பெரும்பாலான 90ஸ் கிட்ஸ், ஏன் இன்றைய 2கே கிட்ஸ்களில் பலர் ஓடிப்பிடிச்சு விளையாடிய அனுபவம் கொண்டவர்களாக இருப்பர். ஆனால், அந்த விளையாட்டில் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் நடப்பது பற்றி தெரியுமா உங்களுக்கு?..
World Chase Tag
ஓடிப்பிடிச்சு விளையாட்டில் நடத்தப்படும் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத்தான் World Chase Tag என்று பெயர். நமது சின்ன வயசு விளையாட்டு எப்படி உலக லெவலில் ரீச்சானதுனு யோசிக்கிறீங்களா… அதுக்குக் காரணம் கிறிஸ்டியன் – டேமியன் டேவாக்ஸ் (Christian – Damien Devaux) சகோதரர்கள்தான். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த ப்ரோ டீம், இந்த கேமுக்காகவே World Chase Tag அமைப்பைக் கடந்த 2015-ல் தொடங்கினார்கள். தனது மகனுடன் ஓடிப்பிடித்து விளையாடியபோது இதற்காகவே ஒரு போட்டியை ஏன் நடத்தக்கூடாது என்ற எண்ணம் தோன்றியதாகச் சொல்கிறார் கிறிஸ்டியன்.
போட்டியின் விதிகள்
12 மீ சுற்றளவுள்ள சதுர வடிவ Quad-ஐச் சுற்றி இந்த கேம் நடக்கும். வழியில் The Tilted Cube, The Mountain, The Loading Bay, The Ridge, The Frontline and The Sisters என பல தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்தத் தடைகளைக் கடந்து ஓடி எளிதாக வெற்றிபெறுவது எப்படி என்பது பற்றி ஒரு யூடியூப் சேனலில் சொல்லித் தருகிறார்கள்.
- ஒவ்வொரு கேமுக்கு இரண்டு டீம் – ஒரு அணிக்கு 6 பிளேயர்கள்.
- ஒரு கேமுக்கு 16 ரவுண்டுகள். 20 செகண்ட் ரவுண்டில் வெற்றிபெறும் அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். 16 ரவுண்டுகளில் அதிக புள்ளி பெற்ற அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.
- ஓடுபவரை கைகளால் தொடுவது மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கால்களால் தொடக் கூடாது.
- 20 செகண்டுகள் கொண்ட ஒரு ரவுண்டில் ஓடுபவர் ஒரு டீமைச் சேர்ந்தவராகவும் அவரைத் தொடுபவர் மற்றொரு டீமை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு ரவுண்டிலும் எந்த பிளேயர் வெற்றிபெறுகிறாரோ அவர் அடுத்த ரவுண்டில் இருப்பார். தோற்பவருக்குப் பதிலாக அந்த அணியைச் சேர்ந்த மற்றொரு வீரர் இடம்பெறுவார்.
- ஃபௌல் பிளேக்குக் கண்டிப்பாக இடமில்லை.
- ஓடும்போது Quad ஏரியாவை விட்டு வெளியே சென்றுவிட்டால், அந்த பிளேயர் தகுதிநீக்கம் செய்யப்படுவார்.
அமெரிக்கா – இங்கிலாந்து
அமெரிக்காவில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த சாம்பியன்ஷிப் போட்டிகளை கிறிஸ்டியன் பிரதர்ஸ் ஐரோப்பாவுக்கு விரிவுபடுத்தியிருக்கிறார்கள். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இந்த போட்டிகள் டிவி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் அளவுக்கு பிரபலமடைந்திருக்கின்றன. இருக்காதா பின்னே… யாருக்குதான் சின்ன வயசு நாஸ்டால்ஜியான்னா பிடிக்காம இருக்கும்…
ஓடிப்பிடிச்சு விளையாடின அனுபவம் இருக்கா உங்களுக்கு… கமெண்ட்ல பகிர்ந்துக்கோங்க மக்களே நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.
Also Read – நீங்க 90ஸ் கிட்ஸ்னா… இந்த கம்ப்யூட்டர் கேம்ஸ்லாம் நிச்சயம் மறந்திருக்க மாட்டீங்க!