வாரிசு இயக்குநர் வம்சியின் இந்தப் படங்கள் பத்திலாம் தெரியுமா?

டோலிவுட்டின் பிரபல இயக்குநரான வம்சி, தற்போது விஜய்யின் வாரிசு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். தற்போதைய தெலங்கானாவில் 1979 ஆம் ஆண்டு பிறந்த இவர், 2007-ல் முன்னா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சாஃப்ட்வேர் என்ஜினீயராக கரியரைத் தொடங்கிய இவருக்கு சினிமா மீது தீராத காதல் இருந்தது. இதனால், சாஃப்ட்வேர் வேலையைத் துறந்துவிட்டு சினிமாத் துறையில் காலடியெடுத்து வைத்தார். 2002-ல் வெளியான ஈஸ்வர், 2004-ல் வெளியான வர்ஷம், மாஸ், பத்ரா போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.

டோலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ஒரு படம் இயக்கியிருக்கிறார் வம்சி. நாகர்ஜூனா, கார்த்தி, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்த தோழா படத்தின் இயக்குநர் இவர்தான். இவர் தற்போது விஜய்யின் வாரிசு படத்தையும் இயக்கி வருகிறார். நாம இந்தக் கட்டுரையில் வாரிசு இயக்குநர் வம்சியின் முந்தைய படங்கள் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

முன்னா(2007)

Munna
Munna

கடந்த 2007-ல் வெளிவந்த முன்னா படம்தான் வம்சியின் முதல் படம். முன்னா என்ற கல்லூரி மாணவனை மையமாக வைத்து நகரத் தொடங்கும். தனது தாய் மற்றும் சகோதரியை கொன்ற ரவுடியான தன் தந்தையைப் பழிதீர்ப்பதே முன்னாவின் லட்சியம். பிரபாஸ், இலியானா, பிரகாஷ் ராஜ் என பெரிய ஸ்டார் காஸ்டிங்கோடு வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக ஜொலிக்கவில்லை.

பிருந்தாவனம் (2010)

Brindavanam
Brindavanam

வம்சியை இயக்குநராக அனைவரிடமும் கொண்டு சென்ற படம்தான் 2010-ல் தெலுங்கில் வெளிவந்த பிருந்தாவனம். ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால், சமந்தா, கோட்டா ஸ்ரீநிவாசராவ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகப் பேசபட்டது. காதலி இந்துவின் வற்புறுத்தலால் கிராமத்தில் உள்ள தோழியின் காதலனாக நடிக்க வரும் ஹீரோவை, கிராமத்தில் உள்ள தோழியின் குடும்பத்தினருக்கு பிடித்து போக நாளடைவில் தோழிக்கும் ஹீரோவை பிடித்து போக கலாட்டாவாக போய்கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்கிற முடிவை ரசிகர்கள் பக்கமே விட்டு விட்டார் இயக்குநர் வம்சி.

யவடு (2014)

Yevadu
Yevadu

பிருந்தாவனத்துக்கு அடுத்ததாக வம்சியின் இயக்கத்தில் 2014-ல் தெலுங்கில் வெளிவந்த படம் தான் யவடு. ராம் சரண், ஸ்ருதி ஹாசன், அல்லு அர்ஜூன், எமி ஜாக்சன், காஜல் அகர்வால் என பெரிய ஸ்டார்களோடு உருவானப்படம். சதியால் தன் காதலியை கொன்ற ரவுடி கும்பலைப் பழிவாங்கத் துடிக்கும் ஹீரோ. விபத்தில் சிதைந்த தனது முகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்து, வேறொரு ஆளாக அவதாரம் எடுப்பார். அந்தப் புதிய முகத்தால் ஏற்படும் பிரச்னைகளை சமாளித்து வில்லன் கோஷ்டியை ஹீரோ பழிவாங்கினாரா என்பதே கதை. இந்தப் படம் தெலுங்கின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் வம்சியைக் கொண்டு சேர்த்தது.

தோழா (2016)

Thozha
Thozha

வம்சி இயக்கத்தில் 2016-ல் ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகிய படம் தான் தோழா. தெலுங்கில் ஒப்பிரி, தமிழில் தோழா என்ற பெயரிலும் தமன்னா, கார்த்தி, அனுஷ்கா, ஸ்ரேயா, பிரகாஷ் ராஜ், கல்பனா மற்றும் நாகர்ஜூன் என பெரிய நட்சத்திரங்கள் நடித்த படம். பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் ஹிட் அடித்தது. “oliver Nakache & eric tolendano” என்ற பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக எடுக்கப்பட்டது. மாஜி கார் ரேஸராக இருந்து விபத்தில் கை, கால்கள் செயலிழந்து ஐந்து வருடங்களாக வீல் சேரில் வாழ்ந்து கொண்டிருப்பார் பணக்காரரான விக்ரம். அவரின் கேர் டேக்கராக வருவார் சீனு. விக்ரமின் கனவுகளை நிஜமாக்க சீனு உதவி செய்வார். ஃபீல் குட் மூவியாக தோழா ரசிகர்களின் குட்புக்கில் இடம்பிடித்தது.

மகரிஷி (2019)

Maharishi
Maharishi

மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே, அல்லரி நரேஷ், கோட்டா ஸ்ரீநிவாசராவ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து 2019-ல் வெளிவந்த படம் தான் மகரிஷி. விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் பேசிய மகரிஷி, மகேஷ் பாபு ரசிகர்களின் ஆதர்ஸமான படங்களில் முக்கியமான படமாக அமைந்தது.

இந்த வரிசையில்தான் விஜய்யை வைத்து தமிழ், தெலுங்கு என ஒரே சமயத்தில் வாரிசு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் வம்சி. அவரோட படங்கள்ல உங்க ஃபேவரைட் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top