ஃபீல்குட் சீன்கள்

பாலைவனத்துல மழை பார்த்துருக்கீங்களா… மலையாள படங்களின் ஃபீல்குட் சீன்கள்!

“என்னடா கண்கலங்க வைச்சிட்ட?, தமிழ்நாடு நவ் சேனல்ல வந்த பெஸ்ட் ஃபீல்குட் சீன்கள் வீடியோ இதுதான், சீக்கிரம் பார்ட் 2 போடுங்க ப்ரோ, மலையாள சினிமா ஃபீல்குட் சீன்ஸ் போடுங்க ப்ரோ, இந்த வீடியோவே அவ்வளவு ஃபீல்குட்டா இருக்கு”னு இதுக்கு முன்னாடி நாம ஷேர் பண்ண தமிழ் சினிமா ஃபீல்குட் சீன்கள் வீடியோவுக்கு எக்கச்சக்கமான பாஸிட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருந்துச்சு. அதுனால, நீங்கலாம் ஆசைப்பட்ட மாதிரி அடுத்த தரமான ஃபீல்குட் வீடியோ ரெடி. மலையாளத்துல வந்த பெஸ்ட் ஃபீல்குட் சீன்களைதான் பார்க்கப்போறோம்.

சார்லி

மலையாளத்துல எந்த சீனை முதல்ல எழுதலாம்னு நினைக்கும்போது டக்னு நம்ம கண்ணு முன்னாடி வந்து நின்னது சார்லி படத்துல கிட்டத்தட்ட கிளைமாக்ஸ்ல வந்த நெடுமுடி வேணுவோட காதல் கதைதான். ஜெபம் பண்ண நிறைய நன்ஸ் வருவாங்க. அவங்களைப் பார்த்ததும் நெடுமுடி வேணு ஓடி ஒளிவாரு. என்னத்துக்கு மனுஷன் இப்படி பண்றாருனு தோணும். துல்கர் குஞ்சப்பானு ஓடி வந்து, ஒருத்தரை அறிமுகம் பண்ணி வைக்க வந்த இப்படியா பண்றதுனு கேப்பாரு. கேட்டுட்டு, “இவங்கதான் சிஸ்டர் தெரேஸ் மேரி. வீட்டு பெயர் தெரேஸா. சாக்குபுரேக்கால் தெரேஸா”னு சொல்லுவாரு. அப்பவே நமக்கு சிலிர்க்க ஆரம்பிச்சிடும். மெதுவா திரும்பி அவ்வளவு காதலோட தெரேஸாவா, குஞ்சப்பன் பார்ப்பாரு. துல்கர் அப்புறம் அவரோட நண்பர்களை கூட்டிட்டு வந்து லவ் ஸ்டோரி சொல்லுவாரு. அந்த எஸ்டேட், பி.ஜி.எம், காதல் எல்லாம் சேர்ந்து ச்ச.. நம்ம காதலை நினைவுபடுத்தும்.

ஞான் பிரகாஷன்

ஞான் பிரகாஷன் – ஃபீல்குட் சீன்கள்

ஃபகத் ஃபாஸிலோட பெஸ்ட் படங்கள்ல இதுவும் ஒண்ணு. இந்தப் படத்துல சார்லி சாப்ளின் பத்தி விவாதம் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் வரும். செமயான கான்வர்சேஷன். ஃபகத், “அப்பா இறந்து 7 வருஷம் ஆச்சு. இப்பவும் அந்த ஷாக் எனக்கு மாறல. எப்போ, அப்பாவைப் பத்தி பேசுனாலும் கண்ணு நிறையும்”னு சீரியஸா சொல்லுவாரு. ஹீரோயின் சிரிப்பாங்க. “எதுக்கு சிரிக்கிறீங்க். நான் காமெடியா ஒண்ணுமே சொல்லலயே”னு கேப்பாரு. அதுக்கு ஹீரோயின், “நான் சார்லி சாப்ளினை நினைச்சு சிரிச்சேன். அந்த காமெடியன் ஒருதடவ ஸ்டேஜ்ல காமெடி ஒண்ணு சொன்னாரு. எல்லாரும் சிரிச்சாங்க. திரும்பவும் அதே காமெடிய பண்ணாரு. அதிகமா யாரும் சிரிக்கலை. சாப்ளின் விடல, அந்த காமெடியை ரிப்பீட் பண்ணவும் கடுப்பாய்ட்டாங்க”னு சொல்லுவாங்க. அதுக்கு ஃபகத், “ஒரே காமெடிய திரும்ப திரும்ப சொன்னா சிரிப்பு வருமா”னு கேட்க, “இதே தான் சாப்ளின் கேட்டாரு. காமெடிய திரும்ப திரும்ப சொன்னாலே சிரிப்பு வரலை. அப்போ, வருத்தம் தரும் விஷயங்களை மட்டும் எதுக்கு திரும்ப திரும்ப நினைக்கிறீங்கனு கேட்டாரு”னு ஹீரோயின் சொல்லுவாங்க. ஃபகத் கண்ணை திறந்து ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பாரு. கூஸ்பம்ப்ஸா இருக்கும். சாப்ளின் வெறும் கோமாளி இல்லை. ரியல் ஜீனியஸ்னு உங்களுக்கும் தோணும்.

