மெஸ்ஸியோட காதல் கதைய ஒரு சினிமாவா எடுக்கலாம் அந்தளவுக்கு சுவாரஸ்யமானது. அதுல நீதானே என் பொன்வசந்தம், காதல் கோட்டை, வாரணம் ஆயிரம் மாதிரி பல படங்கள்ல இருந்த ஃபீல் இருக்கும். அந்தக் கதையைத்தான் நாம இந்த வீடியோல தெரிஞ்சுக்கப்போறோம்.
நம்ம ஊர்ல கிரிக்கெட் எப்படியோ அப்படித்தான் அர்ஜண்டினால ஃபுட்பால். அந்த விளையாட்டு அவங்க ரத்தத்துலயே கலந்தது. வீட்டுக்கு ஒருத்தரை ஃபுட்பாலுக்குனு நேந்து விட்ருவாங்க. அப்படித்தான் ரொம்ப சின்ன வயசுல இருந்து மெஸ்ஸி ஃபுட்பால் விளையாட ஆரம்பிச்சிருந்தாரு. அப்போ அவரோட ஃபுட்பால் பால்விளையாடுற லூகஸ்ங்குற ஃப்ரெண்ட் மெஸ்ஸிக்கு ரொம்ப க்ளோஸ். ரெண்டு பொடிசுகளும் எப்பவும் ஒண்ணா சுத்தும்ங்க. மெஸ்ஸிக்கு ஒன்பது வயசு இருக்கும்போது லூகஸ்ஸோட வீட்டுக்கு அடிக்கடி போவாரு. ஒருநாள் அவரோட வீட்டுல ரெண்டுபேரும் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடிட்டு இருக்காங்க. அப்போ ‘உங்களுக்கு எதாச்சும் வேணுமா?’ அப்படினு ஒரு குரல். என்னடா இது புதுக்குரலா இருக்குனு திரும்புனா ஒரு குட்டிப் பொண்ணு நின்னுட்டு இருக்கு. அதை பார்த்ததுமே மெஸ்ஸிக்கு ல்தகாசைஆ வந்திடுது. அந்த டைம்ல அந்தப் பொண்ணுக்கு ஒரு எட்டு வயசு இருக்கும். மெஸ்ஸியைவிட ஒரு வயசு கம்மி. இந்த இடத்துல மெஸ்ஸியை பத்தி ஒரு விஷயம் சொல்லணும். அவர் ஒரு இன்ட்ரோவர்ட். புது ஆட்கள்ட்ட பேச ரொம்பவே கூச்சப்படுவாரு. அந்த பொண்ணு கேட்டதுக்கு எதுவும் சொல்லாம அமைதியா இருந்துடுறாரு. அது போனபிறகு லூகஸ்கிட்ட அது யாரு என்னனு விசாரிக்கிறாரு. “அந்த பொண்ணு பேரு ஆண்டோனெல்லா, என்னோட கசின் சிஸ்டர். எங்க வீட்டுலதான் இருப்பா” அப்படினு லூகஸ் சொல்றாரு. இப்போ மெஸ்ஸிக்கு லூகஸ் வீட்டுக்கு வர கம்பியூட்டர் கேம்ஸ் தாண்டி இன்னொரு ரீசனும் கிடைக்குது. அடிக்கடி போறாரு.
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே பாட்டுல வர்ற மாதிரி இவங்க ரெண்டு பேருக்குள்ள நட்பு வளர்ந்துகிட்டே போகுது. எந்தளவுக்குனா அத்துணூண்டு வயசுல தலைவன் லவ் லெட்டர் எழுதுற அளவுக்கு. ஒரு நாள் மெஸ்ஸி ஒரு பேப்பர் பேனாவை எடுத்து ‘ஆண்டோனெல்லா’னு பேர் எழுதிட்டு அடுத்த வரி என்ன எழுதுறதுனு “ஒரு நாள் நமக்கு கல்யாணம் நடக்கும்”னு ஒருவரி மட்டும் எழுதிருக்காரு. அந்த லெட்டரை அந்த பொண்ணுகிட்ட குடுத்தாரா இல்லையானு தெரியல. லூகஸோட அப்பாவுக்கே இவன் ஆண்டோனெல்லாவை பார்க்கதான் டெய்லி நம்ம வீட்டுக்கு வர்றான் புரியுற அளவுக்கு ரெண்டு பேரும் க்ளோஸ் ஆகிடுறாங்க. இந்த நேரத்துலதான் ஒரு இவங்க காதலுக்கு வில்லனா ஒரு சம்பவம் நடக்குது. பெர்சனலா மெஸ்ஸியோட வாழ்க்கையை புரட்டிபோட்ட சம்பவம் அது.
Also Read – சிவகார்த்தியேன் நடிக்கும் கிரிக்கெட்டர் நடராஜன் கதை.. இன்ஸ்பைரிங் டிராவல்!
