கோவை-க்கு எவன் செய்வினை வைச்சான்னு தெரியலை. குண்டு வைக்கிறாங்க, கொலை பண்றாங்க, கட்டப் பஞ்சாயத்து பண்றாங்க, வடமாநில தொழிலாளர்கள் போட்டு பொளக்குறானுங்க. இதெல்லாம்கூட பரவால்ல, குருவி சுடுற துப்பாக்கிலாம் வைச்சு பணம் பறிக்கிறாங்க. கடந்த சில நாள்கள்ல மட்டும் கோவைல எவ்வளவு சம்பவங்கள் நடந்துருக்கு தெரியுமா?
சிக்கனுக்கு சண்டையா?

ஒரு வீடியோல கும்பலா சில பேர் உருட்டுக்கட்டையோட யாரையோ அடிக்க போய்கிட்ருந்தாங்க. ஆ.. ஊனா மஞ்சக்கலர் கொடியை தூக்கிட்டு கிளம்பிருவாங்கன்ற மாதிரி, வெளிமாநிலத்துல எங்கயோதான் சம்பவம் நடந்துருக்குனு பார்த்தா, நம்ம கோயம்புத்தூர்ல. ஏனுங்க, பஞ்சாயத்துக்கு பஞ்சமே இல்லாத ஊரால இருக்கு? சரி, என்னடா பிரச்னைனு தேடி பார்த்தா..கோவைல சூலூர் பகுதில தனியார் கல்லூரி ஒண்ணு இருக்கு. இந்த காலேஜ்ல உள்ள கேண்டின்ல 15 வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்க்குறாங்க. அங்க தினமும் கிட்டதட்ட 700 மாணவர்கள் சாப்பிடுறாங்க. சிக்கன் போடுற அன்னைக்குதான், அந்த சண்டைலாம் நடந்துருக்கு. கேண்டீன்ல சாப்பிடும்போது மாணவர்கள் சிக்கன் கேட்டதாகவும் மொழி புரியாமல் இதனால் மாணவர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டதாகவும் கல்லூரி தரப்பில் விளக்கம் அளித்ததாக செய்திகள் வெளியாகியிருக்கு. கைகலப்புல ரெண்டு பக்கமும் கொஞ்சமா காயமடைந்ததா சொல்றாங்க. ஆனால், வீடியோல பெஞ்ச் மேலலாம் ஏறி போனதைப் பார்த்தா.. சரி, அதை விடுங்க. புறாவுக்குப் போரான்ற மாதிரி, சிக்கனுக்குலாம் சண்டையாடா?
கோர்ட்லயே கொலையா?

ஜிகர்தண்டா படத்துல பார்த்தது. அதன் பிறகு சோஷியல் மீடியால டிரெண்டான வீடியோலதான் கோர்ட் கொலை சம்பவத்தை கேள்விபட்டேன். 2021-ல நடந்த கொலை சம்பவம் தொடர்பா ரெண்டு பேர், கோவை நீதிமன்றத்துக்கு வந்துருக்காங்க. கையெழுத்துலாம் போட்டுட்டு நீதிமன்றம் பக்கத்துல உள்ள டீக்கடைக்கு போய்ருக்காங்க. அவங்களை வழிமறிச்சு ஒரு கும்பல் பயங்கரமா தாக்கியிருக்காங்க. அந்த வீடியோ சமூக வலைதளங்கள்ல பயங்கரமா பகிரப்பட்டுச்சு. அரிவாள்லாம் வைச்சு வெட்டுனதுல, ரெண்டு பேர்ல ஒருத்தர் இறந்துருக்காரு. கொலை சம்பவத்துல ஈடுபட்டவங்களை புடிக்க காவலர்கள் தனிப்படைலாம் அமைச்சு தேடிட்டு இருந்துருக்காங்க. செல்ஃபோன் சிக்னல், தகவல்லாம் வைச்சு கோத்தகிரில இந்த கும்பலை புடிச்சு கைது பண்ணியிருக்காங்க. அதுல ரெண்டு பேர் அதிகாரிகளை தாக்கிட்டு தப்பிச்சு போக பார்த்துருக்காங்க. அவங்களை துப்பாக்கியால சுட்டு காவலர்கள் புடிச்சிருக்காங்க. இதெல்லாம் கேட்கும் போது நெஞ்சு பக் பக்னுதான் இருக்கு.
பா.ஜ.க – தி.மு.க சண்டை!

