150 நாட்கள்; 3,500 கி.மீ தூரம் – ராகுல் காந்தியின் #BharatJodoYatra!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 150 நாட்களில் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை 3500 கி.மீ தூரம் பயணிக்கும் Bharat Jodo Yatra என்கிற இந்திய ஒற்றுமை நடைபயணத்தைத் தொடங்கியிருக்கிறார். கன்னியாகுமாரி காந்தி மண்டபத்தில் இருந்து தொடங்கும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தியோடு பயணிப்பவர்கள் யாரெல்லாம்… பாத யாத்திரையின் நோக்கம் என்ன… எந்த வழியாகப் பயணிக்கப் போகிறார்கள் என அந்த பாத யாத்திரை பற்றிதான் தெரிஞ்சுக்கப் போறோம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஒற்றுமை நடைபயணம்

ராகுல்காந்தி தலைமையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த மே மாதத்தில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ’பாரத் ஜோடா யாத்திரை’ என்ற அமைப்பின் பெயரில் 3,500 கி.மீ தொலைவில் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டியே இந்த இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

யாத்திரையின் நோக்கம்

இந்த ஒற்றுமை நடைப்பயணத்தின் முக்கிய நோக்கமே இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதாகும். பொதுவாக ஒரு கட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் யாத்திரை போன்ற நிகழ்வுகள் அந்த கட்சியின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கானதாக இருக்கும். ஆனால், இந்த யாத்திரை 5,000 ஆண்டுகளாய் இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சரிக்கட்டுவதற்காக தொடங்கப்பட்ட யாத்திரை என்கிறது காங்கிரஸ் கட்சி. ‘ராகுல்காந்தியின் இந்த யாத்திரை, புரட்சிகரம் வாய்ந்த இந்த சமூகத்தில் மேன்மையான புதிய மாற்றத்தை கொண்டுவரும்’ என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி.

ராகுல் காந்தி - ஸ்டாலின்
ராகுல் காந்தி – ஸ்டாலின்

யாத்திரையின் தொடக்கம்!

ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைபயணத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமாரி காந்தி மண்டப்பத்தில் தொடங்கி வைத்தார். ராகுல் காந்தி தலைமையிலான இந்த யாத்திரை கன்னியாகுமாரியில் இருந்து 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீரில் முடிவடையும்.

யாத்திரையில் யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உட்பட சுமார் 300 பேர் பயணிக்க இருக்கிறார்கள். யாத்திரையில் பங்கேற்க பொதுமக்களுக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 27-58 வயதிற்குட்பட்டவர்கள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 118 பேர் யாத்திரைக்கு தேர்வுசெய்யப்பட்டனர். அதில் காயத்ரிராஜ் முரளி, முகம்மது ஆரிப், வக்கீல் சுதா உட்பட தலா 100 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

கேரவன்கள்

கன்னியாகுமாரியில் இருந்து காஷ்மீர் வரை நடக்கும் நடைப்பயணத்தில் ராகுல்காந்தியுடன் இணைந்து பல அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களும் கலந்துக்கொள்ளவிருக்கிறார்கள். அவர்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் போது தங்கி ஓய்வெடுப்பதற்காக நவீன சிறப்பு அம்சங்கள் பொருந்திய 60 சிறப்பு கேரவன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த 60 கேரவன்களும் கன்னியாகுமாரிக்கு கொண்டுவரப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கேரவன்கள், படுக்கை அறை, கழிவறை, குளியல் அறை, சமையல் அறை உள்பட பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

எங்கெல்லாம் செல்கிறது?

கன்னியாகுமாரியில் இருந்து தொடங்கி 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களையும் கடந்து நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். கன்னியாகுமாரியில் தொடங்கி, திருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூர், பெல்லாரி, ராய்ச்சூர், விகாராபாத், நான்டேட், ஜல்கான், ஜமோத், இந்தூர், கோட்டா, தவுசா, அல்வார், புலந்த்சாஹர், டெல்லி, அம்பாலா, பதான்கோட், ஜம்மு, ஸ்ரீநகர், வழியாக காஷ்மீரை சென்றடைகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top