பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து, தங்களுடைய இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது ஜிம்பாப்வே அணி. இன்னிக்கு நாம பாக்குற மாதிரி சின்ன டீம் இல்லை ஜிம்பாப்வே… அவங்க பண்ண பல தரமான சம்பவங்களை கிரிக்கெட் வெறியர்கள் மறந்திருக்க மாட்டாங்க. 1998 கோகோ கோலா கப் மேட்ச்ல மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினையே ஒரண்டை இழுத்தவர் ஜிம்பாப்வேயின் இளம் ஹென்றி ஓலங்கா… அது மட்டுமில்லை. நியூஸிலாந்தை சொந்த ஊர்லயும், அவங்க கோட்டைலயும் 2000-2001 சீசன்ல சம்பவம் பண்ண டீம்… 2003 வேர்ல்டு கப்ல தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் கதறவிட்ட ரெக்கார்டுலாம் அவங்களோடது. சமீபத்துல ஆஸ்திரேலியாவை, சொந்த மண்ணில் வீழ்த்தின டீம் ஜிம்பாப்வே. ஒரு காலத்துல மிரட்டல் அடி அடித்த ஜிம்பாப்வே எங்க சறுக்குச்சு… அந்த டீம் மீண்டு வந்தது எப்படி?
ஜிம்பாப்வேவோட கிரிக்கெட் வரலாறை தென்னாப்பிரிக்காவுல இருந்துதான் தொடங்கணும். ரோடீஸியாங்குற பேர்ல தென்னாப்பிரிக்க உள்ளூர் கிரிக்கெட்டில் இந்த அணி விளையாடிட்டு வந்துச்சு. 1980 ஏப்ரலில் சுதந்திரத்துக்குப் பிறகு 1981 ஜூலை 21-ல் ஐசிசியோட உறுப்பினர் அந்தஸ்து கிடைக்குது. அதன்பிறகு அதிகமான மேட்சுகளில் விளையாடத் தொடங்குகிறார்கள். 1983, 1989 மற்றும் 1992 உலகக் கோப்பை தொடர்களில் ஜிம்பாப்வே விளையாடியிருந்தாலும், பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை.

தற்போது நடந்துவரும் உலகக் கோப்பை டி20 போட்டிக்குத் தகுதிபெற்றதும், ஆஸ்திரேலியா கிளம்பிய ஜிம்பாப்வே பிளேயர்களிடம் கோச் டேவ் ஹட்டன் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா…`பாய்ஸ் இது பெரிய விஷயமில்லை. நாம தகுதிபெற்றது சந்தோஷம்தான். வெற்றியோ, தோல்வியோ முழுமையாக இந்த தொடரை விளையாடி, முடிஞ்ச அளவு எதிரணிகளுக்கு Damage கொடுக்கணும்’ என்பதுதான். இப்போ கோச்சா இருக்க ஹட்டன், ஜிம்பாப்வேயின் முக்கியமான வெற்றிகளுக்கு உடன் நின்றவர். 1983-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தபோது இருந்த ஹட்டன், ஜிம்பாப்வே விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியின் கேப்டனாகவும் இருந்தார். அதேபோல், 1999 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தகுதிபெற்ற ஜிம்பாப்வே டீமின் தலைமைப் பயிற்சியாளரும் இவர்தான். அவரைத்தான் ஜிம்பாப்வே அணி நிர்வாகம் அழைத்துவந்து, டீமை இப்போது கையில் கொடுத்திருக்கிறது.
இப்போ பாகிஸ்தானை தோற்கடிக்கவும், ஜிம்பாப்வே டீம்ல இருந்த ஒரு இந்தியர்தான் முக்கியக் காரணம். அவர் யார்னு வீடியோவோட கடைசில சொல்றேன். ஜிம்பாப்வே – பாகிஸ்தான் மேட்ச் டைம்ல மிஸ்டர் பீன் பத்தி நிறையவே பேச்சு எழுந்துச்சு.. காரணம் என்னானு தெரியுமா?