கொண்டையம்பாளையம்ல 9வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமிகார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை போட்ருக்காங்க. தி.மு.க கவுன்சிலர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்துல, இந்த சாலை சரியில்லைனு அதிகளவில் புகார் எழுந்ததும், இதுதொடர்பாக காரசாரமான விவாதம் நடந்துருக்கு. வாக்குவாதம் முத்திப்போய், கவுன்சிலர் கேள்வி கேட்டவர்களை தாக்கியதாக வீடியோ ஒண்ணு சோஷியல் மீடியால வைரல் ஆகிட்டு இருக்கு. அதுல காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துட்டு இருக்காங்கனும் செய்திகள் வெளியாச்சு. இந்த சம்பவம் தொடர்பா காவல்துறையிடம் புகாரும் அளிக்கப்பட்டுச்சு. அதுல, கவுன்சிலர் தகாத வார்த்தைகளால திட்டுனாரு, செருப்பால அடிச்சாரு, கொலை மிரட்டல் விட்டாருனுலாம் சொல்லியிருக்காங்க. இதுக்கு கவுன்சிலர், “நடந்தது தெரியாமல் பா.ஜ.ககாரங்க வீடியோவை வைரலா பரப்பிட்டு இருக்காங்க. கூட்டத்துக்கு பா.ஜ.கவை சேர்ந்த பெண் ஒருத்தங்க வந்து சாலை தொடர்பாக கேள்வி எழுப்புனாங்க. அவங்களுக்கும் அந்த வார்டுக்கும் சம்பந்தமில்லை. அப்போ, பெண்கள் மத்தியில சண்டை நடந்துச்சு. அவங்க உடனே, பா.ஜ.ககாரங்களை ஃபோன் பண்ணி கூப்பிட்டாங்க. அவங்க பிரச்னை பண்ணாங்க. அந்த வீடியோ வெளிய வரலை. என் பெயரை களங்கப்படுத்ததான் இப்படி பண்றாங்க. சுயமரியாதையை தொடும்போது விளைவுகளை சந்திச்சுதான் ஆகணும்”னு சொல்லியிருக்காரு.
ஸ்டேன்ட்-அப் காமெடி

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டானு எங்க போனாலும் கோயம்புத்தூர்தான் டிரெண்டிங்க்ல இருக்கு. அதுக்கு அங்க நடக்குற இந்த சம்பவங்கள் முக்கியமான காரணமா இருந்தாலும், ஃபயாஸ் ஹுஸைனோட ஸ்டாண்டப் காமெடியும் முக்கியமான காரணம். கோயம்புத்தூரை நார்த் இந்தியானு சொன்னதுல தொடங்கி ஹிப்ஹாப் தமிழா, டிடிஎஃப் வாசன், நுங்கு டாக்டரை தத்தினு சொன்னது வரைக்கு, அவ்வளவு வன்மத்தை 5 நிமிஷத்துல கக்கிட்டு போய்ட்டாரு. அதை ஷேர் பண்ண நிறைய பேர், ஏன்டா கோவையன்ஸ் மேல் மத்த ஊர்காரங்களுக்குதான் அவ்வளவு வன்மம்னு நினைச்சா, சொந்த ஊர் காரங்களே இவ்வளவு வன்மத்தோட சுத்திட்டு இருக்கீங்கனு போஸ்ட் போடுறாங்க. உண்மைலயே கோவை மக்களை யோசிச்சுப் பார்த்தா கொஞ்சம் பாவமாதான் இருக்கு. ஏன்னா, எவன் எவனோ பண்றதுக்குலாம் மொத்தமா அடி வாங்குறாங்க.
கோவை மக்களோட உணவு, பழக்கவழக்கம், குசும்பு, பேச்சுனு நிறைய விஷயங்களை ஃபீல்குட்டான வீடியோவா, வித் அவுட் வன்மத்தோட நாம பதிவு பண்ணிருக்கோம். அதையும் நீங்க நம்ம சேனல்ல பார்க்கலாம்.
கண்ணகி பாவம்டா!
கோயம்புத்தூர் மேம்பாலங்கள்ல உள்ள தூண்களை அழகா காமிக்க வண்ணமயமான ஓவியங்கள்லாம் வரைஞ்சுட்டு இருக்காங்க. காந்திபுரம் பகுதியில கலை, இலக்கியம் தொடர்பான ஓவியங்களை அதிகமா வரைஞ்சுட்டு இருக்காங்க. அதுல ஐம்பெருங்காப்பியங்களின் ஓவியங்களும் இருக்கு. இதுல கண்ணகி ஓவியமும் வரையப்பட்ருந்தது. அதை திடீர்னு சிலர், கருப்பை மையை ஊத்தி அழிச்சாங்க. அவங்களை காவல்துறையினர் கைது பண்ணி விசாரணை நடத்தியிருக்காங்க. விசாரணைல, சிலப்பதிகாரத்துல கோவலன் இறந்ததுக்கு பொற்கொல்லர்கள்தான் காரணம்னும் அவர்களை தவறாக சித்தரித்து ஓவியம் வரைஞ்சதாகவும் விஷ்வஜனா கட்சியைச் சேர்ந்தவங்க கண்டனம் தெரிவிச்சாங்க. அந்தக் கட்சியோட நிறுவனர் வேல்முருகன்தான் இதை பண்ணியிருக்காரு. நல்லவேளை, இளங்கோ அடிகள் உயிடோடவே இல்லை. இருந்துருந்தா.. இவனுங்களுக்கு விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு, அவதூறு வழக்கை சந்திச்சு, ஏன்டா, சிலப்பதிகாரம் எழுதுனோம்ன்ற அளவுக்கு ஃபீல் பண்ணியிருப்பாரு.
