தமிழகத்தின் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி, அன்றைய முதலமைச்சர் கலைஞரிடம் கருத்துக்கேட்டது, `உழைப்பு… உழைப்பு…உழைப்பு… அதுதான் மு.க.ஸ்டாலின்’ என்று தெரிவித்தார். கலைஞர் அப்படி சொன்னபோது மு.க.ஸ்டாலின் திமுக-வின் தலைவர் பொறுப்பிலும் இல்லை; தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பிலும் இல்லை. ஆனால், இன்றைக்கு, அந்த இரண்டு உயர்ந்த பொறுப்புக்களும் அவர் வசமாகி உள்ளன. இந்த நேரத்தில், அவர் முன்பு உழைத்த தை விட பல மடங்கு உழைக்கவும், நேரத்தை சரியாக மேலாண்மை செய்யவும் வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனால், முதலமைச்சர் பொறுப்பிற்கு வந்த பிறகு, அவருடைய ரொட்டின் வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். அதைப் பற்றிய ஒரு சுவாரசியமான தொகுப்பைப் பார்க்கலாம்ஞ்.

4:00 மணிக்கு சூடான காபி!
கலைஞரின் சுறுசுறுப்புக்கு அவர் அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுவதை ஒரு காரணமாகப் பலரும் சொல்வார்கள். ஆனால், மு.க.ஸ்டாலின் தற்போது அதிகாலை 4 மணிக்கு எழுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே அவருக்கு காபி தயாரிக்கும் வேலைகள் தொடங்கிவிடுகின்றன. முதலமைச்சர் பொறுப்பிற்கு வந்த பிறகுதான் இந்த மாற்றம். அதற்கு முன்பு காலை ஆறு மணிக்கு எழுந்திருப்பதுதான் அவரது வழக்கமாக இருந்தது.
காலையில் ஜிம்மில் உடற்பயிற்சி அல்லது யோகா அல்லது தியோசபிக்கல் சொசைட்டியில் வாக்கிங் என்பது அவருடைய உடற்பயிற்சி முறைகள். இதில் எதாவது ஒன்றை கண்டிப்பாக செய்துவிடுவார். யோகா, ஜிம் பயிற்சிக்கு வெளியில் செல்வதில்லை. வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகள் உண்டு.
சி.எம். பாஸிங் டைம் ஒரு நிமிடம்தான்!
தமிழகத்திற்கு கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயல லிதா, எடப்பாடி பழனிச்சாமி என யார் முதலமைச்சராக இருந்தபோதும், சி.எம்.பாஸிங் டைம் என்று சொல்லி போக்குவரத்தை பல மணி நேரங்கள் நிறுத்தி வைப்பதை தவிர்க்க முடியவில்லை. இது ஜெயல லிதா காலகட்டத்தில், அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை நிறுத்தி வைத்திருந்த வழக்கமும் உண்டு. இப்போது சி.எம்.பாஸிங் டைம் என்பதற்காக அதிகபட்சம் ஒரு நிமிடம் போக்குவரத்தை நிறுத்தினால் போதும் என கறார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதனால்தான் தற்போது சென்னைவாசிகள் அந்த தொந்தரவை அனுபவிப்பதில்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் இப்படி ஒரு நடைமுறையால் பொதுமக்கள் அவதிப்படுவார்கள் என்பதே சென்னைவாசிகளுக்கு மறந்துபோகும். அதுபோல், சி.எம். கான்வாயில் தேவையில்லாமல் கூடுதலாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கையும் குறைக்கச் சொல்லிவிட்டார். அதனால், இந்தியாவில் இப்போதைக்கு தமிழக முதலமைச்சரின் கான்வாய்தான் எளிமையானது.
White Collar Employees ரூல்…!
White Collar Employees எப்படி அலுவலகம் செல்வார்களோ அதுபோல், அனைத்து நாட்களிலும் காலையில் 10 முதல் 10.30-க்குள் தலைமைச் செயலகம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். முன்பு, அவர் துணை முதலமைச்சராக இருந்தபோதும், அமைச்சராக இருந்த நேரத்திலும், எதிர்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் இந்த வழக்கத்தை அவர் கடைபிடித்ததில்லை. முதலமைச்சர் பொறுப்பிற்கு வந்தபிறகு தினமும் தலைமைச் செயலகம் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார். வீட்டிற்கு வரும் நேரம் அதிகமாக குறைந்துவிட்டது. வீட்டிற்கு வந்தாலும், அங்கேயும் நேரம் ஒதுக்கி 9 மணி வரை பைல்கள் பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். அதனால், அவர் டேபிளில் பைல்கள் தேங்கிக்கிடக்கிறதுஞ் பெண்டிங் பைல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அதிகாரிகளுக்கு புது ஸ்டாலின்!
கலைஞர் இருந்தபோது இருந்த மு.க.ஸ்டாலினுக்கும்ஞ் தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கும் இடையே ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக செக்ரட்டரியேட் அதிகாரிகளே ஆச்சரியப்படுகின்றனர். தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகத்தில் உள்ள அனுபவங்களை வைத்து, முதலமைச்சர் எழுப்பும் கேள்விகள், கேட்கும் சந்தேகங்கள், தயங்காமல் எடுக்கும் முடிவுகள், புதிதாக கொண்டு வரும் திட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பேன்ஸ்ஸாகி உள்ளனர்.
புதிய டாக்டர் தீரஜ்!
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், மு.க.ஸ்டாலினின் பணிச்சுமை கடுமையாக அதிகரித்துள்ளதால், இதில் அவருடைய லீமீணீறீtலீ நீலீமீநீளீ-uஜீ மறக்கப்பட்டுவிடக்கூடாது என்பதால், இப்போது ஒரு புதிய நடைமுறையை துவக்கியுள்ளார்கள். கலைஞரின் ஆஸ்தான மருத்துவர் கோபால் அவரை தினமும் சந்திப்பதுபோல், மு.க.ஸ்டாலினுக்கும் மருத்துவர் தீரஜ் தினமும் சந்திக்கும் ஏற்பாடு தற்போது புதிதாக நடைமுறைக்கு வந்துள்ளது. தீரஜ் மு.க.ஸ்டாலினின் நண்பரின் மகன்.

