`Thug life’ இந்த வார்த்தைக்கான அர்த்ததை இன்டர்நெட் பயன்படுத்திக்கொண்டிருக்கும் உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பெரும்பாலும் பேச்சில் கில்லியாக இருக்கும் ஆட்கள்தான் அதிகம் இந்த thug life சம்பவங்களை செய்துவந்துகொண்டிருக்க, அதிகம் பேசாத இண்ட்ரோவெர்ட் ஆட்களும் அவ்வபோது சில thug life சம்பவங்கள் செய்வதுண்டு. அவர்களில் மிக முக்கியமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதிர்ந்துகூட பேசிடாத இவர் செய்த ஐந்து முக்கியமான thug life சம்பவங்கள் இங்கே.
சம்பவம் -1
ஐஃபா விருது என்பது ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்குமான ஒரு விழா. ஆனால் அந்த வருடம் துபாயில் நடந்த அந்த விழாவில் மற்ற மொழி கலைஞர்களை புறக்கணிக்கும் விதமாக விழா முழுக்க இந்தியிலேயே நடைபெற்றுவந்தது. இது அனைவருக்கும் எரிச்சலைத் தந்துக்கொண்டிருந்தது. அப்போது சிறந்த நடிகருக்கான விருதை வழங்க ஏ.ஆர்.ரஹ்மானை அழைக்க அவரும் மேடையேறி வந்தார், வந்தவர் அந்த கார்டை வாங்கி, தூய தமிழில் ‘சிறந்த நடிகருக்கான விருது திரு ரன்பீர் கபூர் அவர்களுக்கு’ என வாசிக்க ஒட்டுமொத்த அரங்கமே ஒரு கணம் ஆடிப்போய், பின்னர் அதன் பின்னால் இருக்கும் நியாயத்தை உணர்ந்து மிகப்பெரிய கைத்தட்டல்களை அவருக்கு வாரி வழங்கினார்கள்.
Also Read:
சம்பவம் – 2
ஒரு பிரஸ்மீட்டில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவரை எரிச்சலூட்டும் நோக்கத்தில் ஒரு நிருபர், “ஏன் உங்க பாட்டுல வரிகள்லாம் புரியமாட்டேங்குது. ஒரே இரைச்சலா இருக்கு’ எனக் கேள்வி கேட்க, ஏ.ஆர்.ரஹ்மானோ சிம்பிளாக, ‘உங்க வீட்டுல இருக்குற ஸ்பீக்கர் சரியில்லனு நினைக்கிறேன். மாத்திடுங்க’ என்றார். அந்த நிருபருக்கோ மேற்கொண்டு என்ன பேசுவதெனத் தெரியவில்லை.
சம்பவம் – 3
ஏ.ஆர்.ரஹ்மான் சொந்தமாக தயாரித்த ‘99 ஸாங்க்ஸ்’ படத் தமிழ் பதிப்பின் ஆடியோ லாஞ்ச் சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சித் தொகுத்து வழங்கிய பெண், படத்தின் ஹீரோ ஒரு வட இந்தியர் என்பதால், அவரை மட்டும் ஹிந்தியில் பேசி வரவேற்க, மேடையிலிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஹிந்தி?’ என ஒரேயொரு வார்த்தையை கேள்விக்குறியுடன் சேர்த்துக் கூறிவிட்டு உடனே மேடையிலிருந்து இறங்கிவிட அரங்கரமே அடுத்த சில நிமிடங்கள் ஆர்ப்பரித்துப்போனது.
சம்பவம் – 4
இதுவும் ஒரு பிரஸ் மீட்டில் நடந்ததுதான். ஒரு நிருபர் அவரிடம், ‘ஆஸ்கர் விருது அறிவிக்கப்போற அந்த கணத்துக்கு முன்னாடி அந்த இடத்துல இருக்கும்போது உங்களுக்கு டென்சன் இருந்துச்சா.. எவ்வளவு தூரம் டென்சனா இருந்தீங்க..?’ எனக் கேட்க, ஏ.ஆர்.ரஹ்மான், ‘ இதுக்கு முன்னாடி என் லைஃப்ல நான் ஒரேயொரு தடவைதான் இவ்ளோ டென்சனா இருந்தேன். அது என் கல்யாணத்துக்கு முதல் நாள்’ என சொல்ல அந்த இடமே கலகலப்பானது.
சம்பவம் – 5
மும்பையில் நடந்த ஒரு சினிமா விழா. சல்மான் கான், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் அதில் சிறப்பு விருந்தினர்கள். அப்போது பேசிய சல்மான்கான், ரஹ்மானை கிண்டலடிக்கும் நோக்கில், ‘ரொம்ப ஆவரேஜான மியூசிக் டைரக்டர்தான் நம்ம ரஹ்மான். ஆனா ஆஸ்கர் வாங்கிட்டாரு’ என சொல்லி சிரித்துவிட்டு ஏ.ஆர்.ரஹ்மானைப் பார்த்து, ‘உண்மைதான..?’ எனக் கேட்க, அவரும் ‘ஆமா உண்மைதான்’ என்றார். ஆனால் அதன்பிறகு நடந்ததுதான் சம்பவம், கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டோமோ என சல்மான் கான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கை கொடுக்கவர, ஏ.ஆர்.ரஹ்மானோ தன்னுடைய கோட் பாக்கெட்டுகளில் இருந்து தன்னுடைய கைகளை எடுக்காமலயே இருந்தார். உடனே சுதாரித்துக்கொண்ட சல்மான் கான், அவரது இடது கையை கோட்டிலிருந்து எடுத்து பிடித்துக்கொள்ள, ஏ.ஆர்.ரஹ்மான் பெரிதாக ரியாக்ட் எதுவும் செய்யாமல் தன்னுடைய கையை விடுவித்து கோட்டிலேயே துடைத்துக்கொண்டு மீண்டும் பாக்கெட்டில் வைத்துக்கொள்வார். ஏ.ஆர்.ரஹ்மான் செய்த thug life சம்பவங்களிலேயே மிகப்பெரிய சம்பவமான இது பாலிவுட்டில் மிகப் பிரபலம்.