கட்டப்பஞ்சாயத்தையும் விடல!
எல்லா ஊர்லயும் இருக்குறதுதான்னு இந்த கட்டப்பஞ்சாயத்தை கடந்து போகவும் முடியாது இல்லையா? மதுரை சேர்ந்த ஒருத்தர் கோவைல சில நாள்கள் முன்னாடி கொலை செய்யப்பட்ருக்காரு. அதுதொடர்பா நடந்த விசாரணைல கோவையைச் சேர்ந்த ரவுடி மற்றும் அவரோட ஃப்ரெண்ட்ஸுக்கு தொடர்பு இருப்பதை கண்டு பிடிச்சிருக்காங்க. எதுக்கு கொலை பண்ணாங்கன்றதுதான் பயங்கரமான விஷயம். வடகோவைல திரையரங்க உரிமையாளர் ஒருத்தருக்கும் இன்னொருத்தருக்கும் தகறாரு இருந்துருக்கு. ரெண்டு பேரும் எதிர் எதிர் தரப்புல நின்றுக்காங்க. இந்த விவகாரத்துல நிறைய பணம் கிடைக்கும்ன்றதால, யாரு பக்கம் முடிச்சுக் கொடுக்குறதுனு ரெண்டு பேருக்கும் சண்டை வந்துருக்கு. அதேமாதிரி, நவ இந்தியா பகுதியில கல்லூரி மாணவர்களுக்கு இடையில கோஷ்டி மோதல் இருந்துருக்கு. அதுலயும் ரெண்டு பேரும் ஒவ்வொரு தரப்புக்கும் சப்போர்ட் பண்ணியிருக்காங்க. இதனால, யார் பெரியருன்ற போட்டி ரெண்டு பேருக்கும் இடையில நீண்ட காலமா இருந்துருக்கு. இதுதான் காரணமா இருக்கும்னு காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிச்சிருக்காங்க. இந்த பஞ்சாயத்துல துப்பாக்கிலாம் பயன்படுத்தியிருக்காங்க.
Also Read – `பொன்விழா நாயகி’ ரோகினி… தமிழ் சினிமாவின் Underrated ஹீரோயினா?
புதுசா இருக்குணே!
கோவைல லங்கா கார்னர் பகுதில சந்தேகப்படும்படி மூணு பேர் நின்னுட்டு இருந்துருக்காங்க. அந்த பக்கம் போனா ரோந்து அதிகாரிகள் அவங்களை கூப்பிட்டு விசாரிச்சுருக்காங்க. மூணு பேரும் ஒவ்வொரு பதிலை சொல்லிருக்காங்க. அப்போ, அவங்கக்கிட்ட இருந்த பொருள்களை பரிசோதனை செய்ததுல, குருவியை சுடும் துப்பாக்கியை பார்த்து அதிர்ச்சியடைஞ்சுருக்காங்க. காவல் நிலையத்துக்கு கூட்டிட்டுப் போய் விசாரணை பண்ணதுல, கூலி வேலைக்கு போறதாகவும் மற்ற நேரங்கள்ல குருவி சுடப்போறதாகவும் சொல்லியிருக்காங்க. அந்த துப்பாக்கியை வைச்சு வழிப்பறி பண்ணலாம்னு பிளான் பண்ணும்போது கண்டுபிடிச்சு தூக்கியிருக்காங்க. மைண்ட் வாய்ஸ கேட்ச் புடிச்சு கைது பண்ற அளவுக்கு நம்ம போலீஸ் பிரில்லியண்ட், இவங்க இது தெரியாமல் குருவி சுடுறேன், காக்கா சுடுறேன்னு சுத்துறாங்க.
நான் மேல சொன்ன விஷயங்கள் எல்லாமே கடந்த சில நாள்கள்ல நடந்தது. இன்னும் ஆதிகாலத்தை தோண்டிலாம் பார்த்தா எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. அதெல்லாம் சொல்ல, ஒரு வீடியோ பத்தாது. சரி, கோயம்பத்தூர்ல இப்படியான சம்பவங்கள்லாம் நடக்குறதைப் பார்த்தா, என்ன தோணுது? கமெண்ட்ல சொல்லுங்க.
I really like looking through an article that can make people think.
Also, thank you for permitting me to comment!!
Hello! Do you know if they make any plugins to assist with SEO?
I’m trying to get my site to rank for some targeted keywords
but I’m not seeing very good gains. If you know of any please share.
Cheers! I saw similar article here: Blankets