இந்தியால இருக்குற எல்லா சினிமா இண்டஸ்ட்ரீயும் கொண்டாடுன ஒரு படம்னா, லவ் டுடேதான். விஜய், அஜித் மாதிரி பெரிய ஹீரோக்களோட பெரிய படங்கள் போன வருஷம் பண்ணாத விஷயங்களை லவ் டுடே படம் பண்ணிச்சுனு சொல்லலாம். இன்னைக்கும் நிறைய செலிபிரிட்டிகள் அந்தப் படம் பத்தி பேசுறாங்க. பிரதீப் அந்தப் படம் பத்தின ஜர்னியை செம இன்ட்ரஸ்டிங்கா Journey of Love today பெயர்ல டாகுமென்டரி ஸ்டைல்ல ரிலீஸ் பண்ணியிருக்காரு. படம் எவ்வளவு என்கேஜா இருந்துச்சோ, இந்த டாகுமெண்டரியும் அதே மாதிரி செம என்கேஜா இருக்கு. அதுல சில ஹைலைட்டான மொமன்டுகளை பார்ப்போம்.
லவ் டுடே படத்தோட சக்ஸஸ்க்கு முதல் காரணமே ஸ்டோரிதான். அவ்வளவு ரிலவென்டா இருந்துச்சு. அதே மாதிரி ஒரு சீன்கூட நம்மள சோதிக்கல. சின்ன சின்ன விஷயங்களைகூட பார்த்து பண்ணி, எடிட்டிங்க்ல மேஜிக் செஞ்சு, யுவனை ஃபன்லாம் பண்ண வைச்சு படத்தை கச்சிதமான பேக்கா பிரதீப் கொடுத்துருந்தாரு. சின்ன படம்தான், ஆனால்.. அந்தப் படம் பண்ண இம்பேக்ட் அவ்வளவு மாஸா இருந்துச்சு. அந்த ஜர்னிய இந்த வீடியோல சொல்லும்போதே, அவ்வளவு எமோஷன், ஃபன், கஷ்டங்கள் எல்லாமே இருந்துச்சு. புதுசாவே இருந்துச்சு. என்னத்தையாவது பண்ணி, நம்மள பிரதீப் என்கேஜ் பண்ணிடுறாரு. அந்த மேஜிக் அவர்கிட்ட இருக்குன்றதுக்காகவே கிளாப்ஸ் கொடுக்கலாம்.
லோகேஷ், பிரதீப்னு இன்னைக்கு முன்னணில இருக்குற பல டைரக்டர்ஸ் யார்கிட்டயும் அஸிஸ்டென்டாலாம் வொர்க் பண்ணல. அதை நினைச்சு லோகேஷ் அப்பப்போ ஃபீல் பண்ணுவாரு. பிரதீப்கிட்டயும் அந்த ஃபீலிங் தெரியும். ரெண்டு பேரும் சான்ஸ் கிடைக்கும்போதுலாம் தங்களோட அஸிஸ்டெண்ட் டைரக்டரஸ் பத்தி கண்டிப்பா பேசுவாங்க. நிறைய பேர்கிட்ட அவர் சான்ஸ் கேட்கும்போது ரெக்கமன்டேஷன் கேட்ருக்காங்க. அவர்கிட்ட இல்லைன்றதால சான்ஸ் கிடைக்கல. அதுனலாயே, தன்னோட படத்துக்கு அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் வேணும்னு சொல்லும்போது, அவங்களுக்கு ஃபஸ்ட் போட்ட கண்டிஷனே, நோ ரெக்கமண்டேஷன் அப்டின்றதுதான். கிட்டத்தட்ட 7000 மெயில்ல இருந்து 8 பேரை செலக்ட் பண்ணியிருக்காரு. அவங்களோட காமெடி சென்ஸ், இன்புட்ஸ்லாம்தான் லவ் டுடேவை இன்னும் செதுக்கியிருக்குனு சொல்லலாம்.
ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதிட்டு புரொடியூஸர்ஸ்கிட்ட போகும்போது, பிரதீப் மாஸா ட்விஸ்ட் வைச்சிருக்காப்ள. என்னனா.. இந்தப் படத்துல நான்தான் ஹீரோனு சொல்லிருக்காரு. சும்மாலாம் இல்லை. ஆப் லாக்ல நடிச்சதை காமிச்சிருக்காரு. அதைப் பார்த்தது, ஸ்கிரிப்ட் சொன்னது எல்லாத்தையும் பார்த்து ஏ.ஜி.எஸ் அவரை ஹீரோவா ஏத்துக்கிட்டாங்க. படமும் ரிலீஸாகி டைரக்டரா தாண்டி, 2’கே கிட்ஸ் அவரை அவங்களோட பிரதிபலிப்பாவே மட்டும்தான் திரைல பார்த்தாங்க. அவ்வளவு பெர்ஃபெக்டா அந்த கேரக்டரை பிச்சிருப்பாரு. ஏன், ஹீரோவானு கேட்டா, என் மைண்ட்ல சில விஷயங்கள் இருந்துச்சு.. அதை வேற ஹீரோகிட்ட சொல்ல முடியுமா தெரியலை, அதனால நானே பண்ணிட்டேன்னு சொல்லியிருக்காரு. நிஜமாவே அந்த கேரக்டரை வேற யார் பண்ணாலும், இவ்வளவு பெர்ஃபெக்டா வந்துருக்குமானு தெரியல.
யுவன் ஷங்கர் ராஜா, டைரக்டர்ஸோட பல்ஸ் புடிக்கிறதுல எவ்வளவு பிளஸ்னு இந்தப் படம் பார்த்தா தெரியும். ஒருநாள் யுவன் மனைவிகிட்ட இருந்து யுவன் பிறந்தநாள் விழால கலந்துக்க மெசேஜ் வந்துருக்கு. மாத்தி அனுப்பிட்டீங்கனு இவர் பதில் சொல்ல, சிரிச்சுட்டு, உங்க படம் அவருக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நீங்க வந்தா நல்லாருக்கும்னு சொல்லியிருக்காங்க. அங்க போய்தான் முதல் தடவை மீட் பண்ணியிருக்காரு. யுவன் கான்சர்ட்டுக்கு டிக்கெட் கிடைக்காமல் இருந்த ஃபேன் பாய்தான் பிரதீப். ஆனால், இன்னைக்கு அவர் படத்துக்கு மியூசிக், அதுலயும் அவரோட நடிப்புல ஃபஸ்ட் படம். மாமாகுட்டி, சாச்சிட்டாளே, பச்ச இலைனு எல்லாமே செம வைப் பாட்டு. பத்து ரூபாய் பெட்டு, பாட்டெல்லாம் ஹிட்டு.
Also Read – 2கே கிட்ஸ் சீக்ரெட் சாட் இங்கதான் நடக்குதா?!
ஒரு கேரக்டரை எவ்வளவு நல்லா வேணும்னாலும் எழுதிடலாம். ஆனால், அதை சரியா உள்வாங்கிட்டு நடிச்சா மட்டும்தான் அந்த கேரக்டர் எடுபடும். அப்படிப் பார்த்தா, இந்தப் படத்துல பிரதீப்பை தவிர மீதி இருக்குற ஆர்டிஸ்ட்டும் அவ்வளவு பெர்ஃபெக்டா செட் ஆகியிருப்பாங்க. சத்யராஜ், ராதிகா, இவானா, ரவீனா எல்லாரும் பெஸ்ட்டா பண்ணியிருப்பாங்க. அவங்க ஒவ்வொருத்தரும் எப்படி உள்ள வந்தாங்கனு இந்த வீடியோல செமயா கன்வே பண்ணியிருப்பாரு. என்னடா, யோகி பாபுவை விட்டுட்டனு கேக்குறீங்களா, யோகி பாபு ஸ்பெஷல் மென்ஷன். எனக்கு தெரிஞ்சு யோகி பாபுவோட இன்னொரு ஆக்டிங் சைடை ரொம்ப நல்லா காமிச்சது, பிரதீப்தான். பிரதீப், யோகி பாபுகிட்ட சொல்லியிருக்காரு. நீங்க கிளிசரின் போடுற ஃபஸ்ட் படம் என்னோடதுதான்னு, அதெல்லாமே செம மொமண்டா இருந்துச்சு.
