கோடைக்காலங்களில் இந்த வெயில்ல இருந்து தப்பிக்க எங்கயாவது போகலாம்னு தோணூம்போதுலாம் நம்ம மைண்ட்ல வர்ற முதல் இரண்டு இடங்கள், ஊட்டியும் கொடைக்கானலும்தான். இரண்டு இடங்களிலுமே சுற்றுலாப் பயணிகள் எக்ஸ்ப்ளோர் செய்ய ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. குறிப்பாக ஊட்டி. மனைவி, குழந்தைகளுடன் சென்று எஞ்சாய் பண்ண ஏற்ற இடம். ‘மலைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் ஊட்டியில் இயற்கையும் அமைதியும் எங்கு நிறைந்து காணப்படுகிறது எனலாம். நகரங்களில் உள்ள கசகசப்பு, சப்தங்கள் மற்றும் காங்கிரீட் காடுகளில் இருந்து தப்பித்து வருடம்தோறும் ஊட்டிக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகம். ஊட்டி – யில் சுற்றிப்பார்க்க என்னென்ன உள்ளன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஊட்டி ஏரி
தமிழ்நாட்டுல நிறைய இடங்கள்ல ஏரிகள் இருக்கு. ஆனாலு, ஊட்டி ஏரி அங்கு நிலவும் காலநிலை, இயற்கை காட்சிகளோடு சேர்ந்து உங்களை அதன் அழகுக்கு அடிமையாக்கும். ஊட்டி ஏரி என்பது 1824-ம் ஆண்டு 65 ஏக்கர் பரப்பளவில் செயற்கை முறையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. ஏரியின் கரைகள் உட்பட பல விஷயங்கள் உங்களைக் கவரும் வகையில் இருக்கும். இந்த ஏரிக்கு சென்றால் நீங்கள் நிச்சயம் படகு சவாரியை மிஸ் செய்யக்கூடாது. குறிப்பாக கோடைக்காலங்களில் நீங்கள் சென்றால் குழந்தைகள் உட்பட பலருக்கு பல ஆக்டிவிட்டிகளை சுற்றுலாத்துறை ஏற்படுத்தியிருக்கும்.

தொட்டபெட்டா சிகரம்
ஊட்டியில் இருந்து சிறிது தொலைவில் சுமார் 2,623 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைதான், தொட்டபெட்டா. அடர்த்தியான பசுமை, இடையே வண்ணமயமான செடிகள் மற்றும் நீர்வீழ்ச்சி ஆகியவை நிரம்பிய இந்த உயரமான மலையில் ட்ரக்கிங் செல்வதே பலரது ஃபேவரைட் விஷயங்களில் ஒன்றாக இருக்கும். இங்குள்ள வியூ பாய்ண்டை நீங்கள் சென்று பார்த்தால் ஆச்சரியத்தில் கொஞ்சம் நேரம் உறைந்து போவீர்கள் என்றே கூறலாம். இந்த சிகரத்துக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மான் பூங்கா
மான் உள்ளிட்ட அழகான வனவிலங்குகளை அதன் இயற்கையோடு கண்டு மகிழ இந்த பூங்காவை நீங்கள் தேர்வு செய்யலாம். சாம்பர், சித்தல் போன்ற மான் வகைகள் இங்கே ரொம்பவே பிரபலம். 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் பல்வேறு வகையான தாவரங்களும் நிறைந்துள்ளன. 1986-ம் ஆண்டு இந்த பூங்கா கட்டப்பட்டது. கோடை காலத்தில் இந்த பூங்காவானது காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். குளிர்காலங்களில் பூங்கா காலை 5:30 முதல் இரவு 7 மணி வரை மக்கள் செல்ல அனுமதி வழங்கப்படும்.

மெழுகு மியூசியம்
உலகின் முக்கிய பிரமுகர்களின் மெழுகு சிலைகள் இந்த மியூசியத்தில் இடம்பெற்றுள்ளது. அன்னை தெரசா, மகாத்மா காந்தி மற்றும் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் சிலையும் இங்கே இடம்பெற்றுள்ளது. இந்த மியூசியம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

தேயிலை தோட்டம்
ஊட்டியில் பார்க்க வேண்டிய அற்புதமான விஷயங்களில் ஒன்று தேயிலை தோட்டம். தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறையால் இந்த தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. தோட்டங்களில் நிற்கும்போதே அந்த இலைகளின் மணம் உங்களின் மனங்களைக் கவரும். இந்த இடங்களில் உள்ள டீக்கடையும் உங்களின் ஃபேவரைட் டீக்கடைப் பட்டியலில் ஒன்றாக மாறும்.

ஊட்டியில் இவற்றைத் தவிரவும் குட்டிக்குட்டியான பல இடங்கள் உங்களை வசீகரிக்கும். உங்களுக்கு ஊட்டி நல்ல பரிட்சயமான இடமாக இருந்தால் அங்கு பார்க்க வேண்டிய வேறு விஷயங்களைக் கமெண்டில் சொல்லுங்க!
Also Read: வாட்டர் ஸ்போர்ட் லவ்வரா நீங்க.. ‘Kayaking’ செய்ய இந்தியாவின் 5 பெஸ்ட் ஸ்பாட்கள்!
Fantastic website. Plenty of useful information here. I’m sending it to several friends ans also sharing in delicious. And obviously, thanks for your effort!