மோகன் ஜி படங்களை நிறைய பேர் டைப் டைப்பா ரோஸ்ட் பண்ணிட்டாங்க. என்னத்த விமர்சனம் பண்ணாலும் நாடகக் காதல், துப்பட்டா போடுங்க தோழினுதான் படம் எடுக்கப்போறாரு. அதுனால, அவரோட படத்த விட்டுட்டு.. பேட்டிகள்ல அவர் பேசுனதை வைச்சு, அவரை வைச்சு செய்வோம். ரொம்ப நாளா இந்த வீடியோ வேணாம்னு விட்டோம். அவ்வளவு பெரிய ரைட்டரை சமூகம் கவனிக்காமல் விட்டா, அந்த சாபம் சமூகத்தை சும்மா விடாது. அதுனால ஸ்டார்ட் பண்ணலாமா?
நத்திங் பெர்சனல்.. ஜஸ்ட் சர்வீஸ்..
* நான் ஒரு ரைட்டர்.. தினத்தந்தில கன்னித்தீவை தவறாமல் படிப்பேன்..
* நான்தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடங்குனதே..
* ஃபேக் மேரேஜ்க்கு தமிழ்ல நாடகக் காதல்..
* குமார்னு பெயர் வைச்சாலே அக்யூஸ்ட்தான் தெரியுமா..
* எங்க வீட்டுல ஜாதி சொல்லி வளர்க்கல. ஸ்கூல் டி.சி பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன்..
* நூறு நாள் வேலை திட்டத்தால விவசாயமே அழியுது..
* ஆல்ஃபா ஸ்கிரிப்ட்னா என்னனு தெரியுமா..
* நான் விளையாடுற கேம் விளையாட்டு இல்லை..
ச்சே.. எவ்வளவு அருமையான ஸ்டேட்மென்ட்ஸ் பாருங்க! இதெல்லாம் மோகன் ஜி அண்ணன் ஆஃப் ஸ்கிரீன்ல சொன்னதுதான். இதெல்லாம் கேட்டப்போ ஒண்ணுமே புரியலை. வீட்டுக்கு போய் உட்கார்ந்து யோசிச்சு பார்க்கும்போதுதான் அண்ணன் சொன்ன விஷங்கள் எல்லாம், சாரி.. விஷயங்கள் எல்லாம் ஒவ்வொன்னா புரிஞ்சுது.
மோகன் ஜியோட சினிமா ஜர்னிய எடுத்துப் பார்த்தா, அதுல ஒண்ணும் இல்லை கீழ போட்ருனு நீங்க நினைக்கலாம். ஆனால், அப்படியில்லை. இண்டிபென்டன்ட் ஃபிலிம் மேக்கரா, அஸிஸ்டெண்டா இல்லாமல் வந்துருக்காரு, இதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமானு கத்தலாம். அதெல்லாம் கத்துக்கிட்டு என்ன பண்றாருன்றதுதான முக்கியம். பிற்போக்குத்தனமா பேசிட்டு சுத்துற அவரை சீரியஸா விமர்சனம் பண்ண 1000 பேர் இருக்காங்க, சின்சியரா விமர்சனம் பண்ண நாம தான் இருக்கோம். வன்ம பகவானே நீ மட்டும் குறுக்க வந்துராத..