கூடே

ஒரு பேய்ப் படத்தை இவ்வளவு ஃபீல்குட்டா எடுக்க முடியுமானு டவுட் இருந்தா கூடே படத்தை மறக்காமல் பாருங்க. அந்தப் படத்துல கார் ஒண்ணு வரும். நஸ்ரியா, பிரித்வி, பார்வதி, ரஞ்சித் கூடவே அந்த கார். இதுதான் அந்த காஸ்ட். காருக்கு ஒரு கதையை அந்த ஊர்ல டீக்கடை போட்ருக்குற ஆள் ஒருத்தர் சொல்லுவாரு. அவ்வளவு இதமா அந்தக் கதை இருக்கும். “லூயிஸ் சாகிப் ஒரு ஹிப்பி. அவரும் அவரோட மனைவியும் இந்த வண்டில கரங்காத இடமே கிடையாது. இங்க வந்து செட்டில் ஆகலாம்னு லூயிஸ் நினைச்சப்போ, அவரோட மனைவி அவரை விட்டு போய்ட்டாங்க. ரொம்ப நாள் திரும்பி வந்துருவாங்கனு வெயிட் பண்ணாரு. ஆனால், கடைசி வரை வரவே இல்லை. கடைசி வருஷம் அவங்களுக்கு உடம்பு சரியில்லைனு தகவல் வந்துச்சு. ரொம்ப வருத்தப்பட்டு, இங்க இருந்து பிரான்ஸுக்கு பறந்து போய்ட்டாரு. காதல் எவ்வளவு மேஜிக். அவர்கிட்ட இருந்த சொத்துகளை ஒவ்வொருத்தர்கிட்டயும் பார்த்துக்க சொல்லி கொடுத்துட்டு போனாரு. அப்படி இந்தக் கார் உங்க அப்பாக்கிட்ட வந்துச்சு”னு கதை சொல்லுவாரு. சீன்ஸ் இருக்காது. அனிமேஷன் இருக்காது. டீக்கடைல உட்கார வைச்சு இந்தக் கதையை மட்டும் சொல்லுவாரு. கேட்கும்போது நாமளும் பிரான்ஸுக்கு போன ஃபீல் கிடைக்கும். உண்மைலயே காதல் எவ்வளவு மேஜிக்லனு தோண வைச்சுரும்.

Also Read – `சூப்பர் ஸ்டார்’ பட்டம் `வேல்யூ’ என்ன? அந்த இடம் அடுத்து யாருக்கு?

