விஜய் டிவியில் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோ குக்கு வித் கோமாளி. தற்போது சன் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க சர்வதேச அளவில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் புகழ்பெற்றிருக்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தமிழுக்கு வருகிறது.
சன் டிவியில் சுமார் 30 எபிசோடுகள் ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் செலிஃபிரட்டி செஃப்களான ஆர்த்தி சம்பத், ஹரீஷ் ராவ் மற்றும் கௌஷிக் ஷங்கர் என மூன்று ஜட்ஜ்கள் இருக்கிறார்கள். குக்கு வித் கோமாளி ஷோவில் தமிழகத்தில் பிரபலமான செஃப்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் ஜட்ஜ்களாக உணவை ருசிபார்த்து மதிப்பெண் வழங்கியிருந்தார்கள்.
குக்கு வித் கோமாளி ஜட்ஜஸ் Vs மாஸ்டர் செஃப் ஜட்ஜஸ்
- குக்கு வித் கோமாளி ஷோவில் ஜட்ஜ்கள் இருவருமே லைட்டர் டோனில் காமெடியாகவே நிகழ்ச்சியைக் கொண்டுபோயிருப்பதைப் பார்க்க முடியும். எப்பவும் சீரியஸாக இருக்கும் செஃப் தாமுவே இதில், புகழ், ஷிவாங்கியைக் கலாய்த்த சம்பவங்களும் இருக்கின்றன. வெங்கடேஷ் பட்டை எடுத்துக் கொண்டால் அவர் வேற லெவலில் இறங்கி காமெடியில் அதகளம் பண்ணியிருப்பார். அட்வாண்டேஜ் டாஸ்கில் சுட்டு வைத்திருந்த அப்பளங்களை நொறுக்கிவிட்டு நைசாக நழுவிய சம்பவங்களும் உண்டு.
ஆனால், மாஸ்டர் செஃப் தமிழ் ஜட்ஜ்கள் சீரியஸாகவே தோற்றமளிக்கிறார்கள். இதற்கான புரோமோவிலேயெ மூன்று செஃப்களின் மனநிலையைப் பற்றியும் ஹிண்ட் கொடுத்திருந்தார்கள். Mad Chef' என்று பாசத்தோடு அழைக்கப்படும் கௌஷிக்,
உணவுக்கு முக்கியம் அதன் சிந்தனை’ என்கிறார். செஃப் ஆர்த்தி சொல்லும் பாயிண்ட் உணவின் தோற்றம், பார்த்தால் பசி தீரும் என்பது அவர் லாஜிக். `பசி தீர்ந்தாலும் ருசி தீருமா… என்னோட தேடல் உணவில் ருசி’ என்கிறார் செஃப் ஹரீஷ்.
- குக்கு வித் கோமாளி இரண்டு சீசன்களிலுமே செலிபிரட்டிகளால் நிரம்பி வழிந்தது. டிவி செலிபிரட்டிகள் தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னாள் நடிகைகள் வரை இந்த லிஸ்ட் கொஞ்சம் நீளம். ரசிகர்களின் ஃபேவரைட் செலிபிரட்டிகள் சமையல் திறனை ஜட்ஜ்கள் பரிசோதித்தனர். ஜட்ஜ்களைப் பொறுத்தவரை ஒரு போட்டியாளராகவே கருதி போட்டியில் மதிப்பெண் அளித்தார்கள்.
மாஸ்டர் செஃப் ஷோவின் 20 போட்டியாளர்களுமே வெவ்வேறு பின்புலத்தைக் கொண்ட சாதாரணமானவர்கள் என்கிறார்கள். இவர்களை எப்படி 3 ஜட்ஜ்களும் ஹேண்டில் செய்யப் போகிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யம்தான். மாஸ்டர் செப் ஆங்கில நிகழ்ச்சிகளில் ஜட்ஜ்கள் ரொம்பவே ஸ்டிரிக்டானவர்களாகக் காட்டப்படுவார்கள். இதில், எப்படி இருக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read – நீங்க குக் வித் கோமாளிக்கு எவ்வளவு பெரிய ரசிகர்… தெரிஞ்சுக்கலாமா?!