1992-ல் டெஸ்ட் அந்தஸ்து கிடைத்துவிட்டாலும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிகள் கிடைத்துவிடவில்லை. ஜிம்பாப்வே கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் 1997-2002 வரையிலான ஐந்து ஆண்டுகளை பொற்காலம் என்பார்கள். குறிப்பிட்ட அந்த ஐந்து ஆண்டுகளில், ஆஸ்திரேலியா தவிர மற்ற டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தியது ஜிம்பாப்வே. நியூசிலாந்துக்கு எதிரான ஹோம்/Away என இரண்டு தொடர்களிலும் வென்றது. பல தொடர்களின் இறுதிப் போட்டி வரையிலும் முன்னேறியது. ஆண்டி ஃப்ளவர், கிராண்ட் ஃப்ளவர் சகோதரர்கள், ஹீத் ஸ்டிரீக், அலீஸ்டர் கேம்பெல், பால் ஸ்ட்ராங், நீல் ஜான்சன் என பல உலகத்தரமான பிளேயர்ஸை உருவாக்கியது அந்த அணி. ஆனால், அதேநேரம் உள்நாட்டு அரசியல் குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகத் தொடங்கியது.
Also Read – சர்தார்… இந்தியாவுக்குச் சொல்லும் பாடம் என்ன?
2003 தொடங்கி 2009 வரையிலான காலகட்டத்தில் அந்த அணி, பொருளாதார சூழ்நிலைகளாலும் அரசியல் குறுக்கீடுகளாலும் தள்ளாடிக் கொண்டிருந்தது. 2003 உலகக் கோப்பை போட்டியொன்றில் சீனியர் வீரர்களான ஆண்டி ஃப்ளவர், ஹென்றி ஓலங்கா ஆகியோர் `ஜனநாயகம் செத்துவிட்டது’ என்று கூறி கறுப்பு நிற ஆர்ம்பேண்ட் அணிந்து விளையாடினர். சீனியர் வீரர்கள் பலர் வெளியேறியதாலும், பொருளாதாரப் பிரச்னைகளாலும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியிருக்க ஜிம்பாப்வே 2005-ல் முடிவு செய்தது. 2010-க்குப் பிறகு டெஸ்ட் அரங்குக்குத் திரும்பினாலும் வீரர்களுக்கான ஊதியப் பிரச்னை, அரசியல் தலையீடுகள் போன்றவற்றால் பெரிதாக சோபிக்க முடியாமல் போனது.

கிரிக்கெட் போர்டில் அரசின் தலையீட்டைக் காரணம் காட்டி 2019-ல் ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை ஐசிசி சஸ்பெண்ட் செய்தது. ஐசிசியின் அந்த முடிவு சிக்கந்தர் ராசா போன்ற ஜிம்பாப்வேயின் முக்கியமான பிளேயர்ஸை மனரீதியாகக் கடுமையாகப் பாதித்தது என்றே சொல்லலாம். அதிலிருந்து போராடியே மீண்டுவந்தது ஜிம்பாப்வே. பாகிஸ்தான் மேட்சில் கலக்கிய சிக்கந்தர் ராசாவின் பூர்வீகம் சாட்சாத் பாகிஸ்தான்தான். ஜிம்பாப்வேயில் பணிபுரிந்த தந்தையோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்கிற ஆசையில் டீனேஜில் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டு வந்த சிக்கந்தர் ராசா, கிரிக்கெட்டராவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. 2022-ல் 5 ஒருநாள் சதங்கள் அடித்திருக்கும் ஒரே வீரர் அவர்தான். அதேபோல், ஃபேஸில் மிரட்டும் பிராட் ஈவான்ஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேக் ஈவான்ஸின் வாரிசு. ஜிம்பாப்வே அணிக்காக தந்தை விளையாடிய இறுதிப் போட்டியை, உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடந்த தாயோடு டிவியில் பார்த்தவர். அதேபோல், பிளெஸ்ஸின் முஸ்ராஃபானி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு வந்தபோது காலில் அணிந்துகொள்ள சரியான ஷூகூட இல்லாமல் வந்தவர்.