எல்லாருமே படம் பார்த்துட்டு, எவ்வளவு நல்லா பண்ணியிருக்கான்னுதான் சொன்னாங்க. தியேட்டர்ல அந்த படத்தை ஒவ்வொரு ஃப்ரேம்லயும் ஒவ்வொரு டயலாக்கையும் எஞ்சாய் பண்ணி செலிபிரேட் பண்ணாங்க. படத்தோட ஃபஸ்ட் ஃப்ரேம்ல தளபதிக்கு தேங்க்ஸ் கார்ட் போடுறதுல தொடங்குன கிளாப்ஸ் படம் முடிஞ்சு பிளாக் ஸ்கிரீன் வர்றது வரைக்கும் கிளாப்ஸ் போச்சு. அதைப் பார்க்கும்போதே அவ்வளவு கூஸ்பம்ப்ஸ் வந்துச்சு. 2’கே கிட்ஸ்ல தொடங்கி தமிழ்நாட்டோட முதலமைச்சர் வரைக்கும் அந்தப் படத்தை பாஸ்டிட்டிவா சொல்லியிருக்காங்க. அங்கதான் அந்தப் படத்தோட வெற்றியே. அதை இந்த டாகுமெண்டரில காமிக்கைல நமக்கே சே.. சாதிச்சிட்டான்யா.. இன்னும் நிறைய எதிர்பார்க்குறோம்னு சொல்லணும்னு இருந்துச்சு.
ஆர்.வி.உதயகுமார், ராஜன்லாம் அந்தப் படத்தை பாராட்டிட்டு இருந்தாங்க. 20 நிமிஷத்துக்கு அந்தாலஜி மாதிரி பண்ணலாம்னு ஆரம்பிச்ச வொர்க், இன்னைக்கு தமிழ் சினிமால இண்டஸ்ட்ரீ ஹிட்டுனு சொல்ற மாதிரி அமைஞ்சுது. அதை தெலுங்குல டப் பண்ணலாம்னு முடிவு பண்ணி டப் பண்ணி, தில் ராஜு ரிலீஸ் பண்ணியிருக்காரு. அங்க அந்த ஆடியன்ஸ் அந்தப் படத்துக்கு கொடுத்த வரவேற்பு இருக்கே, செம. அதைப் பார்த்தா செம எமோஷனலா இருக்கும். பிரதீப்பையெல்லாம் ஃபேன்ஸ் தூக்கி வைச்சு கொண்டாடிட்டு இருந்தாங்க. அவர் நிறைய படம் பண்ணனும்னு கேட்டுட்டு இருந்தாங்க. கேமராவை ஆன் பண்ணக்கூட ஆள் இல்லாமல், ஷார்ட் ஃபிலிம் எடுத்த ஒரு பையனோட படத்துல வொர்க் பண்ண இன்னைக்கு பலரும் ஆவலா இருக்கான்றதைவிட, ஒரு சக்ஸஸை வேற எப்படி டிஸ்க்ரைப் பண்ண முடியும்.
பொலிட்டிகலி சில விஷயங்களை கரெக்ட் பண்ணி, இப்போ இருக்குற அதே ஸ்டைலோட, காலத்துக்கு ஏத்த மாதிரி படங்களைக் கொடுத்தா, பிரதீப் முக்கியமான டைரக்டரா கண்டிப்பா வலம் வருவாரு. லவ் டுடே படம், இந்த டாகுமெண்டரிலாம் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி ஃபீல் ஆச்சு, லவ் டுடே பிரதீப் அடுத்து யார்கூட படம் பண்ணா நல்லாருக்கும்னு நீங்க நினைக்கிறீங்கன்றதை கமெண்ட்ல சொல்லுங்க.