‘சார், நீங்க எனக்கு மறுபடியும் ஒரு படம் பண்றீங்களா’ அப்படினு உதயநிதி, இயக்குநர் அஹமதுவுக்கு போன் பண்ணி கேட்கிறார். அந்த அளவுக்கு சாலிட்டான வெற்றியை மனிதன் படம் மூலமா கொடுத்திருந்தார், முஹமது. ஆனா அந்த இயக்குநர் அதுக்கு சொன்ன பதில்தான் அல்டிமேட். அது என்னங்குறதும் இந்த வீடியோல இருக்கு. தொடர்ந்து பாருங்க. என்றென்றும் புன்னகை, மனிதன் படங்கள் தமிழ் மக்களுக்கு ரொம்பவே பிடிச்ச படங்கள். ஒன்னு பொழுதுபோக்கு ஜானர், இன்னொன்னு சமூகத்துக்கு தேவையான படம்னு வெரைட்டியா பண்ணவர். இவர் உதயநிதியை வைச்சு பிரம்மாண்ட சம்பவம் ஒன்னையும் பண்ண இருந்தார். அது என்னங்குறதும் இந்த வீடியோல இருக்கு. அப்படி பண்ணியிருந்தா வெயிட்டான மல்டி ஸ்டாரர் படமாவும், தமிழ் சினிமாவுல முக்கியமான படமாவும் அது இருந்திருக்கும். அப்படி இயக்குநரா அஹமது பண்ண சம்பவங்களைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.
லயோலா காலேஜ்ல விஸ்காம் முடிச்சுட்டு, இயக்குநர் கதிர்கிட்ட காதல் தேசம், காதலர் தினம் படங்கள்ல உதவி இயக்குநரா வேலை பார்த்தார். அப்போ காலக்கட்டம் ரொம்ப பணக்கஷ்டமா இருந்ததால, சிங்கப்பூர் போய் விளம்பரப் படங்கள், தொலைக்காட்சிகள், ரேடியோனு 10 வருஷம் வேலை செய்றார். சொந்தமா கம்பெனி ஒன்னையும் ஆரம்பிக்கிறார். இப்போ காசு நிறைய வந்தாலும் திருப்தியான வாழ்க்கையா இல்லை. அதனால மறுபடியும் சென்னைக்கு வர்றார். இப்போ கைல இருந்த காசுல சென்னையில ஆபீஸ் போட்டு கதை தயார் செய்றார். முதல்ல நடிகர் ஜீவாகிட்ட ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ அப்படினு ஒரு கதை சொல்றார். கதையும் பிடிச்சுப்போக எல்லாமே தயாராகி கடைசி நேரத்துல ஷூட்டிங் டிராப். முதல் படமே டிராப் ஆனதால வருத்தப்பட்ட அஹமது அடுத்த படமா ஜெய்யை வைச்சு வாமனனை எடுக்கிறார். படம் அட்டர் ஃப்ளாப். இப்போ இந்த படம் ஃபாலோயிங் படத்தோட காஃபினு மக்கள் பேச ஆரம்பிக்கிறாங்க. அப்போதான் அஹமது ஒரு விஷயத்தை உணர்றார். இங்க இன்ஸ்பையர் பண்ணாலும், அதை காஃபியாத்தான் பார்க்குறாங்க.