ஜிம்பாப்வே டீம் மேனேஜ்மெண்டின் பணப் பிரச்னை எந்த அளவுக்கு இருந்தது என்றால், ஒரு போட்டியின்போது வீரர் ஒருவர் `சம்பளம் கொடுக்கவில்லைனா கூட பரவாயில்லை. அணிந்துகொள்ள நல்ல ஷூ கொடுங்கள். அப்போதுதான் ஒட்டும் வேலை எங்களுக்கு இருக்காது’ என்று வீடியோ வெளியிடும் அளவுக்குப் போனது. ஆனால், எத்தனையோ சிக்கல்கள், பிரச்னைகளைத் தாண்டி சர்வதேச அரங்கில் தங்கள் நாட்டின் பெயரை ஜிம்பாப்வே வீரர்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கைதான் அவர்களின் பலம், உயிர் எல்லாமே! 1998 கோகோ கோலா கப் சீரிஸ் குரூப் மேட்ச்ல 203 ரன் டார்கெட்டை சேஸ் பண்ண இந்தியாவுக்கு ஒலங்கா சிம்ம சொப்பனமா நின்னாரு. அந்த மேட்ச்ல ஓலங்கா போட்ட பவுன்சர்ல சச்சின் அவுட் ஆவாரு. அது அவரை ரொம்பவே பாதிச்சிருச்சாம். மேட்ச்லயும் இந்தியா 13 ரன்கள்ல தோல்வியைத் தழுவும். அதுக்கு அடுத்த 2 நாள் கழிச்சு நடந்த ஃபைனல்ல ஓலங்கா ஓவரில் பவுண்டரிகளால் தெறிக்கவிட்டு ரிவெஞ்ச் எடுத்திருப்பார் சச்சின்.
மிஸ்டர் பீன் பஞ்சாயத்து என்னன்னா… ஜிம்பாப்வேல நடந்த ஒரு பொருட்காட்சில பாகிஸ்தான் சார்பா அமைக்கப்பட்ட கடைக்கு மிஸ்டர் பீன் வர்றதா அறிவிச்சு காசுலாம் கலெக்ட் பண்ணிருக்காங்க. மிஸ்டர் பீன் வர்றாருனு மக்கள் கூடியிருந்த நிலையில், வந்தது மிஸ்டர் பீனோட பாகிஸ்தான் காப்பி கேட் வெர்ஷன். இதனால கடுப்பான ஒரு ஜிம்பாப்வே ஃபேன், பாகிஸ்தான் கிரிக்கெட் டீமோட அபீஸியல் ஹேண்டில்ல பண்ண கமெண்ட் வைரலாச்சு. அடுத்தமுறை உண்மையான மிஸ்டர் பீனைக் கூட்டிட்டு வாங்க. இதுக்கு நாங்க மேட்சுல உங்களைப் பழிதீர்ப்போம்னு அவர் சொல்லியிருந்தது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் டீம் வரைக்கும் எஃபெக்டை ஏற்படுத்துச்சு. In fact ஜெயிச்சபிறகு ஜிம்பாப்வே பிரசிடண்டும் ட்வீட்ல இதை Mention பண்ணினது வைரல் கண்டெண்ட்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் டீமோட டெக்னிக்கல் டைரக்டரா இருக்க இந்திய அணியின் முன்னாள் ஓபனரான லால்சந்த் ராஜ்புத்தான், 2007ல கப் அடிச்ச இந்தியன் டீமோட கோச். இவரு, 2018-2022 நான்கு ஆண்டுகள் ஜிம்பாப்வே டீமோட ஹெட் கோச்சாவும் இருந்தவர். இன்னிக்கு இருக்க டீமை செதுக்குனதுல இவருக்கு முக்கியமான பங்கிருக்கு. குறிப்பா பாகிஸ்தான் மேட்ச்ல 15 டாட் பால் வீசுன Richard Ngarava-வை டீமுக்குள்ள கொண்டுவந்ததே இவர்தான். ஜிம்பாப்வே மாதிரியான டீம்கள் இருக்குறதுனாலதான் கிரிக்கெட்டை உணர்வுப்பூர்வமா ரசிகர்கள் கொண்டாடிட்டு இருக்காங்கனே சொல்லலாம்.
இதுமாதிரி Greatest Upset-னு நீங்க நினைக்குற மேட்ச் எது… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!