ஆரம்ப காலத்தில் இருந்தே அவ்வபோது அஜித் கேமியோ ரோல்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவ்வாறு அவர் நடித்த கேமியோ ரோல்கள் பற்றிப் பார்க்கலாமா..?
ராஜாவின் பார்வையிலே – 1995
‘தல’யின் முதல் கேமியோ ‘தளபதி’ படத்தில்தான். படத்தின் ஹீரோவான விஜய்க்கு நண்பனாக அஜித் நடித்த இந்தப் படம் விஜய் – அஜித் ரசிகர்களுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க படமாக அமைந்துபோனது. இன்றும் விஜய் அஜித் ரசிகர்கள் எப்போதாவது இணைந்து சமூக பிரச்சனைக்கு குரல் கொடுக்கும்போது இந்தப் பட ஸ்டில்களைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள்.
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் -1998
இயக்குநர் விக்ரமன், தன் கரியரின் உச்சத்தில் இருக்கும்போது கார்த்திக்கை வைத்து இயக்கிய படம் `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’. இந்தப் படத்தில், இப்போது அதிகம் கலாய்க்கப்படும்.. அப்போது பெரும் வழக்கத்தில் இருந்த அமெரிக்க்க மாப்பிள்ளை ரோலில் நடித்திருப்பார் அஜித். இந்தப் படத்தில் கார்த்திக்கும் அஜித்துக்கும் இடையே அற்புதமான ஒரு ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி இருக்கும்.
நீ வருவாய் என-1999
அஜித் நடித்த கேமியோ ரோல்களிலேயே தி பெஸ்ட் என இந்தப் படத்தில் நடித்ததைக் குறிப்பிடலாம். ‘ந—ந்—தி—னி.. நந்தினி’ என சொல்லி அஜித் அறிமுகமாவது தொடங்கி அந்த ஃபிளாஷ்பேக் முழுக்கவே துறுதுறுவென நடித்து அசத்தியிருப்பார் அஜித்.
என்னைத் தாலாட்ட வருவாளா – 2003
இந்தப் படத்தின் தலைப்பே சற்று வில்லங்கமானது. விஜய் – அஜித் ரசிகர்களிடையே மோதல் தொடங்கியிருந்த சமயம் அஜித் படம் போட்டு விஜய் பட பாடலிருந்து ‘என்னைத் தாலாட்ட வருவாளா’ என டைட்டில் வைத்திருந்தார்கள். ஹீரோவாக விக்னேஷ் நடிக்க 90-களின் முற்பகுதியில் தொடங்கப்பட்டு பல வருட தாமத்திற்குப் பிறகு வெளியான இந்தப் படத்தில் அஜித் கெஸ்ட் அப்பியரன்ஸ் செய்திருப்பார். ஆரம்பத்தில் ‘வெண்ணிலா’ என டைட்டில் இடப்பட்ட இந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் பிறகு என்ன நினைத்தாரோ ரிலீஸின்போது இந்த டைட்டிலை வைத்துவிட்டார்.
இங்கிலீஷ் விங்கிலீஷ் – 2012
பாலிவுட்டில் ஸ்ரீதேவி கம்பேக் கொடுத்த `இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் தமிழ் வெர்சனில் அஜித் கேமியோ ரோலில் நடித்திருப்பார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் தனது மெச்சூர்டான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார் அஜித். அப்போது ஸ்ரீதேவி குடும்பத்துடன் அஜித்துக்கு ஏற்பட்ட நட்புதான் தற்போதுவரை ‘வலிமை’யாக இருந்து வருகிறது.
தல ரசிகர்களே இவற்றுள் எந்தப் படத்தில் அஜித் நடித்திருக்கும் கேமியோ உங்களது ஆல்டைம் ஃபேவரைட் என கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்!
Also Read – ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்… அடுத்து யார்?