டிகாக் - தோனி

MS Dhoni- De kock: தோனி வழியைத் தேர்வு செய்த டிகாக்… 2014 – 2021 டிசம்பர் 30 ஒற்றுமை!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவிண்டன் டிகாக். இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாகக் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதிதான் அறிவித்தார். இந்த இரண்டு சம்பவங்கள் இடையே உள்ள ஒற்றுமைக என்ன தெரியுமா?

2014 ஆஸ்திரேலிய தொடர்

2014-ம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டுக்குப் பிறகு திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அப்போதைய இந்திய அணியின் கேப்டன் தோனி. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டி டிராவான நிலையில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்திருந்தது. தொடரின் பாதியில் ஓய்வு பெறப்போவதாக தோனி அறிவித்தது ரசிகர்களுக்கு மட்டுமின்றி சக வீரர்களுக்குமே அதிர்ச்சியையே அளித்தது.

தோனி
தோனி

2014 பாக்ஸிங் டே டெஸ்டுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற நினைக்கும் தோனியின் எண்ணத்தை பிசிசிஐ அறிக்கை சொன்னது. போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் தனது ஓய்வு குறித்து தோனி எந்தவொரு கருத்தையுமே தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பிசிசிஐ-க்கு முன்னரே தோனி தகவல் தெரிவித்து விட்டதாகவும், சக வீரர்கள் மத்தியில் இந்தத் தகவலை அவர் பகிர்ந்திருந்ததாகவும் தகவல் வெளியானது.

Also Read:

Cricket Controversies: கோலி, டிம்பெய்ன், ஐபிஎல் – 2021-ல் கிரிக்கெட் உலகை அதிரவைத்த 5 சர்ச்சைகள்!

அதன்பின்னர், தோனியின் ஓய்வு முடிவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிசிசிஐ, சிட்னி டெஸ்டில் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவித்திருந்தது. `இந்திய அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டன்களுள் ஒருவரான தோனி தலைமையில்தான் இந்திய அணி நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தைப் பெற்றது. எல்லாவிதமான போட்டிகளிலும் விளையாடிவரும் அவர், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக எடுத்திருக்கும் முடிவை மதிக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்’ என்று பிசிசிஐ அந்த அறிக்கையில் கூறியிருந்தது.

டிகாக்
டிகாக்

2021 இந்தியத் தொடர்

2021-ல் இந்திய அணிக்கெதிரான முதல் போட்டி முடிவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லியிருக்கிறார் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் டிகாக். தோனியைப் போலவே பாக்ஸிங் டே டெஸ்டுக்குப் பிறகு தொடரின் மத்தியிலேயே இந்த முடிவை அவர் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், 2014 தோனியின் ஓய்வைப் போலவே பாக்ஸிங் டெஸ்டின் கடைசி நாளில் இதுபற்றி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வாயிலாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தோனி ஓய்வுபெற்ற 2014-ல் தொடங்கியது டிகாக்கின் டெஸ்ட் பயணம். அந்த ஆண்டில் நடந்த ஆஸ்திரேலியத் தொடரில் அறிமுகமான டிகாக், இதுவரை 54 போட்டிகளில் 3,300 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில்,6 சதங்களும் 22 அரைசதங்களும் அடங்கும். தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை 3,300 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் மார்க் பவுச்சர் மட்டும் டிகாக் என இரண்டு பேர் மட்டுமே. தோனி ஓய்வைப் போலவே டிகாக்கின் ஓய்வு குறித்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க டிகாக் விரும்புவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: `வொயிட் பால் கிரிக்கெட்டில் முடிவுக்கு வந்த சகாப்தம்’ – ஒருநாள் போட்டிகளில் கேப்டன் கோலியின் ரெக்கார்ட்ஸ் எப்படி?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top