துள்ளாத மனமும் துள்ளும்

துள்ளாத மனமும் துள்ளும் ஏன் எல்லோருக்கும் பிடிச்சது.. 5 காரணங்கள்!

விஜய், சிம்ரன் நடிப்புல 1999-ம் ஆண்டு வெளியான படம் துள்ளாத மனமும் துள்ளும். இயக்குநர் எழிலுக்கு முதல் படம். விஜய் வாழ்க்கையில் ஹீரோ இமேஜை உயர்த்துனதுல இந்தப் படத்துக்கு முக்கியமான பங்கு இருக்கு. இந்தப்படத்துல செண்டிமெண்ட், ஆக்‌ஷன், காதல்னு எல்லாமே தேவையான அளவுல இருந்தது. என்ன பாஸ் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே இதுனு நினைக்கிறது புரியுது. ஆனா, இந்த படம் இப்போ பார்த்தாலும் எல்லோருக்கும் பிடிக்கும். அதுக்கான 5 காரணங்களைத்தான் பார்க்கப் போறோம்.

துள்ளாத மனமும் துள்ளும் – கேரக்டர் பெயர்கள்!

இந்த படத்துல குட்டிங்குற கலகலப்பான கேரக்டர்ல நடிச்சிருப்பார், விஜய். சிம்ரன் ருக்குங்குற பேர்ல காலேஜ் ஸ்டூடண்டாவும், பார்வையில்லாத பெண்ணாவும் கலக்கியிருப்பாங்க. அன்னைக்கு ஒவ்வொரு கிராமத்துலயும் குட்டி, ருக்கு பேர்ல ஆட்கள் இருந்தாங்க. ரொம்பவே பிரபலமான பேரும் கேரக்டர்கூட ஒண்ணா பயணிக்க வச்சதுக்கு முக்கியமான காரணம்னு சொல்லலாம்.

இசை!

வழக்கமான எஸ்.ஏ.ராஜ்குமார் மியூசிக்ல இருந்து கொஞ்சம் வித்தியாசமா இருந்தது துள்ளாத மனமும் துள்ளும். கதையும், நடிகர்களோட நடிப்பும் பாதிபடத்தை தாங்கி பிடிச்சா, அதுக்கு ஈக்வலா மியூசிக் இந்த படத்தைத் தாங்கிப் பிடிச்சது. அன்னைக்குக் காலகட்ட ரேடியோக்கள், ‘இன்னிசை பாடிவரும்’, ‘மேகமாய் வந்து போகிறேன்’, ‘இருபதுகோடி நிலவுகள்கூடி’, தொட தொட நிலவே’னு இந்தபாட்டுகள் பாடாம எந்த விழாவும் நடக்காதுன்னு கூட சொல்லலாம். அதுவும் இன்னிசைபாடி வரும் பாட்டு க்ளைமேக்ஸ்ல கதையில நடத்துனது வேறலெவல் சம்பவம்.

க்ளைமாக்ஸ்!

படத்தோட ஆரம்பத்துலயே விஜய் ருக்குவ பார்க்கப் போறேன்னு ஆரம்பிக்கிறதுல இருந்து படத்தோட கதை போக போக, இண்டர்வெல் டைம்லயே காதல்ஜோடி சேர்ந்தா நல்லா இருக்குமேன்னு ரசிகர்களை படபடக்க வச்சு, க்ளைமேக்ஸ் வரை நகர்த்துனதுல இயக்குநர் எழிலுக்கு முக்கிய பங்கு இருந்தது. ‘இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை’னு ரத்தம் வடிய விஜய் பாட, சிம்ரன் ஓடி வர்ற சீன் வேற லெவல்ல இருக்கும்.

விஜய்!

வழக்கமா ஹீரோயினை துரத்தும் ஹீரோனு ட்ரெண்ட் இருந்த காலக்கட்டம். அதை கொஞ்சம் மாற்றி கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்திருந்தார் விஜய். சிம்ரனுக்கு பார்வை பறிபோன பின் தன்னோட வீட்டுக்கு கூட்டி வந்த விஜய் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் காட்சிகள் விஜய்க்கு அதிகமான ரசிகைகளைக் கொடுத்தது. தன்னோட அம்மா இறக்குற செய்திகேட்கும் விஜய், தனியா போய் பீல் பண்ணி அழுதுட்டு வர்ற சீன்ல நடிகர் விஜய் குட்டியாகவே மாறியிருந்தார். அந்த படத்துல அம்மா யார்னு கடைசி வரை காட்டியிருக்க மாட்டாங்க. காதலியின் முன் பரிதாபமான இளைஞன், அதே காதலிக்கு ஒண்ணுனா அடிச்சு துவம்சம் செய்யுற ஆக்‌ஷன்னு கலந்துகட்டி வெரைட்டி காட்டியிருப்பார் விஜய். முக்கியமா இந்த படத்தோட குட்டி கேரெக்டர் விஜய்க்கு ஹேட்டர்ஸ்னும் யாரும் இருக்க முடியாது.

சிம்ரன்!

விஜய்க்கு எப்படி கரியர்ல முக்கியமான படமோ, அதே மாதிரி சிம்ரனுக்கும் கரியர்ல முக்கியமான படமா இருந்தது. காலேஜ் ஸ்டூடண்ட், பார்வையில்லாத பெண், மாவட்ட கலெக்டர்னு மூணு ட்ரான்ஸ்பர்மேஷன்லயும் அச்சு அசலா பொருந்தியிருப்பாங்க. க்ளைமேக்ஸ்ல போலீசை விட்டு விஜய்யை அடிக்கச் சொல்ற சிம்ரன் கேரக்டர் மேல ரசிகர்களுக்கு கோபம் வரலை, பரிதாபம்தான் வந்துச்சு. அடுத்த சீன்லயே பஸ்ல ‘நீங்க குட்டியா’னு அழுதுகிட்டே கேட்குற சீன்ல நடிப்புல வெளுத்து வாங்கியிருப்பார் சிம்ரன்.

Also Read – ‘சூது கவ்வும்’ தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் .. ஏன் – 4 காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top