ப்ரி டயாபடிக்ஸ் அல்லது டயாபடிக்ஸில் இருக்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை மேனேஜ் செய்வது ரொம்பவே சவாலானது. எந்த உணவை சேர்த்துக்கொள்ள வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்ற தேர்வும் சிக்கல் தரக்கூடியதாக மாறலாம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் 5 உணவுகள்.
ஆப்பிள்

ஆப்பிளில் இருக்கும் குறைந்த அளவு கிளைசெமிக் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவக் கூடியது. டயாபடிக்ஸ் டயட்டில் இருக்கும்போது இரண்டு வேளை உணவுகளுக்கிடையே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரையின் அளவை மட்டுமல்ல, ஆப்பிளில் இருக்கு ஃபைபர், வைட்டமின் சி போன்ற சத்துகள் உடல்நலனை சீராக மெயின்டெய்ன் செய்யவும் உதவும்.
பாதாம் பருப்பு

தினசரி ஹெல்தி ஸ்நாக்காக பாதாம் பருப்பை எடுத்துக் கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவும். உங்கள் உடலில் இயல்பாகவே சுரக்கும் இன்சுலினை எஃபக்டிவாகப் பயன்படுத்த உதவும் மெக்னீசியம் தாது பாதாமில் நிறையவே இருக்கிறது. அதேபோல், பாதாமில் இருக்கும் புரோட்டின், ஃபைபர் போன்றவை ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பில் முக்கியப் பங்காற்றக் கூடியவை.
கீரை வகைகள்

சத்துகள் நிறைந்த கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவும். சமைக்கப்பட்ட ஒரு கப் கீரை 21 கலோரிகளை மட்டுமே கொண்டது. இதிலிருக்கும் மெக்னீசியமும் ஃபைபரும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சீராக்க உதவுபவை.
ஓட் மீல்

ஓட்ஸ் உங்கள் இதயத்துக்கு மட்டுமல்ல ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவும். ஆப்பிளைப் போலவே இதுவும் குறைந்த அளவு கிளைசெமிக் கொண்டது. ஸ்டீல் கட், ரோல்டு ஓட்ஸ் இரண்டிலுமே குறைவாக இருக்கும் கிளைசெமிக், இன்ஸ்டண்ட் ஓட்ஸில் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டயாபடீக் ஃப்ரண்ட்லி ஃபார்முலா
ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க தினசரி உடற்பயிற்சிகள், லைஃப்ஸ்டைல் மாற்றம் இதையெல்லாம் மேற்கொண்டிருந்தாலும் டயாபடிக் ஃப்ரண்ட்லி ஃபார்முலா ஒன்றையும் மெயிண்டெய்ன் செய்யுங்கள் என்கிறார்கள் டயட்டீஷியன்கள். வைட்டமின்கள், ஆண்டி – ஆக்ஸிடெண்டுகள், புரதச் சத்து போன்றவைகளை உள்ளடக்கிய உணவு வகைகளை உங்கள் டயட்டீஷியனிடம் பரிந்துரையைப் பெற்று பிளான் செய்துகொள்ளுங்கள். இதுவும் ரொம்பவே உதவிகரமாக இருக்கும்.
Also Read – இதை சாப்பிட எந்த கில்டும் வேண்டாம்… 100 கலோரிக்கும் குறைவான 5 ஹெல்தி ஸ்நாக்ஸ்!