அண்ணன் எழுத்தாளர்னு இப்போ சொல்லல, ஆரம்பத்துல இருந்தே இண்டர்வியூக்கள்ல சொல்லிருக்காரு. நாமதான் கவனிக்காமல் விட்டுட்டோம். சரி, நீங்க ரைட்டர்னு சொல்றீங்க. எப்படி ஆர்வம்லாம் வந்துச்சு, என்னலாம் படிப்பீங்கனு கேட்டா.. “சின்ன வயசுல, வீட்டு பக்கத்துல முடி வெட்டுற கடை ஒண்ணு இருக்கும். அங்க டெய்லி தினத்தந்தி பேப்பர் வரும். அதுல கன்னித்தீவுலாம் விடாமல் படிப்பேன். ஸ்கூல் படிக்கும்போது சமூக விழிப்புணர்வு சார்ந்து கட்டுரை எழுதியிருக்கேன்”னு சொல்றாப்புல. சீரியஸா தெரிஞ்சுதான் பேசுறீங்களா? இதாவது பரவால்ல, உலகத்துல எந்த டைரக்டரும் எழுத்தாளரும் பண்ண சாதனைலாம் பண்ணியிருக்காரு. டேபிள்ல அண்ணன் கதை எழுத உட்கார்ந்தா மூணு மணி நேரத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதுவாரு. 2:45 நிமிஷத்துக்கு அந்த ஸ்கிரிப்ட் ஸ்கிரீன்ல இருக்கும். எப்படி.. முடியுமா? எல்லாம் தீவிர வாசிப்பால வந்தது. ஜெயமோகன் சார், என்னத்த படிச்சு, நீங்களாம் பெரிய ஆள் ஆகி, இலக்கியத்தை காப்பாத்தி, உங்க எதிர்காலத்தை நினைச்சா கவலையா இருக்கு.
சீமானோட டெம்ப்ளேட் ஒண்ணு சுத்திட்டு இருந்துச்சு, என் மனைவிக்கே தெரியாத விஷயம் ஒண்ணு சொல்லவா, நான் தான் மெஸ்ஸி.. நான் தான் அஜித்னு.. அதேமாதிரிதான், அண்ணன் இப்போ சொல்லிருக்காரு. ஆர்குட் காலத்துல இருந்து இயங்கிட்டு இருக்கேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடங்குன 7 பேர்ல நானும் ஒருத்தர். நானும் அண்ணன் சொன்னதுல இருந்து தேடுறேன். அவர் பெயர் சிக்கவே இல்லை. அன்னைக்கு சோஷியல் நெட்வொர்க்லலாம் அண்ணன் இல்லைனு வைங்க. இன்னைக்கு ஜல்லிக்கட்டுலாம் நடந்துருக்காது. அவ்ளோ எக்ஸ்பர்ட் அவரு. கத்தி பி.ஜி.எம்லாம் பேக் ரௌண்ட்ல போட்டு, மேப்பை எடுத்து வைச்சு, பிளான்லாம் போட்டு எக்ஸிகியூட் பண்ணி ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திருக்காரு. இவ்வளவு ஏன் நம்ம மார்க்ஸ் இருக்காருல, அவரே மோகன் ஜி ஃபேன்தான்.
பிக்பாஸ் விக்ரமன், ஃபேமஸ் ஆனது மோகன் ஜி இன்டர்வியூலதான். இப்படி அண்ணன் அடி வாங்கி பல பேரை வளர்த்து விட்ருக்காருனா பார்த்துக்கோங்க. சரி, அதில்ல விஷயம். அவர்கூட நடந்த நேர்காணல்ல அவ்வளவு வன்மத்தோட பேசுவாரு. எதுக்கு இப்படிலாம் பேசுறாருனு நமக்கு அவர்ஷன் வந்துருது. எக்ஸாம்பிள்க்கு சொல்லணும்னா, நாடகக்காதல்னா என்னனு கேட்டா, ஒரு பொண்ணை ஒருத்தன் ஒரு விஷயத்துக்காக ட்ரை பண்றான். அது நடக்கலனு தெரிஞ்சதும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்றான். அதுதான் நாடகக்காதல். என்னங்க காதலே வரலைனு கேட்டா, அதுதாங்க நாடகக்காதல்ன்றாரு. மோகன் ஜி அண்ணன் கொடுத்த இந்த எக்ஸாக்ட் ஸ்டேட்மெண்ட் புரிஞ்சுதுனா, ஜீனியஸ் சார் நீங்க. அந்தப் பொண்ணே காதலிக்கலைனாலும் பரவால்லயாம்.. அதுதான் நாடகக்காதலாம். ஷக்தி சிவாவ லவ் பண்ணலயாம் மொமண்ட்.
