இந்தியாவை உலுக்கிய சீரியல் கில்லர்களில் ஒருவர், சந்திரகாந்த் ஜா. டெல்லி காவல்துறையை அதிர வைத்த இந்த வழக்கு தொடர்பான ஆவணப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸில் ‘Indian Predator: The Butcher of Delhi’ என்ற பெயரில் வெளியாகி பரவலாக கவனத்தைப் பெற்று வருகிறது. சமீபத்தில் தமிழில் வெளியான விலங்கு வெப் சீரிஸில் இடம்பெற்ற கிச்சா என்ற கேரக்டருடனும் இந்த சந்திரகாந்த் ஷாவை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். யார் இந்த சந்திரகாந்த் ஷா? போலீஸ்க்கு இவர் எழுதிய மிரட்டல் கடிதங்களில் இடம்பெற்றவை என்ன? ஏன் கிச்சாவுடன் இவரை ஒப்பிடுகின்றனர்? இந்த ஆவணப்படம் ஏன் நம் ரத்தத்தை உறைய வைக்கிறது? இந்தக் கட்டுரையில் இவையெல்லாம் பற்றிதான் பார்க்கப்போகிறோம்.
பீகாரைச் சேர்ந்தவர்தான் இந்த சந்திரகாந்த். அவங்க அம்மா டீச்சர். அப்பா கால்வாய் துறைல வேலை பார்த்துருக்காரு. டெல்லிக்கு பிழைப்பு தேடி புலம்பெயர்ந்து வந்த மக்களில் இவரும் ஒருவர். சின்ன வயதில் இருந்தே மிகவும் புத்திசாலியான ஒருவராக இருந்ததாக அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். இவரோட சேர்த்து 6 பேர் உடன் பிறந்தவர்கள். எல்லாருமே நல்ல ஹைட்டா, துணிட்டல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். இவர் மீது பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்ளாமல் அப்பாம்மா இருந்துள்ளனர். கிராமத்தினர் மீதும் ஒருவிதமான வெறுப்பு இவருக்கு இருந்துள்ளது. இதனால், சொந்த கிராமத்தைவிட்டு டெல்லி சந்திரகாந்த் வந்துள்ளார். ஏரத்தாள 1990-களில் சந்திரகாந்த் டெல்லிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. டெல்லிக்கு வந்ததும் தனது ஊர்காரர்களுடன் இணைந்து காய்கறி மூட்டை தூக்கும் வேலை உட்பட பல வேலைகளை செய்துள்ளார். ஆரம்பத்தில் சின்ன சின்ன தொந்தரவுகளை காவலர்கள் அவருக்கு கொடுத்ததாக சந்திரகாந்த் கைதான பிறகு காவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால், அவர்கள் மீது வெறுப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்துள்ளது எனலாம்.
சந்திரகாந்துக்கு எதிராக காவல்நிலையத்தில் முதலில் பொய்யாக ஒரு வழக்கு போடப்பட்டதாகவும் அந்த புகாரை அவரது முதலாளி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்னைக்குப் பின்னர் அதாவது 1998-ல் அவரது முதலாளியை சந்திரகாந்த் கொன்றதாக ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கைதான சந்திரகாந்த் சரியான முகாந்திரம் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்னர், அவரது சொந்த கிராமத்திலும் சிலரை கொலை செய்ததாக அவரது ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த விஷயத்தில் காவலர்கள் சந்திரகாந்தை மிகவும் தரக்குறைவாக நடத்தியதாகவும் இதனால் அவர்களை பழிவாங்க வேண்டும் என்றும் சந்திரகாந்த் தெரிவித்துள்ளார்.
திகார் ஜெயிலில் மூன்றாவது கேட்டில் பணிபுரிந்து வந்த காவலர்தான் சந்திரகாந்தை அதிகளவில் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். அவரைப் பழிவாங்க முதலில் அதாவது 2003-ல் ஒரு கொலை செய்து உடலை கேட்டின் முன்னால் வைத்துள்ளார். ஆனால், இந்த வழக்கில் காவல்துறைக்கு எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. அதாவது, யார் கொலை செய்தது, கொலை செய்யப்பட்டது அப்டினு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால், அண்ட்ரேஸ்ட் கேஸ் லிஸ்டில் இந்த வழக்கு வைக்கப்பட்டது. அதன் பிறகு, 2006-ல் அதே கேட்டின் முன்பு அதே போன்று கொலை செய்யப்பட்ட ஒரு சடலம் வைக்கப்பட்டது. 2006 அக்டோபர்ல சந்திரகாந்த் காவல்துறைக்கு ஃபோன் செய்து, “டேய், முட்டாள். நீ வெட்டியா ஆஃபீஸர்ஸ் போட்டு வைச்சிருக்கீங்களே. அவனுங்க ஒரு வேலையும் செய்றதில்லை. நான் மூணாவது கேட் முன்னாடி ஒரு டெட் பாடி போட்டு வைச்சிருக்கேன்”னு சொல்லியிருக்காங்க. அதுக்கப்புறம்தான் போலீஸ்காரங்க அங்க போய் டெட் பாடியை பார்த்துருக்காங்க.
