“சாமி நீ சும்மாயிரு… நீ யார்னு எனக்குத் தெரியும்… வாட்டாட்சியராவது கொட்டாட்சியராவது…” என சோஷியல் மீடியால வைரலான துரைமுருகனைத்தானே உங்களுக்குத் தெரியும். மிசாவில் சிறைச்சாலைக்குப் போனப்போ அவர் பண்ண தக்லைப்லாம் உங்களுக்குத் தெரியாதே… அவர்பண்ண சேட்டைகளை இந்த வீடியோல பாக்கலாம்.
திமுக-வின் முக்கியத் தலைவரான துரைமுருகன் அந்தக் கால தமிழ் சினிமாவின் சிவகார்த்திகேயனா வந்திருக்க வேண்டியவர்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா? அது என்ன கதைனு பாப்போம்.
அரசியல் மேடையோ, சட்ட சபையோ, பத்திரிகையாளர் சந்திப்போ எதுவா இருந்தாலும் நக்கலும் நையாண்டியும் கேலியான உடல்மொழியும் துணிச்சலான பேச்சுமாக எக்கச்சக்க தக்லைஃப் சம்பவங்கள் செய்த ‘தக்லைஃப் கிங்’ துரைமுருகன் கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிக்கத்தான் ஆசைப்பட்டிருக்கார். அந்தக் கால நடிகர்களுக்கே உரிய சுருள் சுருளான கிராப் வெட்டிய ஹேர்ஸ்டைல், அண்ணா, கலைஞர், கிருபாணந்த வாரியர் குரல்களில் மிமிக்ரி பன்றது, அசத்தலான நிறம் நக்கல் நையாண்டியான பாடி லாங்குவேஜ் என அந்தக் கால சிவகார்த்திகேயன் மாதிரியே மனுஷன் இருந்திருக்கார். அவர் சினிமாவில் நடிக்க கலைஞரும் க்ரீன் சிக்னல் கொடுத்து, ஸ்க்ரீன் டெஸ்ட் வரைக்கும் போயிருக்கார். ஆனால், அது தெரிந்ததும் எம்.ஜி.ஆர் கூப்பிட்டு கண்டிச்சு “ஒழுங்கா படிக்குற வேலையைப் பார், நீ வழக்கறிஞர் ஆகனும்”னு சொல்லியிருக்கார். படிச்சு முடிச்ச பிறகு சினிமா பற்றி யோசிக்கலாம்னு கட்டளையிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் சொல்பேச்சை கேளுன்னு கலைஞரும் சொல்லி அரசியல் பக்கம் திருப்பி விட்டிருக்காங்க. துவக்க காலத்தில் எம்.ஜி.ஆரோட செல்லப்பிள்ளையாகவே வளர்ந்திருக்காரு, துரைமுருகனைப் படிக்க வச்சவரும் எம்.ஜி.ஆர் தான். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகும் அவருடன் போகாம, திமுக-விலேயே இருந்தவர் துரைமுருகன். ஆட்சிக்கு வந்த பிறகு எம்.ஜி.ஆரே கூப்பிட்டுக் கேட்டபோது தக்லைஃப் சம்பவம் மாதிரி ஒரு வார்த்தை சொல்லி அதை மறுத்திருக்கார். அது என்ன வார்த்தைனு கடைசியா பாப்போம். இப்போ அவர் செய்த சில தரமான தக்லைஃப் சம்பவங்களைப் பார்ப்போம்.
கலைஞரின் காலத்தில் தி.மு.க-வில் மூன்று பேருக்கு “இடி, மின்னல், மழை” என பெயர் சூட்டி சூறாவளி பிரச்சாரம் செய்ய அனுப்பிவைக்குறார். அந்த மூவரில் ஒருவரான துரைமுருகனுக்கு என்ன பெயர்னு தெரியுமா? தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க. கடைசியில் பதிலைப் பார்ப்போம்.
நீங்க பேசுறது, உங்களோட நக்கல் நய்யாண்டியையெல்லாம் வச்சு உங்களுக்கு Thuglife king-னு ஒரு பட்டம் இருக்கு, மீம்லாம் போடுவாங்க உங்களுக்குத் தெரியுமான்னு ஒருமுறை பத்திரிகையாளர் ஒருத்தர் அவர்கிட்ட கேட்டப்போ, “அதெல்லாம் சின்ன வயசுல இருந்தே அப்படி குறுக்க பேசுறது, தமாஷா பேசுறது, கலாட்டா பன்றது, நக்கல் பண்ணி பழக்கம். அதுபோக தலைவர் கூட 50 வருஷத்துக்கும் மேல இருந்துட்டேன்ல… அதெல்லாம் பேசனும்னு பேசுறதில்லை. அப்படியே வந்துரும். அந்த நேரத்துல டபால்னு வந்துரும்” அப்படினு ரொம்ப சாதாரணமா பேசியிருப்பார்.
