ஆன்ஃபீல்டுல அமைதியா இருந்துட்டு எந்தவொரு எமோஷனையுமே வெளிப்படுத்தாம தோனி பண்ண சம்பவங்கள் எத்தனையோ நாம பார்த்திருப்போம். ஆனா, 2007 டி20 வேர்ல்டு கப்ல இருந்தே ஆஃப் பீல்டுல பிரஸ்மீட்/போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷன்கள்ல அவர் மொரட்டு சம்பவங்கள் நிறையவே பண்ணிருக்காரு… அதைப்பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
2011 வேர்ல்டு கப்
2011 வேர்ல்டு கப்ல இந்தியா ஜெயிச்சிருந்தாலும் அந்த சீரிஸ் ரொம்பவே கவனிக்கப்பட்டுச்சு. லீக் ஸ்டேஜ்ல சௌத் ஆப்பிரிக்கா மேட்ச்ல தோத்திருந்தப்பவே, நீங்க கிரவுடுக்காக விளையாடல, உங்களோட நாட்டுக்காக விளையாடுறீங்க’னு ரவி சாஸ்திரிகிட்ட தோனி சொல்லிருப்பார். அதுவே ஃபைனல்ல ஸ்ரீலங்காவை வீழ்த்தி கப் அடிச்சபிறகும் அதே ரவிசாஸ்திரி, தோனிகிட்ட கேள்வி கேக்கும்போது,
இன்னிக்கு மேட்ச்ல நான் எடுத்த முக்கியமான முடிவுகள் கேள்விக்குள்ளாகியிருக்கும். ஏன் அஷ்வினுக்குப் பதிலா ஸ்ரீசாந்தை எடுத்தீங்க, நல்ல ஃபார்ம்ல இருக்க யுவராஜ் ஏன் நம்பர் 4ல பேட் பண்ணலங்குற மாதிரியா நிறைய கேள்விகள் என்னை நோக்கி வந்துருக்கும். ஜெயிச்சு என்னோட முடிவுகள் சரிதான்னு நிரூபிச்சதுனால சந்தோஷம்’னு ரொம்பவே Calmஆ பதில் சொல்லிருப்பாரு தோனி.
2013 சாம்பியன்ஸ் டிராஃபி
இந்தியன் டீமோட பில்லர்ஸா இருந்த சீனியர் பிளேயர்ஸ் பலரும் ரிட்டையர்டு ஆகியிருந்த நிலைமைல எதிர்பார்ப்புகளோட இங்கிலாந்துக்கு 2013 சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் போச்சு தோனி அண்ட் கோ. லோஸ்கோரிங் ஃபைனல்ல வெற்றிகரமா ஃடிபண்ட் பண்ணி கப் அடிச்ச பிறகு நாசர் ஹூசைன், டி20 வேர்ல்டு கப், 50 ஓவர் வேர்ல்டு கப், இப்போ சாம்பியன்ஸ் டிராஃபி அடிச்சுட்டீங்க. அடுத்ததா உங்க கோல் என்ன’னு கேப்பாரு. அதுக்கு,
என்னைப் பொறுத்தவரைக்கும் அடுத்த மேட்ச் நான் எப்படி விளையாடுறேன்ங்குறதுதான் எனக்கு முக்கியம்’னு அசால்ட் காட்டிருப்பாரு தோனி. அதே நேரத்துல சீனியர் பிளேயர்ஸ், இந்தியன் டீமோட கல்ச்சர்னு நிறைய விஷயங்களை வேறொரு கோணத்துல பதிவு பண்ணிருப்பாரு.
அதே ஃபைனலோட பிரஸ்மீட்ல அதை விட மாஸா ஒரு சம்பவம் பண்ணிருப்பாரு. அந்த மேட்ச்ல பௌலிங் போடப் போறப்போ உங்க டீம் பிளேயர்ஸ்கிட்ட என்ன சொன்னீங்கனு பத்திரிகையாளர் ஒருத்தர் கேட்ட கேள்விக்கு, `உங்களைக் காப்பாத்த மேல இருந்து கடவுள் வர மாட்டார். ஜெயிக்கணும்னா நீங்க வலுவான ஒரு ஃபைட்டைக் கொடுக்கணும்’னு சொன்னேன்னு சொல்லிருப்பாரு.