அதனால இனிமே சொந்தமாத்தான் பண்ணனும். அதுக்கு எத்தனை நாள் வேணாலும் எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணி ‘இதயம் முரளி’னு ஒருகதையை தயார் பண்றார். ஆனா அடுத்து தயாரிப்பாளர் கேட்டது ஜனரஞ்சகமான கதை. ஓகே ரிலாக்ஸ்க்கு ஒரு படம் பண்ணலாம்னு என்றென்றும் புன்னகை படத்தை ஆரம்பிக்கிறார். இந்த படத்தோட கதை கேட்ட ஜீவா உடனே சம்மதம் சொல்ல, த்ரிஷாகிட்ட கதை சொல்லி அசத்தி ரெண்டுபேரையும் படத்துக்குள்ளே கொண்டுவந்தார் அஹமது. ஆனா முன்னாலயே நண்பர்களுக்குள் நடந்த கதைகள் நிறையவே வந்திருக்கு. அவ்ளோ ஏன்?, ஜீவாவே நண்பன் படத்துல நடிச்சிருக்கார். இப்போ எப்படி வேரியேஷன் காட்டுறதுனு யோசிச்சு, கதையை முழுசா தயார் பண்றார். இங்கதான் தன்னோட ஜீனியஸ் மூளையை யூஸ் பண்றார். இதுவரை மூன்று நண்பர்களுக்கான பாண்டிங்கை சினிமாத்தனம் இல்லாம, மூணுபேரைப் பத்தியும் முழுசா சொல்லணும்னு முடிவு பண்றார். அப்படித்தான் என்றென்றும் புன்னகை உருவானது. படத்தை ரெட்ஜெயண்ட் சார்பில் உதயநிதி வாங்கி ரிலீஸ் பண்ணார்.
படம் ரிலீஸான ரெண்டாவது நாளே பாசிட்டீவ் ரெஸ்பான்ஸை பார்த்து உதயநிதி அஹமதுவை ஆபீஸ்க்கு கூப்பிட்டு அட்வான்ஸ் கொடுத்தார். நீங்க கதை தயார் பண்ணிட்டு வாங்கனு சொல்ல, இதயம் முரளி கதையை தயார் பண்ணி அமெரிக்காவுல போய் லொகேஷன்கள்லாம் பார்த்துட்டு வந்து, கதைக்குள்ள இன்னும் 4 ஹீரோக்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து உறுதியும் ஆச்சு. இசை அனிருத் என முடிவும் ஆச்சு. ஹீரோயின்களுக்காக த்ரிஷா, சமந்தா, ஹன்சிகானு ஃபைனல் ஆனாங்க. இந்தப்படம் டேக்ஆஃப் ஆகுற கண்டிசன்ஸ்ல மொத்த பட்ஜெட்டும் எகிறிச்சு. அதனால இந்த படம் இப்போ வேணாம்னு முடிவு பண்ணி டிராப் ஆச்சு. அன்னைக்கு மட்டும் அது நடந்திருந்தா தமிழ் சினிமாவுல முக்கியமான மல்டிஸ்டாரர்ஸ் படமா அது இருந்திருக்கும். தமிழ் சினிமாவோட பிரம்மாண்ட படமாவும் அது இருந்திருக்கும்.
அடுத்து உதயநிதி கதை கேட்க, சார் ஒரு சீரியஸான ஸ்கிரிப்ட் இருக்கு. அது இந்த டிவிடியில இருக்கு. பார்த்துட்டு சொல்லுங்கனு ஜாலி எ.எல்.பியோட சிடியை கொடுக்கிறார். அதைப் பார்த்த உதயநிதி படத்தை பண்ணலாம், தமிழுக்கு ஏத்த மாதிரி படத்தை மாத்துங்கனு சொல்லிட்டார். அடுத்து உதயநிதி எதுலயுமே தலையிடலை. மனிதன் படத்தை பார்த்து பார்த்து இழைக்கிறார், அஹமது. அடுத்த ஒரே மாசத்துல ஷூட்டிங். படம் பக்காவா முடிஞ்சு ரிலீஸ் ஆகுது. அதுவரைக்கும் என்னங்க பொண்ணுங்க பின்னாடியே ஓடி நடிக்கிறார்னு முத்திரை குத்தப்பட்ட உதயநிதி, முதல்முதலா பொறுப்பான மனிதனா இந்த படத்துல நடிச்சிருந்தார். அதேபோல அழகு பொம்மையாவே வந்துக்கிட்டிருந்த ஹன்சிகா மோத்வானியை மெச்சூரிட்டியான பெண்ணா காட்டின முதல் படமும் மனிதனாத்தான் இருக்கும். மனிதன் படத்தோட ஒவ்வொரு ப்ரேம்லயும் அஹமதுவோட உழைப்பு இருந்தது. அதுலயும் ஹிந்தியில இருந்ததை தமிழ்ல அதன் உயிர் குறையாம மாத்தியிருந்தார். அதுக்கே நிறைய பாராட்டுக்கள் கிடைச்சது அஹமதுவுக்கு. கோர்ட் ரூம் டிராமாவா, ஹிந்தியில எலைட் ஆடியன்ஸ் மத்தியில வரவேற்ப்பா இருந்த படத்தை தமிழ்ல எல்லா மக்களும் பார்க்குற மாதிரி கொடுத்தார். இதுதான் மனிதன் சக்ஸஸ்க்கு மிகப்பெரிய காரணம். நினைச்சிருந்தா மறுபடியும் ஒரு காமெடி ஜானர்ல டிரை பண்ணிட்டு போயிருக்கலாம். ஆனா ஒரு ஜானர் ஒரு முறைதான்னு முடிவோட பயணிக்கிறார்.
