புல்லட்

பேரைச் சொன்னாலே சும்மா கெத்துதானே… எமோஷனல் `புல்லட்’ ஸ்டோரீஸ்!

புல்லட் மேல ஒருத்தருக்கு எவ்வளவு காதல் இருக்க முடியும்… எக்ஸாம்பிளுக்கு ஒரு சம்பவத்தோட ஆரம்பிப்போம்… மும்பைல இருந்து கிட்டத்தட்ட 1,340 கி.மீ பயணிச்சு, தன்னோட 1975 மாடல் புல்லட்டைத் தயாரிச்ச திருவொற்றியூர் ஃபேக்டரியைப் பார்க்க ஒருத்தர் கிளம்பி வர்றார். அப்பாவோட நினைவா, அவரோட பிறந்தநாள்ல அங்க இருந்து கிளம்பி இங்க வந்துட்டுப் போனார். அப்பாவுக்குச் செலுத்துற மிகச்சிறந்த நினைவஞ்சலியா இருக்கும்னு அந்த மகன் நினைச்சிருக்கார். இது நடந்தது 2014-ல. கிட்டத்தட்ட 39 வருஷ ஓல்டு மாடல் வண்டியோட அவர் வந்துட்டுப் போனார். `டெய்லி காலைல சாப்ட உடனே புல்லட்டை துடைச்சுட்டுதான் அடுத்த வேலையையே அப்பா பார்ப்பார்’னு அந்த மகனான கார்த்திக் வாரே, அப்பா டாக்டர் பிரகாஷ் வாரே பத்தின நினைவுகளைப் பகிர்ந்திருப்பார். புல்லட்னு செல்லமா அடையாளப்படுத்தப்படுற ராயல் என்ஃபீல்டு பைக் லவ்வர்ஸோட எமோஷனல் ஸ்டோரீஸ் இப்படி எத்தனையோ இருக்கு… ஏன் அந்த வண்டி அவ்வளவு ஸ்பெஷல்… தலைமுறை தலைமுறையா அந்த வண்டியை ஏன் பைக் லவ்வர்ஸ் கொண்டாடுறாங்கனு… புல்லட் பத்தின எமோஷனல் ஸ்டோரீஸ் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

புல்லட் பைக்
புல்லட் பைக்

இந்த புல்லட் ஸ்டோரி ரொம்பவே ஸ்பெஷலானது. பெங்களூரைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அருண் சீனிவாசனன், சிறுவயதில் தனது தந்தை சீனிவாசன் வாங்கிய புல்லட்டுடனேயே வளர்ந்திருக்கிறார். 1971 மாடல் புல்லட்டான அதை ஒரு கட்டத்தில் கார் வாங்கிய பிறகு அவரது தந்தை, தனது நண்பருக்கு விற்பனை செய்திருக்கிறார். நான் எப்போ திரும்ப கேட்டாலும் கொடுத்துடணும் என்கிற கண்டிஷனோடுதான் அதைக் கொடுத்திருக்கிறார்.. அருண், வளர்ந்தபிறகு ஒரு கட்டத்தில் அந்த வண்டியை மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வரலாம் என நினைத்திருக்கிறார். ஆனால், அங்கதான் ஒரு ட்விஸ்டே நடந்திருக்கிறது.. வண்டியை விற்றவரிடம் விசாரித்ததில், 1996-ம் ஆண்டு வாக்கில் புல்லட் திருடுபோய்விட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஆனாலும் சோர்ந்துபோகாத அருண், அப்பாவுக்குப் பிடித்த அந்த புல்லட்டை எப்படியாவது அவரிடம் சேர்க்க வேண்டும் என MYH 1731 என்ற பதிவெண் கொண்ட அந்த வண்டியைத் தேடத் தொடங்கியிருக்கிறார். 2006-ல் தொடங்கிய அந்தத் தேடல் 15 ஆண்டுகள் நீளும் என்று அவர் நினைத்திருக்கவில்லை. கிட்டத்தட்ட நம்பிக்கை குறைந்துகொண்டே வந்த நிலையில், Parivahan செயலி மூலம் கடந்த ஆண்டு இறுதியில் வண்டியைக் கண்டுபிடித்திருக்கிறார். மைசூர் அருகே உள்ள விவசாயி ஒருவர் போலீஸார் விட்ட ஏலத்தில் வண்டியை ஏலம் எடுத்து, சரி செய்து பயன்படுத்தி வருவதைக் கண்டுபிடித்திருக்கிறார். அவரிடம் பேசி தந்தையின் கனவு வண்டி என்பதைப் புரியவைத்ததோடு, ஒரு பெரிய தொகைக்கு புல்லட்டை வாங்கியிருக்கிறார். அந்த புல்லட்டை வீட்டுக்குக் கொண்டு வந்து தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான சீனிவாசன், தனது புல்லட்டை மீண்டும் பார்த்து கண்கலங்கி நெகிழ்ந்துபோயிருக்கிறார். செமல்ல..!