2014 டி20 வேர்ல்டு கப் ஃபைனல்
ஸ்ரீலங்காவுக்கு எதிரான மேட்ச்ல இந்தியாவோட மோசமான பெர்ஃபாமன்ஸ் மோசமா விமர்சிக்கப்பட்ட டைம் அது. குறிப்பா யுவராஜ், தோனி பேட்டிங்கை ரொம்பக் கடுமையா ஃபேன்ஸ் விமர்சனம் பண்ணாங்க. அந்த டைம்ல பிரஸைச் சந்திச்ச தோனி, `நீங்க ஃபேன்ஸோட கோபத்தைப் பத்தி பேசுறீங்க. ஆனா, குறிப்பிட்ட அந்த பிளேயர் எவ்வளவு மோசமா உணர்ந்திருப்பாருங்குறதை புரிஞ்சுக்கோங்க. நீங்க ஃபேன்ஸ் கோபப்படுறாங்கனு பேசுறீங்க. அதேநேரம், அந்த இடத்துல இருக்க பிளேயர் என்ன மாதிரியான மனநிலைல இருப்பாங்கங்குறதை நாம யோசிக்கணும்’னு யுவராஜூக்கு சப்போர்ட் பண்ணி விமர்சனங்களைப் பிரிச்சு விட்டிருப்பாரு.
2015 வேர்ல்டு கப் பிரஸ் கான்ஃப்ரன்ஸ்
2011 வேர்ல்டு சாம்பியன்ஸான இந்தியாவுக்கு 2015 வேர்ல்டு கப் எதிர்பார்த்த ரிசல்ட் கொடுக்கல. செமி ஃபைனல்ல ஆஸ்திரேலியா ஜெயிச்சதுக்குப் பிறகு தோனி அண்ட் கோ இனிமேல் அவ்வளவுதான்னு பெரிய அளவுக்கு விமர்சனம் எழுந்துச்சு. அந்த டைம்ல பிரஸை சந்திச்சுப் பல கேள்விகளையும் தைரியமா எதிர்க்கொண்ட தோனி, `டீமைப் பொறுத்தவரைக்கும் இது எக்ஸண்டட் ஃபேமிலிதான். ஒவ்வொருத்தரும் அப்படித்தான் பழகுறோம். இது லாங் டூர். சொல்லப்போனா, இன்னும் 20 நாள் இங்க இருந்தா ஆஸ்திரேலியா சிட்டிசன்ஷிப்புக்கே அப்ளை பண்ணலாம்’னு அந்த மொமண்டை லைட்டரா மாத்திருப்பார்.
2016 டி20 வேர்ல்டு கப் செமி ஃபைனல்
இன்டர்நேஷனல் டோர்னமெண்ட்களோட பிரஸ் கான்ஃபிரஸ்ல தோனி பண்ண ஒன் ஆஃப் தி மாஸ் சம்பவம் இது. இந்தியால நடந்த அந்த டோர்னமெண்ட்ல உள்ளூர் டீம் மேல மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த டைம். செமிஃபைனல்ல வெஸ்ட் இண்டீஸ் ஜெயிச்சதுக்கு அப்புறம் நடந்த பிரஸ் மீட்ல, இதுக்கப்புறமும் நீங்க விளையாடுவீங்கன்னு நினைக்குறீங்களானு ஒரு ரிப்போர்ட்டர் கேட்டிருப்பாரு. அவரை முன்னாடி வரச் சொல்லி பக்கத்துல உக்கார வைச்சு, `நான் ஃபிட்டா இருக்கேனே?’ன்ற மாதிரி கேள்விகளைக் கேட்டு அவரு வாயாலேயே பதில் சொல்ல வைச்சு மொத்த மீடியாவையும் அமைதிப்படுத்திருப்பாரு தோனி.