திரௌபதில குமார்னு பெயர் வைச்சாலே அக்யூஸ்ட்தான்னு டயலாக் வரும். அதை வைச்சு விக்ரமனுக்கும் இவருக்கும் பெரிய டிபேட் ஒண்ணு நடக்கும். போற போக்குல, குமாருன்ற பேருல எத்தனை அக்யூஸ்ட்டை நான் காட்றேன்னு பார்க்குறீங்களானு சொல்றாரு. மோகன்னு பெயர் வைச்சாலே அவங்க அயோக்கியனா தான் இருப்பாங்கனு சொன்னா, ஏத்துப்பாரா.. அதாவது வாய் இருக்கு பேசக்கூடாது. நான்தான் ஜேம்ஸ் கேமரூன்னு எழுதக்கூடாது. இதுல, மிஷ்கினுக்கு புடிச்ச செவன் சாமுராய் எடுத்த மாதிரி.. விளையாடுறது சாதாரண விளையாட்டு இல்லை. சீரியஸான விளையாட்டுனு பிஞ்சு போன பஞ்ச் வேற.
Also Read – `சூப்பர் ஸ்டார்’ பட்டம் `வேல்யூ’ என்ன? அந்த இடம் அடுத்து யாருக்கு?
பிரதீப் ரங்கநாதனோட குரு போல.. என்னனா, ஸ்கூல் டி.சி பார்த்துதான் ஜாதி தெரிஞ்சுகிட்டேன்னு, வீட்டுல என்ன அதெல்லாம் சொல்லி வளர்க்கலன்றாரு. சரி, என்னமோ அரைகுறைனு விட்டுடலாம். ஆனால், அடுத்து அவர் சொன்னதுதான் முக்கியமான விஷயம். ஸ்கூல் டி.சில அவரோட கேஸ்ட் நேம் இருந்துருக்கு. அதைப் பார்த்து ஈர்ப்பாகிடுச்சாம். அந்தப் பேரை தன்னோட பெயர்ல சேர்த்து வைச்சிக்கிட்டாராம். கருத்து தெரிஞ்ச பிறகு, அதாவது அவருக்கு நினைவுலாம் தெரியாது. எல்லாமே கருத்துதான். கருத்து தெரிஞ்ச பிறகு சாதி பத்தின புரிதல்லாம் வந்த பிறகு, அதை தூக்குனா சுயநலவாதி ஆயிடுவாராம். ஆர்குட் காலத்துல இருந்து வைச்ச பெயர். எப்படி தூக்குறதுன்றாரு. ஆர்குட்டயே தூக்கிட்டாங்க. என்னத்தையாவது பேச வேண்டியது.
ஒரு பையன்கூட சாதி பத்தின விவாதம் நடக்கும். அதுல அந்தப் பையன், “அம்மாப்பா சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கோங்க. சாதிங்குறது செக்யூரிட்டினு சொல்றீங்க. நான் ஏன் அப்படி கல்யாணம் பண்ணனும்?”னு கேக்குறான். உடனே நம்மாளு பண்ணிக்காதனு பதற ஆரம்பிச்சிட்டாரு. “என்னோட அம்மாப்பா அறியாமைல இருக்காங்க. சாதின்ற பெயர்ல காலம் காலமா அடிமைப்படுத்தப்பட்ருக்காங்க. என்னை படிக்க வைச்சிருக்காங்க. நான் சமூக ஜீவியா எல்லா இடத்துக்கும் போய் பழகுறேன். நான் தான் அதை உடைக்கணும்னு சொல்றாரு”. அடுத்து, எதைப் பார்த்து கல்யாணம் பண்ணுவனு கேப்பாரு. அந்தப் பையன் டஃப் கொடுத்து, “அழகு பார்ப்பேன். அறிவு பார்ப்பேன்”னு சொல்லுவான். கவுண்டர் கொடுக்க நினைச்சு நம்மாளு, “உங்கம்மாப்பா எதுவும் பார்க்க மாட்டாங்க. கடைசி வரை உங்களுக்கு செட் ஆகுமானு பார்ப்பேன்”னு சொல்லுவாரு. அதுக்கு அந்தப் பையன், அண்ணே நான் படிச்சிருக்கேன்னு சொல்லுவான். மோகன் ஜி உங்களுக்கு இன்னுமா புரியல.. படிங்கணே!