சரி, புல்லட்னு இதுக்கு எதனால பேர் வைச்சாங்க… ராயல் என்ஃபீல்டு பேர் காரணம் என்னனு தெரியுமா.. இதுக்குப் பதில் தெரியும்னா மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க… விடையைத் தெரிஞ்சுக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க.

கே.ஜி.எஃப்ல ராக்கி பாய்னு ஒரு பிராண்டை கிரியேட் பண்ணுவார்ல… அவர் முகத்தைக் கூட பார்க்காத பலருக்கும் ராக்கி பாய்ங்குற பேர் தெரிஞ்சிருக்கும். அந்த டயலாக் வர்றப்ப ஒரு goose bumps மொமண்ட் வரும்ல.. இதெல்லாம் நிஜத்துல நடந்தா எப்படி இருக்கும் அப்படியான ஒரு மாபெரும் பிராண்ட்தான் புல்லட்ங்குற பேரு. ஒரு காலகட்டத்துல நீங்க எந்த ஏரியா பைக் பார்க்கிங்குக்கோ இல்ல பைக்குகள் நிப்பாட்டிருக்க இடத்துக்கோ போனா அங்க நிறைய ஸ்பெளண்டர் பைக்குகள்தான் நிக்கும். ஆனால், இன்னிக்கு அதேமாதிரி புல்லட்டுகள் நிறைஞ்சு காட்சியளிக்குது. அதுக்கு அந்த கம்பெனியோட ஸ்ட்ரேட்டஜி மட்டுமில்லை, மக்கள் அந்த வண்டி மேல வைச்சிருக்க காதலுமே ரொம்ப முக்கியம்.

புல்லட் பைக்
புல்லட் பைக்

புல்லட் பத்தின நம்ம ஊர் ஸ்டோரி நிச்சயம் பெரிய இன்ஸ்பிரேஷனா இருக்கும். கும்பகோணத்துல இருக்க புல்லட் ராணியைத் தெரியுமா… அவங்களோட கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது… கும்பகோணம் மகாமகம் குளத்தோட தெற்குக் கரையில் டூவீலர் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் ரவி என்பவரின் நான்கு மகள்களில் கடைக்குட்டிதான் ரோகிணி. இவர் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு விபத்தால் பரீட்சை எழுத முடியாமல் போகிறது. ஒரு கட்டத்தில் அப்பாவோடு மெக்கானிக் ஷாப்பிலேயே முழுநேரமாகப் பணிபுரியத் தொடங்குகிறார். கொஞ்சம் கொஞ்சமாக மெக்கானிக் வேலையைக் கற்றுக்கொண்ட அவர், அதில் கைதேர்ந்தவராகவும் உருவெடுக்கிறார். இதையெல்லாம் விட இவரின் அடையாளமே இவரிடம் இருக்கும் புல்லட்தான். இதைவைத்தே இவரை புல்லட் ராணி என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். புல்லட் மட்டுமில்லீங்க எல்லா பைக்குகளையும் வேலை பார்ப்பேன். ஓடாத வண்டிகளை சரி செஞ்சு, அதை மறுபடியும் ஓட வைக்கும்போது கிடைக்குற சந்தோஷமே தனிதான். ஆனால், புல்லட்லதான் வெளியிடங்களுக்குப் போவேன். புல்லட்னாலே தனி கெத்துதானே... புல்லட்டை முதன்முதல்ல பார்த்தப்போ கொஞ்சம் மிரளத்தான் செஞ்சேன். அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதை ஓட்டக் கத்துக்கிட்டேன். புல்லட்லயே எல்லா இடத்துக்கும் போய்ட்டு வரதால, என்னை புல்லட் ராணினு எல்லாரும் கூப்டுறாங்க. அந்தப் பேர் எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு’னு என்கிறார் ரோகினி. புல்லட் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கையும் போகப்போக அதிகரிக்கும் பாருங்கள் என்றும் நம்பிக்கையோடு பேசியிருக்கிறார் புல்லட் ராணி’ ரோகினி.