பழக்கூடையில் கிடந்த அந்த சடலத்தை பக்காவாக பேக் பண்ணியுள்ளார். அந்த கூடைல ஒரு கடிதமும் கிடைச்சுது. அந்தக் கடிதத்தில், “டெல்லி போலீஸ் ரொம்ப மோசமானவங்க. இதுவரை நான் பண்ணாத சில குற்றத்துக்காக தண்டனை அனுபவிச்சிருக்கேன். இப்போ ஒரு கொலை நான் பண்ணியிருக்கேன். உங்களால என்னை புடிக்க முடியாது. நான் சாதாரண பிட்பாக்கெட் காரணும் கிடையாது. 2003-லயும் இதே மாதிரி கொலை பண்ணேன். உங்களால கண்டு புடிக்க முடியலையே. இப்போ, முடிஞ்சா என்னை பிடிச்சு காட்டுங்க. உங்க அப்பன் நான். ஐ எம் வெயிட்டிங். இப்படிக்கு சி.சி” என எழுதியுள்ளார். ஆரம்பத்துல இந்த கொலை சாதாரணமாகத்தான் பேசப்பட்டது. ஆனால், இந்தக் கடிதம் வெளியானதும், மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. காவல்துறைக்கே 2003-ல பண்ண கொலை இவன் பண்ணதுனு அவன் சொல்லிதான் தெரியும். நாட்டுலயே திகார்தான் பாதுகாப்பான ஜெயில் என நம்பப்படுகிறது. ஆனால், அதற்கு முன்னால் சடலங்கள் கிடைக்கும்போது காவல்துறையினரால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளனர். அப்புறம் சீரியல் கில்லிங் என கேஸை காவல்துறையினர் அணுக ஆரம்பித்துள்ளனர்.
காவல்துறையினர் 2007 ஏப்ரலில் ஒருநாள் உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து, “இங்க இன்னொரு சடலம் அதே மாதிரி கிடைச்சிருக்கு” என கூறியுள்ளனர். அதேமாதிரியான கில்லிங் பேட்டர்ன்தான். அந்த சடலத்தோட மிஸ்ஸிங் பார்ட்ஸை வேறொரு இடத்தில் கண்டுபிடித்துள்ளனர். மே மாதம் அதே ஆண்டு மீண்டும் ஒரே பேட்டர்னில் கொலை செய்யப்பட்ட சடலத்தை கண்டுபிடுத்தனர். இந்த தடவையும் ஒரு லெட்டரை அந்த சடலத்துடன் சந்திரகாந்த் வைத்துள்ளார். அந்த லெட்டரில், “2006-ல நான் கொலை பண்ணி வைச்ச டெட் பாடியை நீங்க சரியாவே பரிசோதிக்கலை. அதுல அவன் கைல அமித்னு பச்சை குத்தியிருந்தான். ஆனால், நியூஸ் பேப்பர்ல அந்த டெட் பாடி பெயரைக்கூட குறிப்பிடலை. என்னைக் கண்டுபிடிச்சு கொடுத்த பணம் கிடைக்கும்னு சொல்லுங்க. இந்த விளையாட்டு இன்னும் சுவாரஸ்யமா மாறும்”னு அந்த கில்லர் சொல்லியிருக்கான். எல்லா செய்திகளையும் போலீஸோட் எல்லா மூவ்ஸ்களையும் அந்த கில்லர் கவனித்துக்கொண்டே இருந்துள்ளார்.