ஐபிஎல்
ஒவ்வொரு வருஷமும் ஐபில் வரும்போதும் தோனிக்கு இதுதான் லாஸ்ட் சீசன்ங்குற டாக் கடந்த பல வருஷங்களாவே வந்துட்டு இருக்கு. 2020 ஐபிஎல்ல பஞ்சாபுக்கு எதிரான கடைசி லீக் மேட்சப்போ, யெல்லோ ஜெர்ஸில இதுதான் உங்க லாஸ்ட் மேட்சா’னு டேனி மோரிசன் கேக்க,
Definitely not’னு அவர் சொன்ன பதில் சோசியல் மீடியா வரைக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்துச்சு. 2021 சீசனை ஜெயிச்சபிறகு கிட்டத்தட்ட ரிட்டையர்மெண்ட்தான்னு முடிவெடுத்து ஹர்ஷா போக்ளே, நீங்க சிஎஸ்கேல விட்டுட்டுப் போற லெகஸி’னு ஆரம்பிச்ச உடனே,
I still haven’t left ‘behind’னு சிம்பிளா முடிச்சுவிட்டிருப்பாரு. 2023 சீசன்ல குவாலிஃபையர் 1-ல ஜெயிச்சபிறகு ரிட்டையர்மெண்ட் பத்தி ஹர்ஷா போக்ளே கேக்க, அதப்பத்தி முடிவெடுக்க இன்னும் 8,9 மாசம் இருக்கேனு சொல்லிருப்பார். அதுவே ஃபைனல்ல ஜெயிச்சபிறகு சேம் காம்பினேஷன், `இப்போ ரிட்டையர்மெண்ட் அறிவிக்குறது ஈஸி. ஆனா, ஃபேன்ஸுக்கு என் சைடு இருந்து கிஃப்ட்டா வர்ற ஏழெட்டு மாசங்கள் உழைச்சு மறுபடியும் விளையாடுறது’னு மாஸா ஒரு அனனவுன்ஸ்மெண்ட் கொடுத்திருப்பாரு.
2007 டி20 வேர்ல்டு கப்தான் கேப்டனா தோனி கலந்துக்கிட்ட முதல் ஐசிசி டோர்னமெண்ட். அந்த சீரிஸோட செமி ஃபைனல்ல ஆஸ்திரேலியாவை 70 ரன் வித்தியாசத்துல வீழ்த்தி மாஸா ஃபைனலுக்குப் போயிருக்கும் இந்தியா. அந்த மேட்ச்ல ஜெயிச்சதுக்கு அப்புறம் போஸ்ட் மேட்ச் பிரசண்டேஷன்ல ரவி சாஸ்திரியை தோனி வைச்சு செஞ்சிருப்பாரு. `எல்லாத்தையும் தொடங்குறதுக்கு முன்னாடி ரவி உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்னு ஆசைப்படுறேன். செமிஃபைனல்ல நான் கேப்டன்ங்குற நிலைமைல ஆஸ்திரேலியா டீம்தான் ஃபேவரைட்னு நீங்க சொல்லிருந்ததா ஒரு ஆர்ட்டிக்கிள் படிச்சேன். இப்போ உங்களோட கணிப்பு தப்புனு நானும் என்னோட பாய்ஸும் நிரூபிச்சுட்டோம். இந்த நிலைமைல எங்கள விட நீங்கதான் ஹேப்பியா இருப்பீங்கனு நம்புறேன்’னு அவருகிட்டயே பேசி மாஸ் கொடுத்துருப்பார் தோனி.
தோனியோட பிரஸ்மீட்/போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷன் இண்டர்வியூஸ்ல அவரோட எந்தவொரு ஒன்லைனர் உங்களோட ஃபேவரைட்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.