புல்லட் ஓட்டுறது ஏன் ஒரு தனி அனுபவம்னு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. புல்லட் லவ்வர்கள்கிட்ட கேட்டா பெரிய லிஸ்டே போடுவாங்க. அந்த வண்டியை ஓட்டுறதே கெத்துதான் ப்ரோ…. அந்த டுபு டுபு’ சத்தம், அதுல உக்காந்து போற கம்பீரம், அது கொடுக்குற தோரணை, வண்டியோட ரெட்ரோ லுக்னு ரோட்டுல போற எல்லாரையும் உங்க பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும். இந்திய மார்க்கெட்ல எத்தனையோ வண்டிகள் இருந்தாலும் புல்லட்டோட சத்தத்துக்கு இருக்க மவுசு மாதிரி வேற எந்த வண்டிக்கும் இல்லை.ஏய் அவர்கிட்ட புல்லட் இருக்குப்பா… நிச்சயம் பெரிய ஆளாத்தான் இருப்பாரு’னு புல்லட் வைச்சிருக்கதே ஒரு சமூக அந்தஸ்தா பார்க்கப்பட்ட காலம்லாம் இருக்கும்.

ஆரம்பகாலகட்டங்கள்ல தயாரிக்கப்பட்ட புல்லட்களில் இப்போ இருக்க மாதிரி பிரேக் ரைட் சைடும், கியர் லெப்ட் சைடும் இருக்காது. அப்படியே ஆப்போசிட்டா இருக்கும். இன்னிக்கு இருக்க பைக்க ஓட்டுறவங்களுக்கு இதை ஓட்டுறது ரொம்பவே சிரமம். அதே மாதிரி கியர் பாக்ஸ்ல நார்மல் கியர் ராடுக்கு மேல நியூட்ரலுக்குனே தனி லிவர் வைச்சிருப்பாங்க. அதை ஒரு மிதி மிதிச்சா வண்டி எந்த கியர்ல இருந்தாலும் நியூட்ரலுக்கு டக்கு ஷிஃப்ட் ஆகிடும். அதேமாதிரி டீசல் புல்லட்டுகளும் ஒரு காலத்தில் ஃபேமஸ். இரண்டு பக்கமும் பெட்டிகளை வைத்து டீசல் புல்லட்டில் பயணித்த நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். டீசல் புல்லட்கள் நார்மல் புல்லட்டுகளை விட கனமானவை. அந்த புல்லட்டை டெய்லி காலைல ஸ்டார்ட் பண்றதே ஒரு கலை. Choke-ஐத் தூக்கி விட்டுட்டு கிக்கர்ல நீங்க ஏறி நின்னாதான், கிக்கர் கீழயே வரும். அதுவும் ஒரே மிதில ஸ்டார்ட் பண்ணீட்டா நீங்க பெரிய லக்கிதான். டீசல் புல்லட்டுகள் 60, 70ஸ் கிட்ஸ்களோட ஆஸ்தான வண்டி. ஆனால், அது இன்று சாலைகளில் பெரும்பாலும் ஓடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதே மாதிரி இந்திய மார்க்கெட்டுகள்ல கிடைக்குற வண்டிகள்ல அதிகமா கஸ்டமைஸ் செய்யப்படுற, அதுக்கு ஏத்த டிசைன் உள்ள வண்டினா அது புல்லட்தான். சைலென்ஸர் தொடங்கி ஹேண்டில் பார் வரைக்கும் நீங்க இதை உங்க இஷ்டத்துக்கு எப்படி வேணாலும் கஸ்டமைஸ் பண்ணிக்கலாம். அதற்கான ஆப்ஷன்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த வசதி வேற எந்த வண்டிக்கும் கிடையாது. அது புல்லட்டோட ஸ்பெஷாலிட்டி. புல்லட்லையே அதிகமா கஸ்டமைஸ் பண்ணப்படுறது சைலென்ஸராத்தான் இருக்கும். அதோட சவுண்டையே இன்னும் பேஸ் ஏத்தி மிரட்டுற மாதிரி வேணும்னு சைலென்ஸ்ருக்காகவே பல ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரையில் செலவழிக்கும் பைக் லவ்வர்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள்.

புல்லட் பைக்
புல்லட் பைக்

பைக் லவ்வர்ஸ் பெரும்பாலும் பெண்களுக்குப் பிடித்தவர்களாக இருப்பார்கள். அதுவும் புல்லட் வைத்திருப்பவர்களுக்குத் தனி மரியாதையே கொடுப்பார்கள் என்று சொல்லலாம். ரெட்ரோ டிசைனும் வெயிட்டும், அதோட சவுண்டும்தான் புல்லட்டோட மாஸே… முன்ன மாதிரி இல்லப்பா இப்ப வர்ற புல்லட்கள் வெயிட்டானவை இல்லை. கனம் குறைந்தமாதிரியே அதோட ரக்கர்ட் லுக்கும் மாறி, ஓட்டுற த்ரிலும் பழைய புல்லட் மாதிரி இல்லாம, சாஃப்டா இருக்குப்பா என்று புல்லட் லவ்வர்கள் நிறைய பேர் குறைபட்டுக் கொள்வதைக் கேட்க முடிகிறது. கேடிஎம் மாதிரியான வண்டிகள், ஜாவா மாதிரியான ரீபிராண்டிங் செய்யப்பட்ட பைக்குகளும் புல்லட்டுக்கு மிகப்பெரிய போட்டியைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இன்னிக்கும் புல்லட்டுக்கு இருக்கும் மவுசு தனிதான். ராணுவம் சார்பிலோ அல்லது போலீஸ் டிபார்ட்மெண்ட் சார்பிலோ பழைய வண்டிகளை ஏலம் விடும் நிகழ்வில் புல்லட்டை யார் ஏலத்தில் எடுப்பது என்பதற்குத்தான் கடுமையான போட்டியே இருக்கும்.