இறுதியில் ஒருவழியாக அந்த சீரியல் கில்லரை 2007-ல் காவலர்கள் போராடி கைது செய்தனர். எப்படி கைது செய்தனர் என டாகுமெண்ட்ரி பார்த்து தெரிஞ்சுக்கோங்க. போலீஸ் விசாரணையின் வழியாக வெளிவந்த தகவல்கள் இந்தியாவையே உலுக்கியது. அதைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். இன்றைக்கும் மிகவும் மோசமான சீரியல் கில்லராக சந்திரகாந்த் ஜா டெல்லி பக்கங்களில் அறியப்படுகிறார். இவர் வேலை பார்த்த இடத்தில், “சாலையோர தொழிலாளர்கள் சங்கம்” என ஒன்று இருந்துள்ளது. அதை ஒருத்தர் லீட் பண்ணியிருக்காரு. அவர் இவருக்கிட்ட இருந்துலாம் காசை பிடிங்கிப்பாராம். இதனால, அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். காசு தரமுடியாது என ஒருகட்டத்தில் சந்திரகாந்த் கூறியுள்ளார். என்னிடம் இருந்த கத்தி அவர் கையில் பட்டு கையில் ரத்தம் வந்தது. அவர்மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போதுதான் சந்திரகாந்த் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். 1998-ல் கொலை செய்யப்பட்டவர் இவர்தான்.
கொலை செய்யப்போறவங்களை முதல் நண்பர்களாக்கி, ஃபேமிலியில் ஒருத்தராக மாறிவிடுவார். பின்னர், அவர் செய்யும் எல்லா வேலைகளையும் கவனிப்பார். தக்க சமயம் பார்த்து காத்திருந்து கொலை செய்து, தலையை மட்டும் தனியாக வெட்டி உடலை பாலித்தின் பையில் போட்டு பழக்கூடையில் வைத்து திகார் ஜெயில் முன்னால் வைத்து விடுவதான் இவரின் கொலை பேட்டர்ன். அந்த தலையை யமுனை ஆற்றில் வீட்சி விடுவார். அப்போது, கொலை செய்யப்பட்டவனுக்கு புண்ணியம் சேரும் என சந்திரகாந்த் நம்பிக்கை வைத்துள்ளார். அவங்க எந்த அளவுக்கு பாவம் செய்தார்களோ அந்த அளவுக்கு சந்திரகாந்த் அவர்களை கொலையும் செய்வாராம். ஃபைல்ல இருந்து உன் பேரை எடுத்துருவேன்னு சொன்னா, அவங்களை கொலை செய்யப்போறதா அர்த்தமாம். கொலை செய்யப்பட்டவங்க எல்லார்கூடவும் பெர்சனலாக பிரச்னைகள் இவருக்கு இருந்துள்ளது. ஒருமுறை காவலர்கள் பழக்கூடையை அவிழ்க்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. அப்போது கூட்டத்தில் மறைந்திருந்த சந்திரகாந்த் கூடையில் இருந்த கயிற்றை அவிழ்க்க உதவி செய்ததாக காவலர்களிடமே தெரிவித்துள்ளார். அவனை குற்றவாளியாக்க போதிய ஆதாரங்கள்கூட ஆரம்ப கட்டத்தில் காவலர்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
காவலர்களிடமிருந்து மரியாதை கிடைக்காதது, அவர்களுக்கு உதவி செய்தது போன்ற காரணங்களை வைச்சு பார்க்கும்போது அந்த கேரக்டரை விலங்கு வெப்சீரீஸில் வந்த கிச்சாவுடன் ஒப்பிடலாம். அஃபிஸியலா தெரிஞ்சது 7 கொலைகள். ஆனால், இதுவரைக்கும் எத்தனைக் கொலைகள் செய்துள்ளார் என்பது சந்திரகாந்துக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஏன்னா, ஊர்லயே அவர் பல கொலைகள் செய்துள்ளதாக ஊர் காரர்கள் கூறியுள்ளனர். ரத்தத்தை உறைய வைக்கும் இந்த ஆவணப்படத்தை இயக்கியர் ஆயிஷா சூட். சந்திரகாந்த் தொடர்பான குற்ற ஆவணங்கள், அதில் தொடர்புடைய அதிகாரிகள், பத்திரிக்கை செய்திகள் என கிடைத்தவற்றை வைத்து இதனை இயக்கியுள்ளார். மிகவும் விறுவிறுப்பாக போகும் இந்த ஆவணப்படம் மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது. அவரின் குடும்பத்தினரையும் வீடியோவில் பேச வைக்க ஆயிஷா முயற்சி செய்துள்ளார். ஆனால், அவர்கள் மறுத்துள்ளனர். கிரைம் தில்லரில் ஆர்வம் உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக பார்க்கலாம்.