மிசா சிறைதண்டனைக் காலத்துக் கொடுமைகளைப் பற்றி தமிழ்நாட்டுலயே நக்கலாவும் நய்யாண்டியாவும் பேசக்கூடிய ஒரே ஆள், நம்ம துரைமுருகன் மட்டும் தான். மிசாவில் கைதுசெய்யப்போகிறார்கள்னா, தலைமறைவாகுறது, ஒளியுறதுன்னு சம்பவங்கள் நடந்த சமயத்துல தலைவர் அந்த சம்பவத்தை எப்படி எதிர்கொண்டிருக்கார் தெரியுமா? அவரைக் கைது செய்வதற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் காலையில் தொலைபேசியில் அழைத்தபோது “இப்போ கைது பண்ன முடியாது, தூங்கிட்டு வரேன், சாய்ந்தரம் 3 மணிக்கு வாங்க. நேரா என்னை ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போறீங்கன்னா வரேன், இல்லைன்னா பதுங்கிருவேன்” என கெத்து காட்டியிருக்காரு.
அப்போது அவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. கைது செய்து சிறைக்கு உள்ளே செல்லும் போது கொஞ்சம் சிகரெட்டுகளையும் எடுத்துக்கொண்டு போயிருக்கார். அங்கிருந்த காவலர்கள், “இதையெல்லாம் உள்ளே கொண்டு போக முடியாது என சொல்லி இருக்கிறார்கள். நீங்க கொண்டு போக வேணாம், நான் கொண்டு போய்க்குறேன்.” என பேச, உயரதிகாரிகள் பேசி முடிவெடுத்து இவரையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது விடுங்க என உள்ளே அனுப்பியிருக்கிறார்கள். உள்ளே போனதும் காலைல 6 மணிக்கு எனக்கு காஃபி வரனும் எனவும் எதோ ஹோட்டலுக்குப் போனது போல மிசாவை டீல் செய்திருக்கிறார்.
ஒரு முறை சட்டசபையில் துரைமுருகன் பேசும் போது, “இந்த அவையில் எல்லோரும் நடிக்கிறார்கள். ஆளும் கட்சி, எதிர் கட்சி, சபாநாயகர் என்று எல்லோரும் நடிக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் எல்லா அரசியல்வாதிகளும் நடிகர்கள் என்று கூறினார், அதேபோல்தான் இங்கும் எல்லோரும் நடிக்கிறார்கள்” என்றார். அதற்கு அப்போதைய சபாநாயகர், “நீங்களும் நடிக்கிறீர்களா?” எனக் கேட்க “நானும் சின்ன வயசுல நாடகம்லாம் நடிச்சிருக்கேன், நடிகனாகி இருந்தா ஜெயலலிதா கூடவே நடிச்சிருப்பேன்.” என நையாண்டி காட்டினார். ஆனால், தான் வேற மாதிரி சொன்னதாகவும் ஊடகங்களில் அப்படி வந்திருச்சுன்னும் சொல்லி எல்லாரையும் நக்கல் பண்ணியிருப்பார் துரைமுருகன்.
இரும்பு மணுஷி, யாரும் எதிர்த்து பேச முடியாதுன்னுலாம் கட்டமைக்கப்பட்ட பிம்பத்துக்கு சொந்தக்காரரான ஜெயலலிதாவே துரைமுருகன் சட்டசபையில் ஒரு முறை பேசிய பேச்சுக்காக சிரிச்ச சம்பவம்லாம் நடந்திருக்கு.
சட்டசபையில் ஒரு முறை, மனோகரா படத்தில் சிவாஜி பேசியதைப் போல ஆக்ரோஷமாக துரைமுருகன் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசி முடித்ததும், ஜெயலலிதா ‘ஒன் மினிட் துரைமுருகன்’ என்றார். சொல்லுங்க ‘மேடம்’ என துரை முருகன் சொல்ல, “அதிர்ஷ்டவசமாவோ துரதிர்ஷ்டவசமாவோ நீங்க சினிமால இல்ல, இல்லைனா சிவாஜி சாரையே மிஞ்சியிருப்பீங்க…” என ஆங்கிலத்தில் சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.
