விஜய்க்கு 47 வயது முடிந்துவிட்டது. ஆனால் அவரது பிட்னெஸ்ஸைப் பார்த்தால் யாராலும் அவரது வயதை கணிக்கமுடியாது. அடுத்த படத்தில் காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கிறார் விஜய் என்றால் யாரும் ஆச்சர்யப்பட போவதில்லை. அப்படித்தான் தனது ஃபிட்னெஸ்ஸை பக்காவாக மெயிண்டெய்ன் செய்துவருகிறார் விஜய். இதற்காக அவர் என்னவெல்லாம் செய்கிறார் தெரியுமா?
ஷூட்டிங் இல்லாத நாட்களில் தினமும் 2 மணி நேரம் கடுமையான உடற்பயிற்களை செய்வார் விஜய். உடல் தசையை இறுக்காத அதேசமயம் ஃபிட்டாக வைத்திருக்க உதவும் பயிற்சிகள்தான் விஜய்யின் சாய்ஸ். உடலை டைட் செய்யும் பயிற்சிகளை படத்தின் காட்சிகளுக்கு தேவைப்பட்டால் மட்டுமே செய்துகொள்வார். சமீபத்தில் ‘மாஸ்டர்’ பட கிளைமேக்ஸ் காட்சிகளுக்காக தன் உடலை டைட் செய்து நடித்துக்கொடுத்திருக்கிறார் விஜய். ஷூட்டிங் இருக்கும் நாட்களில் விஜய், உடற்பயிற்சிகளை செய்வதில்லை. அதற்கு பதிலாக ஒரு நெடிய வாக்கிங் சென்று சமன் செய்துவிடுவார்.
விஜய்யின் ஃபிட்னெஸ்ஸுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சைக்கிளிங். ஆரம்பத்தில் உடற்பயிற்சிக்காக சைக்கிளிங்கை ஆரம்பித்த விஜய்க்கு, அது தற்போது மிகப்பெரிய பொழுதுபோக்காகவும் மாறியிருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் அடையாளங்களை மறைத்துக்கொண்டு ஈ.சி.ஆர் ரோட்டில் சைக்கிளிங் போக ஆரம்பித்துவிடுவார் விஜய். ஈ.சி.ஆர் பகுதிகளில் ஷூட்டிங் என்றால் சைக்கிளிலேயேகூட வந்துபோய்விடுவார்.
முக மலர்ச்சிக்காக விஜய் செய்வது ஒன்றே ஒன்றுதான். சரியான தூக்கம். ஷூட்டிங் இருந்தால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டும்தான் உழைப்பது என்பது விஜய் கடைபிடித்துவரும் நீண்ட கால கொள்கை. மாலை ஆறு மணிக்கு மேல் ஒரு நொடிகூட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கமாட்டார் . இரவு ஷூட்டிங் என்றால் முன்கூட்டியே அவருக்கு தெரியப்படுத்தி இருக்கவேண்டும். அதற்கேற்ப அவர் தன் ஓய்வு நேரங்களைத் திட்டமிட்டுக்கொள்வார். சரியான நேரத்தில் தூங்கி எழுந்தால்தான் ஸ்கிரீனில் முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் என்பது விஜய்யின் கருத்து.
டயட் விஷயத்திலும் விஜய் கில்லிதான். காலை நேர உணவாக ஒரு கப் பழங்கள், வேகவைத்த பருப்புவகைகள், இளநீர் போன்றவைகளையும், மதிய உணவாக சிக்கன், முட்டை, இரண்டு பிரெட் துண்டுகளையும் மாலை நேரத்தில் பிரெட் துண்டுகளையும் காய்கறி சாலட்டையும் எடுத்துக்கொள்வார் விஜய். இதற்கு இடைபட்ட நேரத்த்தில் தண்ணீரைத் தவிர வேறெதுவும் கிடையாது. மாலை 6 மணிக்கு மேல், இன்னும் சொல்லப்போனால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எந்த உணவையுமே எடுத்துக்கொள்ள மாட்டார் விஜய். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள்தான் நம் உடலில் ஜீரணம் ஆகாமல் உடல் உபாதைகளை தருகிறது என்றும் அவைதான் கெட்ட கொழுப்புகளாக உடலில் தங்கி தொப்பை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகிறது என்றும் சொல்வார் விஜய்.
Also Read – லயோலா நட்பு… வீக்லி மீட்டிங்… விஜய்யின் ஃப்ரண்ட்ஸ் கேங்கைத் தெரியுமா?