நம்மூர்ல எத்தனையோ கோயில்கள் இருக்கு. ராஜஸ்தான்ல புல்லட்டுக்கும் ஒரு கோயில் இருக்கு. பாலியில் இருந்து 20 கி.மீ தூரத்துல இருக்க சோட்டிலா கிராமத்துக்கு அருகேதான் இந்தக் கோயில் இருக்கு. 1991-ம் ஆண்டு வாக்குல இந்த வழியா போய்ட்டிருந்த ஓம் சிங் ரத்தோர்ங்குற இளைஞர் புல்லட்ல போய்ட்டு இருக்கும்போது விபத்தில் சிக்கி இறந்திருக்கிறார். இதையடுத்து, அந்த புல்லட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க. மறுநாள் காலைல ஸ்டேஷன்ல இருந்து மர்மமா மாயமான அந்த புல்லட், விபத்து நடந்த இடத்துல கிடைச்சிருக்கு. இது எவனோ பண்ண வேலைனு முதல்ல நினைச்ச போலீஸ், மறுபடியும் புல்லட்டை ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய் செயின்லாம் வைச்சு பூட்டுனதோட, பெட்ரோலையும் காலி பண்ணி நிப்பாட்டிருக்காங்க. ஆனால், மறுநாள் மறுபடியும் விபத்து நடந்த இடத்திலேயே புல்லட் நின்னிருக்கு. இதைப்பத்தின செய்தி அந்த ஏரியா ஃபுல்லா பரவி அந்த புல்லட்டையே ஓம் பன்னா பாபாவா மக்கள் வழிபட ஆரம்பிச்சுட்டாங்க. பைக்ல லாங் ட்ரிப் போறவங்க, தங்களோட பயணம் நல்லபடியா முடியணும்னு இங்க வேண்டிக்குறது வழக்கம். மலையாளத்துல டோவினோ நடிப்பில் வெளிவந்த கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் படத்துல கூட இந்தக் கோயிலைக் காட்டியிருப்பாங்க.

Also Read – சும்மா அதிரும்… தமிழ் சினிமாவில் பின்னிப் பெடலெடுத்த டபுள் ஹீரோ படங்கள்!

புல்லட் பேருக்குப் பின்னாடியும் ஒரு கதை இருக்குங்க. பெரும்பாலான மோட்டார் சைக்கிள் கம்பெனிகள் போலவே இந்த கம்பெனியும் சைக்கிள் உற்பத்தில இருந்துதான் தங்களோட பயணத்தைத் தொடங்குனாங்க. இங்கிலாந்துல இருக்க என்ஃபீல்டுங்குற ஊர்ல தொடங்கப்பட்ட இந்த கம்பெனி பிரிட்டீஷின் ராயல் ஆர்மிக்கு ராணுவ தளவாடங்களோடு ஆஃப் ரோடு பைக்குகளும் சப்ளை பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு கட்டத்துல ராயலையும் என்ஃபீல்டையும் சேர்த்து ராயல் என்ஃபீல்டுனு கம்பெனி பேரை மாத்திக்கிட்டாங்க. அதேமாதிரி, முதல் புல்லட் 1931-லதான் அறிமுகப்படுத்தப்பட்டுச்சு. `Made Like a Gun’ அப்படிங்குற டேக் லைனோட, துப்பாக்கில இருந்து புறப்படும் புல்லட் மாதிரி வேகமாகப் போகும்ங்குற அர்த்தத்துலபுல்லட்’ சந்தைக்கு வந்துச்சு. அன்னிக்கு இருந்து அதோட பயணம் பல தலைமுறைகள் கடந்தும் போய்ட்டேதான் இருக்கு..

இப்படி புல்லட்டுடனான எமோஷனல் ஸ்டோரீஸ் உங்ககிட்டயும் இருக்குனா… அதை கமெண்ட்ல பகிர்ந்துக்கோங்க மக்களே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top