிச்சார். விஜய் டிவி, சன் டிவி, கலைஞர் டிவி என இவர் நிகழ்ச்சி செய்யாத டிவி சேனல்களே இல்லை என்கிற அளவுக்கு பல நிகழ்ச்சிகள் பண்ணினார். 2008ல கலைஞர் டிவியில் இவர் பண்ணுன எல்லாமே சிரிப்புதான் நிகழ்ச்சிக்கு கலைஞர் கருணாநிதியே பயங்கரமான ஃபேனாம். நிகழ்ச்சி பார்த்துட்டு சுட்டி அரவிந்தை நேரில் அழைச்சு பாராட்டினாராம் கலைஞர். இப்படி டிவியில் அவர் பல நிகழ்ச்சிகள் பண்ணிட்டு இருந்த சமயம்தான், யூடியூப் வளர ஆரம்பிச்சது. அந்த பாதைக்கு இவரை அழைச்சிட்டு போனது யாருனா ஆர்.ஜே.விக்னேஷ்காந்த்தான். விக்னேஷ்காந்த் ஒரு ரேடியோ ஜாக்கியா இருந்தப்போ சுட்டி அரவிந்தை பேட்டி எடுத்திருக்கிறார். அரை மணி நேர பேட்டி 2 மணி நேர உரையாடலாக மாறி இவங்களுக்குள்ள ஒரு நல்ல பாண்டிங்யும் வந்திடுச்சு. இவங்க சேர்ந்து ஸ்டுடியோ, வெப் ரேடியோனு பல விஷயங்கள் ட்ரையல் அண்ட் எரர்ரா முயற்சி பண்ணிட்டுத்தான் இப்போ ப்ளாக் ஷிப்பா மாறியிருக்காங்க.
சுட்டி அரவிந்துக்கு சின்ன வயசில் இருந்தே இன்னொரு விஷயத்து மேலேயும் பயங்கர ஆர்வம் இருந்துச்சு. அதுதான் இசை. அதையும் விட்டுடாம சின்ன வயசில் இருந்தே கத்துக்கிட்டு வந்திருக்கிறார். கிளாசிக்கல் டான்ஸராக, பாடகராக, இசைகருவிகள் வாசிப்பவராக என அதிலும் தன்னுடைய திறமைகளை வளர்ந்துக்கொண்டே போகிறார். அதேப்போல் இவர் டிவியில் செய்த நிகழ்ச்சிகளைப் பார்த்துட்டு இயக்குநர் விக்ரமன் இவருக்கு சென்னை காதல் படத்தில் அறிமுகம் செய்தார். அதன் பிறகு கரு.பழனியப்பன் இயக்கிய ஜன்னல் ஓரம், வைகை எக்ஸ்பிரஸ்னு சில படங்கள் பண்ணினார். ஆனால், அவருக்கு சரியான ரோல்கள் சினிமாவில் கிடைக்கலை என்றுதான் சொல்லணும். ஏன்னா, அவர் நடித்து யூடியூப் இருக்கும் மெமரீஸ், தனி ஒருவன் சீரிஸ், மறுபிறவி எம்ஜிஆர், வெஜ் கட்லட்னு நிறைய வீடியோக்களைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும் அவர் எப்படிப்பட்ட நடிகர்னு. அந்தளவுக்கு அவரது காமெடி முகத்தில் இருந்து ரொம்பவே வித்தியாசமானது அவரது நடிகர் முகம்.
Also Read – `நாமம் போட்டா நல்லவரா?’… `கோமாளி’ பிரதீப் ரங்கநாதன் ரோஸ்ட்!
சரி, இதுவரைக்கும் சுட்டி அரவிந்த் எப்படி வந்தார்; என்ன செய்தார்னு பார்த்தோம். இப்போ அவர் இருக்குற இடம் அவருக்கானதானு கேட்டா கண்டிப்பா இல்லைனுதான் சொல்லணும். ஏன்னா, இவரோடு சேர்ந்து நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பிச்ச சிலர் டிவியிலும், சிலர் சினிமாவிலும் இப்போ பிரபலங்களாய் இருக்காங்க. அவங்களுக்குனு ஒரு ரசிகர் பட்டாளம் இருக்காங்க. ஆனா, இவருக்கு அப்படியில்லை. மனுஷன் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக தனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடிட்டு இருக்கார். இப்போக்கூட பார்த்தீங்கன்னா இந்த வயசிலும் ராஜூ வூட்டுல பார்ட்டில பாட்டி மாதிரி கெட்டப் போட்டு நடிச்சிட்டு இருக்கார். ஆனால், இது அவருக்கு பெரிய குறையாக இருக்குமானு கேட்டால் கண்டிப்பா இருக்காதுனுதான் சொல்லணும். ஏன்னா, அவரோட ஆசை மக்களை மகிழ்விக்கணும்னு; அதை அவர் தொடர்ந்து பண்ணிட்டுதான் இருக்கார்னு அதுல அவர் மகிழ்ச்சியாகத்தான் இருக்கார்.