உஸ்தாத் ஹோட்டல்

“வயிறை நிறைக்க யாராலயும் முடியும். ஆனால், சாப்பிடுறவங்களை மனசையும் நிறைய வைக்கணும். அது தான் சரியான கைப்புண்ணியம்” – இந்த ஒரு டயலாக்தான் படமே. சுலைமானி, பரோட்டா, பிரியாணினு எல்லா உணவு மேலயும் காதல் வரவைச்ச படம்னா உஸ்தாத் ஹோட்டல்தான். அந்த ஹோட்டலை பணையம் வைச்சு லோன் வாங்கியிருப்பாரு, திலகன். வட்டி, முதல்னு எல்லாம் சேர்ந்து, டியூ டேட்லாம் தாண்டி போய் ஹோட்டலை சீஸ் பண்ற அளவுக்கு போய்டும். ஹோட்டலை தர முடியாதுனு சொல்லிட்டு பிடிவாதத்தோட, வருத்தத்தோட அமைதியா தன்னோட கார்ல திலகன் வந்து உட்காருவாரு. வெளிய மழை அடிச்சு பெய்யும். “லோனை திரும்ப அடைக்க காசு இருக்கா?”னு துல்கர் கேப்பாரு. “இல்லை”னு சொல்லுவாரு. அப்புறம்னு திரும்ப துல்கர் கேட்கும்போது, “எனக்கு தெரியலை”னு சொல்லுவாரு. தாத்தா நீங்க ஓகேவானு கேப்பாரு. அதுக்கு எந்த பதிலும் சொல்லாமல், “பாலைவனத்துல மழை பெய்து பார்த்துருக்கியா?”னு திலகன் கேப்பாரு. “நான் பார்த்துருக்கேன். மொயினுதீன் சிஷ்தி தர்காக்கு போற வழில பார்த்துருக்கேன். அஜ்மீரகத்துக்கு முன்னால இதுபோல ஒரு மழை. அப்போ தோணிச்சு, சொர்க்கத்துக்கு இன்னும் அதிகம் தூரம் இல்லை”னு சொல்லுவாரு. ஏன், எதுக்கு, அந்த மழைய பார்த்து திடீர்னு அந்த சிச்சுவேஷன்ல சொல்லுவாருனு தெரியாது. ஆனால், அவர் சொல்லி முடிச்சதும் நமக்கே நம்பிக்கை ஒண்ணு வரும். எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும் பார்த்துக்கலாம்னு தோணும்.

டிரைவிங் லைசன்ஸ்

மிகப்பெரிய ஹீரோவுக்கும் மோட்டார் இன்ஸ்பெக்டருக்கும் நடக்குற ஈகோ கிளாஷ்தான் படமே. அவ்வளவு போராட்டம் ரெண்டு பேருக்கும் இடைல நடக்கும். கிளைமாக்ஸ்ல ஹீரோ பிரித்வி எனக்கு லைசன்ஸ் வேண்டாம்னு சொல்லிடுவாரு. நான் நடிக்கிறதுல பிரச்னைனா அதுவும் இனி வேண்டாம்னு வைக்க நான் தயார்னு சொல்லுவாரு. அதைக் கேட்டு அவரோட ஃபேன்ஸ்லாம் கடுப்பாகி மோட்டார் இன்ஸ்பெக்டர் சுராஜ் வெஞ்சரமூடை போட்டு அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. பிரித்வி போய் காப்பாத்தி கார்ல ஏத்திட்டு வருவாரு. அப்போ, ஒரு கான்வர்சேஷன் போகும். “நான் உங்களை முதல் தடவை பார்க்கும்போது என்னோட கையில கிஃப்ட் பாக்ஸ் ஒண்ணு இருந்துச்சுல? அதுல உங்களோட லைசன்ஸ்தான் இருந்துச்சு”னு சொல்லுவாரு. அப்படியே மனைவி, குழந்தையெல்லாம் அவரோட கார்லயே ஏத்திட்டு போகும்போது, “ரொம்ப நாள் ஆசை. உங்ககூட ஒரு ஃபோட்டோ எடுக்கணும்னு. எடுக்கலாமா? நடிக்கிறதை நிப்பாட்டுறேன்னு சொன்னீங்கள்ல. சும்மாகூட அப்படி சொல்லாதீங்கனு சொல்லுவாரு. உடனே, பிரித்வி அவர் தோள் மேல கைய போட்டு போஸ் கொடுப்பாரு. செம மொமண்டா இருக்கும்.

மலையாள படங்கள்ல படங்களாவே நிறைய ஃபீல் குட் படங்கள் இருக்கு. பெங்களூர் டேஸ், ஹோம், ஜோ அண்ட் ஜோ, நார்த் 24 காதம், சுடானி ஃப்ரம் நைஜீரியா, ஜேக்கபிண்ட சொர்க்க ராஜ்ஜியம், 1983, கோதா, எபி, ஆக்‌ஷன் ஹீரோ பிஜு, உயரே, விஜய் சூப்பரும் பௌர்ணமியும், ஜுன், தண்ணீர் மாத்தான் தினங்கள், 100 டேஸ் ஆஃப் லவ், ஓம் ஷாந்தி ஒஷானானு எக்கச்சக்கமான படங்களை சொல்லிட்டே போகலாம். இந்த வீடியோக்கு பார்ட் 2 வேணும்னாலும் சொல்லுங்க பார்த்து பண்ணிடலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top