ஹீரோயிச பில்டப்புகள் இல்லாத சினிமாவையே எடுக்க விரும்புவார். விளம்பரப் படங்கள்ல நடிச்சதால கேமரா வொர்க்கும் இம்ப்பார்ட்டண்ட் கொடுப்பார். அதுக்கு என்றென்றும் புன்னகை எனை சாய்த்தாளே பாட்டே சாட்சி. அதேபோல ஒரு வெறுமையிலகூட வித்தியாசம் காட்ட முடியும்னு மனிதன் படத்துல பொய் வாழ்வா பாட்டு மேக்கிங்ல பின்னியிருப்பார். இதுபோக மற்ற படங்கள்ல இருந்து இன்ஸ்பையர் ஆகுறதைகூட விரும்புறதும் இல்ல. தமிழ் சினிமாவுக்குள்ள இருக்கிற டெம்ப்ளேட்டுகளை உடைக்க முயற்சி செய்ற இயக்குநர்கள்ல முக்கியமானவர். ஒரு கதைய எழுதிட்டுத்தான் இப்போவும் ஹீரோ தேடுறார். இதுதான் அஹமதுவின் பலமா இருக்கு. 2009-ல இருந்து சினிமாவுல இதுவரைக்கும் மூணு படங்கள் மட்டுமே இயக்கியிருக்கார். இப்போ இறைவனும் தயாரா இருக்கு. அதுல ஜெயம் ரவியை ஹாரர் ஜானருக்கு டிரை பண்ண வச்சிருக்கார். அடுத்த படமா அவரை வச்சே ஜனகனமண படத்தையும் இயக்குறார். இயக்குநர் அஹமதுவோட படங்கள்ல வசனங்களுக்கும் சரி, காட்சிகளுக்கும் சரி அதிகமான ஸ்கோப் இருக்கும். அதேபோலத்தான் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடைவெளியும் அதிகமாவே இருக்கும். வரும் காலங்கள்லயாவது இடைவெளி அதிகமா கொடுக்காம நிறைய படங்கள் இயக்குவார்னு எதிர்பார்க்கலாம்.
Also Read – ஓப்பனிங்லாம் ஓ.கே.. ஆனால், என்னதான் ஆச்சு இவங்களுக்கு?
மனிதன் படத்தோட வெற்றிக்குப் பின்னால மறுபடியும் படம் பண்ணலாம்னு உதயநிதி கூப்பிட்டப்போ கூட, கதை தயாராகணும்சார்னு பதில் சொன்னவர்தான் இயக்குநர் அஹமது. ஏனோ தானோனு அவரசரகதியில ஒரு படத்தை பண்ணிடக் கூடாதுனு முடிவு பண்ணி இன்னைக்கு வரைக்கும் பயணிக்கிறார். இன்னும் சொல்லப்போனா தமிழ் சினிமாவோட மாத்த துடிக்கிற பிடிவாதக்காரனாத்தான் அஹமது வலம் வந்துக்கிட்டிருக்கார்.
எனக்கு என்றென்றும் புன்னகை படம்தான் ரொம்ப பிடிக்கும், உங்களுக்கு எந்த படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.