Appointment இருக்கு… ஆனா, இல்ல!
மு.க.ஸ்டாலினை அணுகுவது பொதுமக்கள், கட்சியின் எளிய தொண்டர்கள், பத்திரிகையாளர்களுக்கு கடினமாக இருந்த காலகட்டம் உண்டு. ஆனால் தற்போது அது வெகுவாக குறைக்கப்பட்டு, ஒரு நாள் முதல் இரண்டு நாட்களுக்குள் சந்திப்பின் அவசியத்தைப் பொறுத்து நேரம் ஒதுக்கப்படுகிறது. அதுபோல, முன்பெல்லாம் வாழ்த்துச் சொல்ல வருகிறோம்ஞ் வாழ்த்துப் பெற வருகிறோம் என கட்சிக்கார்கள் அடிக்கடி சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால், தற்போது சரியான காரணம் இல்லாமல், அவசியம் இல்லாமல் கட்சிக்கார்கள் யாரும் சந்திக்க வேண்டாம் என கறார் உத்தரவு போடப்பட்டுள்ளது.
தோற்றம் மாற்றம்!
தன் தோற்றம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் முன்னெப்போதையும் விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக கவனமாக உள்ளார். பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்பே, மாற்றப்பட்ட புது ஹேர் ஸ்டைல், சரியான டயட் என்பதோடு, அந்தந்த இடங்களுக்கு ஏற்ப கச்சிதமான, கலர்புல்லான ஆடைகள் அணிவதை சமீபமாக புது வழக்கமாக முதலமைச்சர் கடைபிடித்துள்ளார். அதற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் கொடுக்கும் வரவேற்பு, அவருடைய தன்னம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதனால், அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அவரது டிரேட் மார்க் வெள்ளை வேட்டி, சட்டை ஆகியவற்றோடு இடத்துக்கும் சூழ்நிலைக்கும் பொருந்தும் எக்ஸ்ட்ரா accessories-களை சேர்த்துக் கொள்கிறார்.

டேபிள் டென்னிஸ் Times!
தவிர்க்க முடியாத காரணங்களால், காலை உடற்பயிற்சி தவறும்போது, மாலை ஒரு மணி நேரம் டேபிள் டென்னிஸ் ஆடும் பழக்கத்தை சமீபமாகப் பின்பற்றி வருகிறார். இந்தப் பழக்கம் அதற்கு முன்பு அவரிடம் இல்லை. அதுபோல், அரசியல், அதிகாரிகள், வட்டத்தில் இல்லாத தனக்கு நெருக்கமான தனிப்பட்ட நண்பர்களை சந்திக்க இரவு ஒரு மணிநேரம் ஒதுக்கி உள்ளார். அந்த நேரத்தில், ஸ்நுக்கர் ஆடிக் கொண்டே, அவர்களின் சந்திப்பை முடித்துவிடுகிறார்.
பாசிட்டிவ் மீடியா டிரெண்ட்
சோசியல் மீடியாக்களில் தன் மீது வரும் விமர்சனம், பாராட்டுக்களைக் கவனிப்பதை மிகக் கவனமாக செய்கிறார். அதில் சுட்டிக்காட்டப்படும் சிறிய குறைகள் என்றாலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களை நேரடியாக அனுப்பி அதற்குத் தீர்வு காண வைக்கிறார். கோயிலுக்குள் அனுமதிக்காக நரிக்குறவர் சமூகப் பெண் பிரச்சினை, நாய்க்கடி பிரச்சினை, மழை-வெள்ளம் தொடர்பான பிரச்சினைகளில் அவர் ஆக்டிவ்வாக இருந்தததற்கு சோசியல் மீடியா டிரெண்டுகளை முதலமைச்சர் விரல் நுனியில் வைத்திருப்பதுதான் காரணம்.
Also Read – வாயைவிட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி தி.மு.க-வில் வலுக்கும் எதிர்ப்பு!