இயக்குநர் மகிழ் திருமேனி இலக்கிய வட்டத்தின் தீவிர வாசகர். கவிதைகள், சிறுகதைகள்னு பலவற்றையும் எழுதியிருக்கார். இந்த கதை சொல்லல்தான் மகிழ்திருமேனியோட பலம்னுகூட சொல்லலாம். இவர் பண்ணின படங்கள்ல கதைக்குள்ள புதுமையை வச்சு சொல்றதையும் அவர் பாலோ பண்ணிட்டே வந்துகிட்டிருக்கார். தடம் மூலமா எலோருக்கும் தெரியுற மாதிரி அழுத்தமான முத்திரையைப் பதிச்சவர். அதுக்கு முன்னாடி பண்ண சம்பவங்கள் ஏராளம். அவரோட யுனிக் சம்பவங்களைத்தான் இந்த வீடியோவைத்தான் பார்க்கப் போறோம்.

இயக்குநர் மகிழ் திருமேனி தமிழ் சினிமாவுல கதை சொல்றதுக்குனு தனியா ஒரு பாதையை தேர்ந்தெடுத்துக்கிட்டு அதுல பயணம் பண்றவர். இயக்குநர் செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன்னு ரெண்டு இயக்குநர்கள்கிட்டயும் சினிமாவைக் கத்துக்கிட்டார். அவங்க தனி பாணியை கடைபிடிச்ச மாதிரியே இவரும் தனி பாணியைத்தான் கடைபிடிக்கிறார். தடம் மூலமா எலோருக்கும் தெரியுற மாதிரி அழுத்தமான முத்திரையைப் பதிச்சவர். அதுக்கு முன்னாடி பண்ண சம்பவங்கள் ஏராளம். அவரோட யுனிக் சம்பவங்களைத்தான் இந்த வீடியோவைத்தான் பார்க்கப் போறோம்.
முன்தினம் பார்த்தேனே டூ கலகத் தலைவன்!
முதல் படமான முன் தினம் பார்த்தேனே படத்தின் மூலமா இயக்குநரா அறிமுகமானார்.
முதல் படத்தில் அதிகமான கெளதம் மேனனோட சாயல் இருந்தது. இயல்பான நகைச்சுவை, எதார்த்தமான காதல், ஒவ்வொருத்தரோட குணம், டயலாக்ஸ்னு எல்லாமே ரசிக்கும்படியா இருந்தது. காதல்ங்குறது ஒருமுறைதான் பூக்கும்ங்குற வழக்கமான சினிமா பல்லவியில் இருந்து விலகி சொல்லியிருந்தார், மகிழ் திருமேனி. படம் முழுக்க வாய்ஸ் ஓவர்ல விரியுற திரைக்கதை, கவித்து வசனங்களால வெயிட்டேஜ் கொடுத்திருப்பார். ஐ.டி. இளைஞர்களோட அசலான வாழ்க்கையை சரியா பதிவு செய்திருந்தார்னுகூட சொல்லலாம். ஆனா, படம் திரைக்கதையில் கொஞ்சம் சறுக்கியதால் பாக்ஸ் ஆபீசில் பெரியதாக பேசப்படவில்லை. அடுத்ததாக இன்னும் மெனெக்கெடலுக்கு தயாரானார்.