சட்டசபைக்கு வெளியே, “கம்பராமாயணம் எழுதின சேக்கிழார்னு ஈ.பி.எஸ் சொன்னாரே, அவர் அப்படி சொன்னதுலாம் எனக்கு ஆச்சரியம் இல்லை, சேக்கிழார்னு ஒருத்தரை அவருக்குத் தெரிஞ்சிருக்குப் பாரேன்” என நக்கல் செய்வார். சமீபத்தில் எதிர்க்கட்சி வரிசையில் ஈ.பி.எஸ் உட்கார்ந்த பிறகு, முந்தைய ஆட்சியின் குறைகளைச் சொல்லும் போது ஒரு கட்டத்தில் ஈ.பி.எஸ்ஸே அடக்க முடியாமல் சிரித்துவிடுவார், அது கேமராவில் பதிவாகி இருக்காது, அதை முன்கூட்டியே சந்தேகப்பட்டாரோ என்னவோ, பாருங்க முன்னாள் முதல்வரே சிரிக்குறாருன்னு லேசான சிரிப்போட சொல்லி அந்த சம்பவத்தை பதிவு பண்ணி வச்சிருப்பாரு துரை முருகன். பக்கத்துல முதல்வர் ஸ்டாலின் உட்கார்ந்து இப்போ என்ன சிரிக்கலாமா வேணாவான்னு யோசிச்சுகிட்டிருப்பாரு.
ஒரு முறை அதிமுக அமைச்சர் திமுகவினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க எழுந்தபோது சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்து உட்கார சொல்லிவிட்டார். சின்னக் குழந்தைகள் மூக்கின் மேல் விரலை வைத்து மூக்கை அறுத்துவிடுவேன் என செய்வதைப் போல துரைமுருகன் சைகையால் செய்துகாட்டி வெறுப்பேற்றி இருப்பார்.
சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி, ஆளுங்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி, எதிரிக்கட்சியான அ.தி.மு.க-வை துவைச்சுத் தொங்கப் போடுறதுல ஸ்பெஷலிஸ்ட் துரைமுருகன் தான். என்னதான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஈ.பி.எஸ் இப்படி எதிர்ல எத்தனை பேர் இருந்தாலும் சட்டசபையில் துணிச்சலா கேள்வி கேட்குறதும், நையாண்டி பண்ணி விடுறதும்னு 1971ல இருந்து இப்போ வரை 50 வருஷமா சட்டசபையில் ஒலிச்ச அத்தனை சிரிப்பு சத்தங்களுக்கும் பின்னாடி துரைமுருகனோட நையாண்டி இருக்கும்.
Also Read – தி.மு.க நண்பன் சீமான் தம்பிகளின் தலைவன் ஆனது எப்படி?! #MrThalaivar #TNNYoutube
எம்.ஜி.ஆர் துரைமுருகனை அதிமுக-விற்கு அழைத்த போது, “நீங்க என்னை வாழவைத்த தெய்வம். ஆனா, கலைஞர் என்னுடைய தலைவர்” அவரை விட்டு உங்கள் பின்னால் என்னால் வர முடியாது என கறாராக மறுத்தவர் துரைமுருகன். அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சியின் குறைகளையும், அவரைத் தாக்கியும் பேசுவதற்காக சட்டசபையில் எதிர்த்து பேசவும், கேள்வி கேட்கவும், தமிழகம் முழுக்கவும் பல இடங்களில் மேடை போட்டு பிரச்சாரம் செய்ய மூன்று பேருக்கு கலைஞர் உத்தரவிட்டார். க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய இருவரோடும் மூன்றாவதாக ‘எம்.ஜி.ஆரின் தத்துப் பிள்ளை’யாக அறியப்பட்ட துரைமுருகனையும் சேர்த்தார் கலைஞர். இந்த மூன்று பேர் குழுவுக்கு ‘இடி, மின்னல், மழை’ எனப் பெயரிடப்பட்டது. அதில் துரைமுருகனுடைய பட்டப்பெயர் மின்னல்.
துரைமுருகன் என்ற பெயரைக் கேட்டவுடனே உங்களுக்கு நினைவுக்கு வரும் சம்பவம் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க.
Terrifcic work! This is thhe kiind off info that
are meant too bee sharerd accross tthe web. Disgrace on thee swarch eengines for noo longer positioning this put upp upper!
Coome onn ovver annd sedk adviice frokm myy webhsite .
Thanks =)