Uruttu, Cringe, Boomer uncle, kambi katra kathai, Vibes – இந்த வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணாமல் இப்போலாம் ஒரு நாள்கூட கடந்து போறதில்லை. குறிப்பா மீம்ஸ்ல பெரும்பாலும் இந்த வார்த்தைகள்தான் இருக்கும். நம்ம காதலன் அல்லது காதலி பேசும்போது என்னா உருட்டு உருட்டுரனு சொல்லுவோம். மேடையில பிரபலங்கள் பேசும்போதும் ‘உன் வாய், உன் உருட்டு’னு சொல்லுவோம். ரீல்ஸ்ல வர்ற சிலர பார்த்தா கிரிஞ்சுனு சொல்லுவோம். நம்ம ரிலேஷன்ல யாராவது வந்து அட்வைஸ் பண்ணா பூமர் அங்கிள்னு சொல்லுவோம், நம்ம ஃப்ரெண்டு எதையாவது பண்ணிட்டு வந்து அதுக்கு சமாளிஃபிகேஷன் கொடுக்கும்போது என்னென்ன சொல்றான், கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்துவிட்றான்னு சொல்லுவோம். பாட்டு கேட்டு மெய்சிலிர்த்து போய் இருக்கும்போது, புடிச்ச படம் பார்த்த ஃபீல்ல இருக்கும்போது ‘செம வைப்ஸ்’ல இருக்கேன்ன்னு சொல்லுவோம். ஆமா, இதுக்குலாம் என்ன அர்த்தம்? அதைத்தான் இந்த வீடியோல தெரிஞ்சுக்கப்போறோம்.
டிஸ்கிளைமர்: இந்த வார்த்தை எதுக்குமே ஸ்ட்ரெயிட் மீனிங் சொல்றது கஷ்டம். அதனால, எக்ஸாம்பிளோட சொல்றேன்… கண்டிப்பா மஜாவா இருக்கும்.
உருட்டு – இஷ்டத்துக்கு நம்ப முடியாத அளவுக்கு பொய் சொல்றதுதான் உருட்டுனு சொல்லுவாங்க. இதை வந்து நம்ம மீம் கிரியேட்டர்ஸ் பிதாமகன் படத்துல இருந்து புடிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன். அந்தப் படத்துல சூர்யா சொல்லுவார்ல, “விழுகாது… ஏன்னா, உருட்டு அப்படி”னு. அதுல இருந்துதான் இன்ஸ்பைர் ஆகியிருப்பாங்கபோல. உருட்டுக்கு ஆகச்சிறந்த எக்ஸாம்பிள் சொல்லணும்னா “உங்கூட நூறு வருஷம் வாழணும்” அப்டின்ற டயலாக்தான். அதேமாதிரி, நம்ம ஃப்ரெண்ட் சரியான பிளேபாயா இருப்பான். ஆனால், நம்மக்கிட்ட “மச்சா எனக்கு பொண்ணுங்கக்கிட்டலாம் பேசவே தெரியாதுடா”னு சொல்லுவான். அப்புறம், உங்க காதலனோ காதலிக்கோ ஃபோன் பண்ணி, “என்ன உனக்கு 1 மணி நேரமா ஃபோன் பண்றேன். பிஸினு வருதுனு கேட்டா… நானும் உனக்குதான் ட்ரை பண்ணிட்டு இருந்தேன்”னு சொல்லுவாங்க. இதெல்லாம் பக்கா உருட்டுக்கான எக்ஸாம்பிள்ஸ்.
கிரிஞ்ச் – இந்த வார்த்தைக்கு என்ன மீனிங்னு தெரியாமலையே நம்மள்ல பலர் பயன்படுத்திட்டு இருப்போம். ஒருத்தர் பெருமையா நினைச்சு ஒரு விஷயம் பண்ணுவாங்க. ஆனால், நமக்கு அது இரிட்டேட்டிங்கா இருக்கும். அதைதான் கிரிஞ்சுனு சொல்லுவாங்க. இன்னைக்கு ரீல்ஸ் பண்ற நிறைய பேர் இந்த கிரிஞ்ச் எலிமெண்ட்ஸ் வார்த்தைக்குள்ள அடங்குவாங்க.
செண்டிமெண்ட் போட்டு கொல்றது, உன் பாதம் பட்ட இடத்தில் சாதம் போட்டு சாப்பிடுவேன்னு கவிதை எழுதுறது, முழு படத்தையும் ஸ்டேட்டஸ்ல வைக்கிறது, மழை… சன்னல் சீட்… பஜ்ஜி… பிளாக் காஃபினு போஸ்ட் போடுறது, இதை ஷேர் பண்ணுங்க யோகம் வரும், ஏணியை கூரையை நோக்கி போடாத வானத்தை நோக்கி போடுன்ற அளவுக்கு பேசுறது, யூ டியூப்ல சம்பந்தமே இல்லாமல் தம்ப் வைக்கிறது இப்படி எல்லாமே கிரிஞ்ச்தான்.
