இன்றைய சூழலில் அத்தியாவசியமாகிவிட்ட Health Insurance பாலிசி ஒன்றை வாங்கும் முன்னர் நீங்கள் அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய 5 விஷயங்கள்..!
Health Insurance பாலிசி
லாங் வொர்க்கிங் ஹவர்ஸ், அமர்ந்தபடியே நீண்ட நேரம் வேலை பார்ப்பது போன்ற பல காரணங்களால் நம் அன்றாட வாழ்க்கை முறையில் நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கம் போன்றவற்றால் பல்வேறு நோய்களுக்கும் இலக்காகி நிற்கிறோம். இப்படியான Lifestyle Diesease-கள் அதிகமாகிவிட்ட நிலையிலும் கொரோனா பெருந்தொற்று போன்ற சூழலிலும் Health Insurance பாலிஸி தவிர்க்க முடியாததாகிவிட்டது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் காப்பீடு இருக்கும்பட்சத்தில், எதிர்பாராத தருணங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். அதேநேரம், Health Insurance பாலிசி வாங்குவதற்கு முன்னர், சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்துகொண்டு வாங்குவது நலம்.
அப்படியான 5 விஷயங்களைப் பத்திதான் நாம இப்போ பார்க்கப்போறோம்.
ரூம் வாடகை
காப்பீடு வாங்கும் முன்னர், நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, அதில் Sub-Limits ஏதாவது இருக்கிறதா என்பதைத்தான். இதுபோன்ற பாலிசிகளில் உங்கள் மொத்த காப்பீட்டுத் தொகையில், குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை மட்டுமே மருத்துவமனைகளில் நீங்கள் தங்கி சிகிச்சை எடுக்கையில், அந்த அறையின் வாடகையாகக் கொடுக்க முடியும். உதாரணமாக, நீங்கள் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான காப்பீட்டை எடுத்திருந்தால், அதில் ஒரு சதவிகிதம் Sub-Limit என்றால், அறை வாடகையாக நீங்கள் ஆயிரம் ரூபாயை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதேபோல், மருத்துவர் கட்டணம் உள்ளிட்டவைகளுக்குக் கட்டுபாடு விதிக்கும் பாலிசிகளை Ignore செய்துவிடுவது நல்லது.
Co-payment
இன்சூரன்ஸ் பாலிசிகளின் பிரீமியம் தொகை குறைவாக இருக்க முக்கியமான காரணம் Co-payment எனப்படும் முறைதான். இதன்மூலம், மருத்துவமனைகளில் செலவழிக்கும் மொத்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை பாலிசி எடுத்திருப்பவர் செலுத்த வேண்டும். அடிக்கடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் சீனியர் சிட்டிசன்கள் போன்றோரே இதைத் தேர்வு செய்வார்கள்.
Co-payment ஏன் முக்கியம்?
பெரிய அளவில் இருக்கும் பிரீமியம் தொகையை முழுமையாக உங்களால் செலுத்த முடியாது என்கிறபட்சத்தில் நீங்கள் Co-payment முறை கொண்ட பாலிசியைத் தேர்வு செய்யலாம். இந்த Co-payment சதவிகிதம் என்பது 10-20 சதவிகிதம் என்கிற அளவில் மிகக்குறைவான தொகையாகவே இருக்கும். எனவே, இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் முன்னர் Co-payment முறை இருக்கிறதா என்பதை குறிப்பிட்ட நிறுவனத்திடம் விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
காத்திருப்பு காலம்
ஒரு பாலிசியைத் தேர்வு செய்யும் முன்னர், Waiting Period எனப்படும் காத்திருப்பு காலத்தைத் தெரிந்துகொண்டு செலெக்ட் செய்வது நல்லது. உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சையை பாலிசி எடுத்த நாளில் இருந்து எவ்வளவு காலம் கழித்து எடுத்துக்கொள்ள முடியும் என்பதுதான் இந்த காத்திருப்பு காலம். பொதுவாக 1 முதல் 4 ஆண்டுகளாக காத்திருப்பு காலம் இருக்கும். நீங்கள் ஒரு பாலிசியை எடுத்திருக்கும் நேரத்தில், உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய் பாதிப்பு அதிகமாகும்பட்சத்தில், காத்திருப்பு காலத்தால் அந்த நோய்க்கு உடனடியாக நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாமல் போகலாம். அப்படியான சூழலில் காப்பீடு எடுத்தும் பயனில்லாமல் போய்விடும். இதனால், குறைவான வெயிட்டிங் பீரியட் கொண்ட பாலிசிகளைத் தேர்வு செய்வது நல்லது. குறிப்பாக, உங்கள் பெற்றோர் போன்ற வயதானவர்களுக்கு பாலிசி வாங்கும்போது, இதைக் கவனித்தில் கொண்டு காப்பீட்டைத் தேர்வு செய்யுங்கள்.
உப-பொருட்கள்
மருத்துவ சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகள், கிளவுஸ்கள், மாஸ்குகள், தெர்மா மீட்டர் போன்ற உப-பொருட்களுக்கான செலவைக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளாது. பாலிசி எடுத்தவர்கள்தான் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாக, மொத்த செலவில் 5 முதல் 10% இந்தப் பொருட்களுக்கு செலவாகும். இப்படியாக, 199 பொருட்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலிட்டு வைத்திருக்கின்றன.
Also Read – Identity theft ஆல் பாதிக்கப்பட்டவரா நீங்கள்.. உங்கள் கிரடிட் ஸ்கோரை சரிசெய்வது எப்படி?