பழைய வண்ணாரப்பேட்டை கம்யூனிஸ்ட் ஐடியாலஜியாம். இவரோட ஐடியாலஜி என்னனு கேட்டா, இங்க ஒரு பிரச்னை இருக்கு. என்ன உண்மைனு மக்களுக்கும் சொல்லணும். மீடியாக்கள் அதை சொல்ல விரும்பல. நான் அதை சொல்ல விரும்புறேன். அதுதான் என்னோட ஐடியாலஜின்றாரு. ஷ்ப்பா.. முடியல. இடைல நான் மக்களோட இருக்கேன்னு வேற, நாங்கலாம் என்ன சுடுகாட்டுலயா இருக்கோம்? பிரச்னை பிரச்னைன்றாரே என்னதான் பிரச்னை?
எல்லாம் தெரிஞ்சவன் சும்மா இருப்பான்.. எதுவுமே தெரியாவதவன் கத்தினு இருப்பான்னு சொல்லுவாங்க. நம்ம அண்ணனும் அதுதான்.. திடீர்னு ஆல்ஃபானா என்ன தெரியுமானு நம்மள்ட்ட கேக்குறது. நமக்கு எப்படி தெரியும்? ஆல்ஃபானா பாலிவுட்ல சீன், டயலாக் உட்பட எல்லாத்தையும் கேக்குறதாம். அதைத்தான் ஆல்ஃபா ஸ்கிரிப்ட்னு சொல்லுவாங்களாம். இதெல்லாம் அட்லீகிட்ட, முருகதாஸ்கிட்ட கேட்டா தெரியும். எங்ககிட்ட வந்து, புள்ள பூச்சிய அடிச்சே டான் ஆக வேண்டியது.
பொன்னியின் செல்வன் படம் வலதுசாரி கருத்துக்கொண்ட படம். அப்படிலாம் தமிழ் சினிமால இருக்க கூடாது. கள்ளக்காதல் பத்தி பேசுறது, சாதி பார்த்து அப்பாம்மா கல்யாணம் பண்ணி வைச்சாதான் சேஃப்டி இருக்குனு எக்கச்சக்கமான ஆஃப் பாயில் கருத்துகளை அண்ணன் சொல்லியிருக்கார், சொல்லுவார், சொல்லிக்கொண்டே இருப்பாரு. சரி, எதாவது தெரியாமல் சொல்லியிருப்பாரு. விடுடா, அதையெல்லாம் எடுத்துட்டு வந்து கலாய்க்கிறனு நீங்க நினைச்சா, ஃபைனல் டச் ஒண்ணு மட்டும் சொல்றேன்..
“நான் எல்லாத்தையும் தெரிஞ்சு பிளான் பண்ணிதான் பண்றேன். அதை தெரியாமல் வைச்சுட்டேன்னு சொன்னா, தோத்துட்டேன்னு அர்த்தம். நான் எல்லாமே தெரிஞ்சுதான் வைச்சுருக்கேன்.. அதுனால, நான்லாம் எதுக்கும் ஃபீல் பண்ண மாட்டேன்”னு ஓப்பன் ஸ்டேட்மெண்ட். இப்போ சொல்லுங்க, இவரை செய்றதுல என்ன தப்பு?