அடுத்தது தடையறத் தாக்க படம் இயக்குகிறார், மகிழ். டைட்டிலுக்கு ஏத்த மாதிரி படம் முழுவதும் தாக்குதல்தான். ஆரம்பத்துல ப்ளாட்டா போற திரைக்கதை இண்டர்வெல்லுக்கு அப்புறமாத்தான் சூடு பிடிக்கும். அந்த பரபரப்பு க்ளைமேக்ஸ் வரைக்கும் தொடர்ச்சியாவே இருக்குற மாதிரி வடிவமைச்சிருப்பார், மகிழ். அந்த வருஷத்துல சிறந்த ஸ்டண்ட்க்கான அதிகமான அவார்டுகளை வாங்கினது, இந்தப்படமாத்தான் இருக்கும். ஸ்டண்ட்டோட உச்சத்துக்குப்போய் இண்டர்வெல்லுக்குப் பின்னால ஒரு ஃபைட் இருக்கும். அருண்விஜய் வெறிகொண்டு அரிவாளை தூக்கிட்டு ஓடுற சீன்லாம் வெறித்தனமா இருக்கும். இதுக்கு முன்னாடி எத்தனை தாதா கதை பார்த்திருந்தாலும், இந்த படம் புதுவிதமா ஒரு பரபரப்பை ஏற்படுத்தி சீட்டோட நுனியிலயே உட்கார வைக்கும். அருண் விஜயின் மேன்லி மேனரிஸத்தைக் கொண்டு படத்தை தாங்க வைத்திருதந்தார், மகிழ் திருமேனி. கதையோட போக்குலயே காமெடியும் சொல்லியிருப்பார்.

இந்த முறை கவனிக்கத் தக்க இயக்குநரா மாறிட்டோம். அடுத்தபடம் சரியா இருக்கணும்னு மெனெக்கெட்டார். அந்த படம் மீகாமன். மீகாமனுக்கு கேப்டன் ஆப் த ஷிப்னு அர்த்தம். இந்த முறை திரைக்கதையில் செம டீட்டெய்லிங் இருந்தது. ஆரம்பத்துல இருந்து க்ளைமேக்ஸ் வரைக்கும் செஸ் விளையட்டை வைத்து கதை சொல்லிருந்தது, அதுவரைக்கும் தமிழ் சினிமா காணாத ஒன்று. இதுவும் பழைய கேங்க்ஸ்டர் கதைதான். ஆனால் அதற்குள் புது லீட் பிடித்து 1,000 கிலோ கொகெய்ன் பரிமாற்றம், முகம் காட்டாத கேங்ஸ்டர், புது எதிரி, அண்டர்கவர் போலீஸ் என புதுமையான விஷயங்களை புகுத்தி ஆக்ஷனை ஏகத்துக்கும் தெறிக்க விட்டிருந்தார் மகிழ் திருமேனி. குறிப்பாக சொல்லப்போனால் மாஃபியா உலகின் திகில் சித்ரவதைகளை அந்தந்த ஃப்ளேவரில் அப்படி அப்படியே கடத்தியிருந்தார். கடந்த முறை பாக்கி வைச்சிருந்த மொத்த ஸ்டண்ட்டையும் இந்த படத்துல இறக்கி வச்சிருந்தார். படம் விருவிருப்பான படம். இப்போவும் சிலர் இந்த படத்தைப் பார்த்து எவ்ளோ டீட்டெய்லிங் இருக்குனு சொல்லிட்டு இருக்காங்க. கைதி, விக்ரமுக்கு முன்னோடி இந்த மீகாமன். இந்த படத்துலயும் ஏதோ மிஸ்ஸூனு சொன்னாங்க.
என்னடா எப்ப பார்த்தாலும் ஏதாவது மிஸ்ஸூனு சொல்றீங்க. உங்களுக்கு ஆக்ஷனோட சேர்த்து டெக்னிக்கலா கதை சொல்றேன். இதைப் பார்த்துட்டு சொல்லுங்க. அப்படிங்குற ரேஞ்சுல நாலரை வருஷம் கழிச்சு தடம் படத்தை இயக்கினார். உருவம், செய்கைகள் என்று பலவும் ஒரே மாதிரி இருக்கும் Identical Twins என்ற இரட்டையர்களை வைச்சு கதையை உருவாக்கியிருந்தார். இதுவரைக்கும் யாரும் சொல்லாத கோணத்தில் திரைக்கதையை அமைத்திருந்தார், மகிழ். கொஞ்சம் பிசகினாலும் புரியாமல் போகுற கதையை, கச்சிதமான திரைக்கதையாலும், கூர்மையான வசனங்களாலும் மெருகேத்தியிருந்தார்னுகூட சொல்லலாம். அதுலயும் க்ளைமாக்ஸ் காட்சி உட்சபட்ச தரத்தில் இருந்தது. இந்த முறை அந்த மிஸ்ஸான ஒன்னை பிடிச்சிட்டார், படம் தெறி ஹிட். அந்த வருஷ ப்ளாக் பஸ்டரில் ‘தடம்’ தன்னோட தடத்தை நல்லாவே பதிச்சது. மகிழ்திருமேனியும் முழுசா தடம் பதிச்சார்.