பூமர் அங்கிள் – பரிதாபங்கள்ல கோபி – சுதாகர் ஆரம்பிச்சுவிட்டது அப்படிதான நினைப்பீங்க. ஆனால், இந்த வார்த்தையை பல வருஷத்துக்கு முன்னாடியே ஃபாரீன்லயெல்லாம் பயன்படுத்தியிருக்காங்க. அதாவது, ஒருத்தரை இன்ஸல்ட் பண்றதுக்காக இந்த வார்த்தை யூஸ் பண்ணியிருக்காங்க. மரியாதையா இன்ஸல்ட் பண்ற வார்த்தையாம் இது. “எங்களுக்கு தெரியும் நீங்க போங்க”னு ஒரு வரில இழுத்து சொல்றதை “ஓகே பூமர்”னு ரெண்டே வார்த்தைல முடிச்சிருவாங்கலாம். நாங்கலாம் அந்த காலத்துல அப்படினு ஆரம்பிச்சு இப்படியே இருக்கியே உங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைக்கிறாரு, உருப்படலாம்லனு பூமர் மாதிரி இழுத்து சில தத்துவங்களை ஆட் பண்ணி போடுவாங்கள்ல அவங்கதான் பூமர் அங்கிள்ஸ். நம்ம ரிலேஷன், அப்பாம்மா ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே பெரும்பாலும் பூமர்ஸாதான் இருக்காங்க.
கம்பி கட்ற கதை – நம்மள கேணையன்னு நினைச்சிட்டு… இல்லாத பொல்லாதை கதையெல்லாம் சொல்லுறதுதான் கம்பி கட்ற கதை. இதையும் பரிதாபங்கள் கோபி – சுதாகர்தான் ஆரம்பிச்சுவிட்டாங்க. தீபாவளி பரிதாபங்கள்ல… கம்பி மத்தாப்பு எரியலைனு சொல்லுவாங்க. அப்போ, “கம்பி பிரச்னையா போச்சு. கட்டு கம்பி கட்றதுக்கு நம்மாளுங்க ஃபுல்லா ஃபாரீன் போய்ட்டாங்க. இந்த தடவை துபாய்ல இருந்து இங்க வந்துருவாங்க. பூரா பயலையும் கம்பி கட்ட அனுப்பிருக்கு. கம்பி மத்தாப்பு சூப்பரா இருக்கும்”னு சொல்லுவாங்க. அதுக்கு கோபி, “என்னென்ன சொல்றான் பாருங்க. கம்பி கட்ற கதையெல்லாம் இழுத்துப் போடுறான்”னு சொல்லுவாங்க. அப்படிதான் இது உருவாச்சு. நம்ம ஃப்ரெண்டு ஏன்டா லேட்டா வந்தனு கேட்டா சம்பந்தமே இல்லாமல் என்னல்லாமோ சொல்லுவான் பாருங்க. அதுதான் கம்பி கட்ற கதை.
Also Read : நெகட்டிவ் ரிவ்யூ சொன்னவர்களின் வீட்டுக்கே போன Domino’s…!
வைப்ஸ் – இவ்வளவு நேரம் நம்ம பார்த்த வார்த்தைகள்லயே கொஞ்சம் பாஸிட்டிவான வார்த்தைனா அது, வைப்ஸ்தான். ஒரு விஷயம் முடிஞ்சதுக்கு அப்புறமும் அதே தாக்கத்தோட இருக்குறதுதான் இப்போ சோஷியல் மீடியால ஃபேமஸா இருக்குற வைப்ஸ்க்கு அர்த்தம். பெரும்பாலும் மியூசிக் லவ்வர்ஸ் இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்துவாங்க. யுவன் வைப்ஸ், ஏ.ஆர்.வைப்ஸ், ராஜா வைப்ஸ், சித் ஸ்ரீராம் வைப்ஸ், பிரதீப் குமார் வைப்ஸ்னு நம்மள வைப்ஸ்லயே வைச்சிட்டு இருக்குற ஆளுங்கள சொல்லிட்டே போகலாம். தலைல ஹார்ட்டின்கள்லாம் போட்டு, அப்படியே விண்வெளில பறக்குற மாதிரியான டெம்ப்ளேட்லாம் இப்போ ரொம்பவே ஃபேமஸ்.
சரி, இந்த வார்த்தைகள்ல நீங்க அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தை என்னன்றதை கமெண்ட்ல சொல்லுங்க!
Hi! Do you know if they make any plugins to help with Search Engine Optimization? I’m
trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good success.
If you know of any please share. Thank you! You can read similar blog here: Eco blankets
เล่นเกมสล็อตออนไลน์ได้ทุกค่ายดังกับเว็บตรง spinix 282 โบนัสแตกง่าย แจ็คพอตใหญ่รอคุณอยู่ สมัครเลยพร้อมรับโปรฟรีทันที!