10 வயதில் முதன்முதலில் ஒரு யானையைக் கொன்றவர், தன் வாழ்நாளில் 200 யானைகளுக்கும் மேல் கொன்றிருக்கிறார்.
17 வயதில் முதல் கொலை
15 கொலை வழக்குகள்
184 கடத்தல் வழக்குகள்
20 ஆண்டுகால தேடுதல் வேட்டை
யார் இந்த வீரப்பன்?
மூன்று மாநில காவல் துறைக்கு அவன் சிம்ம சொப்பனமானது எப்படி?
பிடிக்கவே முடியாமல் காட்டுக்குள் மறைந்து வாழ்ந்த வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? விவரிக்கிறது CODE RED சம்பவங்கள்!
கர்நாடக மாநில எல்லையான கோபிநத்தம் கிராமத்தில் 1952-பிறந்த வீரப்பன், மலையூர் மம்பட்டியானின் கொள்ளை சம்பவங்களைக் கதைகளாகக் கேட்டு வளர்ந்தார்.
Also Read – தி.மு.க நண்பன் சீமான் தம்பிகளின் தலைவன் ஆனது எப்படி?! #MrThalaivar #TNNYoutube
சிறுவயது முதலே துப்பாக்கிகள் சூழ வாழ்ந்து வந்த வீரப்பன், குறிதவறாமல் சுடுவதில் வல்லவராக இருந்திருக்கிறார். குரங்குகள் மரத்துக்கு மரம் தாவும் குறுகிய இடைவெளியில் அவற்றை சுட்டு வீழ்த்திவிடுவாராம் வீரப்பன். இதனால், எப்போதுமே துப்பாக்கிகள் என்றால் அவருக்கு அலாதி பிரியம் என்கிறார்கள். அவர் மீது பதியப்பட்ட முதல் வழக்கு, காட்டுப்பன்றி ஒன்றை வேட்டையாடிதாகத்தான் பதிவு செய்திருக்கிறார்கள். இதற்காக அவரைத் தேடி வனத்துறை அதிகாரி ஒருவர் கிராமத்துக்குச் சென்றபோது, அப்போது சிறுவனாக இருந்த வீரப்பன் காடுகளுக்குள் ஓடி ஒளிந்திருக்கிறார். அதன்பிறகு தனது இறுதிநாள் வரையில் காடுகளுக்குள்ளேயே கழித்தார். அந்த காலகட்டத்தில் கடத்தல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த செவ்விக் கவுண்டரின் கேங்கில் இணைந்த வீரப்பன், குறுகிய காலத்திலேயே அதன் முக்கியமான உறுப்பினரானார். பழங்குடியின கிராமங்களில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னைகளை பஞ்சாயத்து செய்து தீர்த்து வந்த வீரப்பனின் பெயர் மெல்ல அந்த கிராம மக்களிடையே பரவியது.
வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றையும் அவரை என்கவுண்டர் செய்தபோது நடந்தது என்ன என்பதையும் தெரிந்துகொள்ள கீழே இருக்கும் Code Red Sambavangal எபிசோடை முழுமையாகப் பார்க்கவும்..!