கலகத்தலைவன் – கார்ப்பரேட் அத்துமீறலால் பாதிக்கப்படும் ஓர் அப்பாவிக் குடும்பத்தை ஒரு புள்ளியில் இணைக்கும் கதை. இண்டர்வெல் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகளால் விறுவிறுப்பைக் கூட்டி சீட்டின் நுனிக்கே வரவைப்பது அக்மார்க் மகிழ் திருமேனி மேஜிக். டெக்னிக்கலான காட்சிகளுக்கு கொடுத்திருந்த டீட்டெய்லிங் திரைக்கதையோட பலம்னுகூட சொல்லலாம். இவரோட இயக்கத்துல வந்த மற்றபடங்கள் போலவே ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்துக்கு பெரிய பலம். ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலமா வேகம் செகண்ட் கியருக்கு வந்தாலும், அடுத்தடுத்து வேகத்தை டாப்கியருக்கு மாற்றியிருக்கிறார், மகிழ் திருமேனி. ஹீரோவுக்கு ஏற்ற நடிப்பை வாங்குவதும் மிகிழுக்கு ப்ளஸ்தான்.

மகிழ் திருமேனி பலம்!
மகிழ் திருமேனி இலக்கிய வட்டத்தின் தீவிர வாசகர். கவிதைகள், சிறுகதைகள்னு பலவற்றையும் எழுதியிருக்கார். இந்த கதை சொல்லல்தான் மகிழ்திருமேனியோட பலம்னுகூட சொல்லலாம். இவர் பண்ணின படங்கள்ல கதைக்குள்ள புதுமையை வச்சு சொல்றதையும் அவர் பாலோ பண்ணிட்டே வந்துகிட்டிருக்கார். விறுவிறுப்போட உச்சத்துக்கு கொண்டுபோறதை இப்படிக் கூட சொல்லலாம். ராட்டினம் வேகமா சுத்திட்டு இருக்கும்போது, கீழ இருந்து மேல் போற வரைக்கும் நார்மலா இருக்கும். மேல இருந்து திடீர்னு கீழ இறங்குறப்போ அடி வயித்துல ஒரு கலக்கமான உணர்வு இருக்கும். அந்த ஃபீலை தன் திரைக்கதையால கொண்டுவரக்கூடியவர்னு சொல்றதும் பொருத்தமா இருக்கும். இதுபோக டெடி படத்தோட வில்லனாவும் மகிழ் திருமேனி நடிச்சிருக்கார். இமைக்கா நொடிகள் படத்துக்கு அனுராக் காஷ்யப்புக்கு குரல் கொடுத்ததும், மகிழ் திருமேனி தான். இதுவரைக்கும் அவரோட படங்கள்ல எடுத்துக்கிட்ட கதையில விறுவிறுப்பான கதை சொல்லல்ங்குற ஒரு யுனிக்கான விஷயத்தை பாலோ பண்ணிட்டே வர்றார்.
மகிழ் திருமேனியோட படங்கள்ல எனக்குப் பிடிச்சது, மீகாமன்தான். உங்களுக்கு பிடிச்ச படத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
joaz0h