மெஸ்ஸிக்கு வயசுக்கு உண்டான உயரம் இல்லைனு அவங்க வீட்டுல ஃபீல் பண்ணி டாக்டர்ட்ட செக் பண்றாங்க. பார்த்தா அவருக்கு எதோ ஹார்மோன் பிரச்னை இருக்கு. அதை சரி பண்றதுக்கு மாதம் 900 டாலர் செலவு பண்ணி சிகிச்சை எடுத்துக்கணும். அவர் விளையாடின லோக்கல் க்ளப் அவருக்கு அவரோட சிகிச்சை ஹெல்ப் பண்ண முடியாதுனு சொல்லிடுறாங்க. கடைசில பார்சிலோனா டீம்ல இருந்து ஒரு ஆஃபர் வருது. மெஸ்ஸி ஸ்பெயின்ல தங்கியிருந்து பார்சிலோனா டீமுக்காக விளையாடினா அவரோட மருத்துவச் செலவை நாங்களே பார்த்துக்குறோம்னு சொல்றாங்க. மெஸ்ஸியும் வேற வழியில்லாம 11 வயசுல ஸ்பெயின் கிளம்பி போயிடுறாரு. இப்போ அர்ஜெண்டினால ஆண்டோனெல்லா.. ஸ்பெயின்ல மெஸ்ஸி ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசைல இருக்காங்க. முன்ன மாதிரி தினமும் மீட் பண்ணிக்க முடியாது. பேச முடியாது. இப்போ இருக்குற அளவுக்கு அப்போ மொபைலும் கிடையாது. எப்பவாச்சும் ஆடிக்கொருதடவை அமாவாசைக்கொரு தடவைதான் ரெண்டு பேரும் பேசிக்க முடியுது. என்னதான் பிரிஞ்சு இருந்தாலும் இந்த காதல் கோட்டை கம்யூனிகேசன் ரெண்டு பேர்க்குள்ளயும் பயங்கரமான காதலை வளர்க்குது. சரிப்பா.. அப்பறம் எப்படி ஒண்ணு சேர்ந்தாங்க? அது ஒரு செம்ம சுவாரஸ்யமான கதை. அதைப் பார்க்குறதுக்கு முன்னாடி தமிழ்நாடு நவ் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க.
ஒருநாள் ஆண்டோனெல்லாவோட ஃப்ரெண்டு ஒருத்தங்க ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல இறந்திடுறாங்க. 17 வயசு ஆண்டோனெல்லாவுக்கு அந்தச் செய்தி ஒரு இடி மாதிரி விழுகுது. பயங்கர டிப்ரசனுக்கு போயிடுறாங்க. இந்த தகவல் ஸ்பெயின்ல இருக்குற மெஸ்ஸிக்கு எப்படியோ தெரிய வருது. ‘இங்க இருக்குடா அர்ஜெண்டினா’னு எதுவும் யோசிக்காம ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணி ஆண்டோனெல்லாவைப் பார்க்க கெளம்பிடுறாரு. ரொம்ப வருசம் கழிச்சு அவங்க சந்திச்சப்போ பழைய காதல் புத்துயிர் பெருது. இனி பிரியவேகூடாதுனு முடிவு பண்றாங்க. ஆனா அதுக்குள்ள மெஸ்ஸி ஊரறிஞ்ச ஃபுட்பால் ப்ளேயர் ஆகிடுறாரு. அவர் எப்படி விளையாடுறாருனு சொல்லவா வேணும். அந்த புகழ் வெளிச்சத்துக்கு மத்தியில தன்னோட காதலை சீக்ரெட்டாவே வச்சிருக்காரு. ‘உங்களுக்கு எப்போங்க கல்யாணம்?’ என்று மீடியாக்கள் மைக்கை நீட்டினப்போ ‘எனக்காக ஒருத்தி அர்ஜெண்டினால காத்திருக்கா’ அப்படினு மட்டும் சுருக்கமா சொல்வாரு. இவங்களோட ரிலேசன்ஷிப் பத்தி 2009-ல தான் முதல் முதலா அறிவிக்குறாரு. 2012-ல ஆண்டோனெல்லா முதல் முறையா கர்ப்பமானப்போ அர்ஜெண்டினா-ஈக்வெடார் மேட்ச் நடந்தது. அதில 4-0 னு அர்ஜெண்டினா மேட்ச் ஜெயிச்சதும் பந்தை எடுத்து தன்னோட டிசர்ட்க்குள்ள வச்சு ‘எனக்கு குழந்தை பிறக்கப்போகுதேய்ய்ய்’ னு உலகத்துக்கே அறிவிச்சாரு மெஸ்ஸி. இரண்டு பையன்கள் பிறந்த பிறகு 2017 ல மெஸ்ஸியும் ஆண்டோனெல்லாவும் திருமணம் பண்ணிக்குறாங்க. அடுத்த சில மாதங்கள்ல மூணாவது பையன்.
ஒரு விஷயம் தெரியுமா? ஆண்டோனெல்லாவுக்கு ஃபுட்பால்னாலே பிடிக்காதாம். ரொம்ப போர் அடிக்கிற கேம்னு சலிப்பா சொல்வாங்களாம். மெஸ்ஸி ஃபோன் பண்ணி ‘இன்னைக்கு மேட்ச்ல நான் ஹாட்ரிக் கோல் போட்டிருக்கேன்மா’ என்று ஆசையாக சொன்னாலும் ‘அதிருக்கட்டும் நைட்டு சாப்பிட வீட்டுக்கு வருவீங்களா? சாப்பாட்டுல தண்ணி ஊத்தணுமா?’ என்று அலுத்துக்கொள்வாராம். சமீபத்துல கத்தார்ல நடந்த கால்பந்து உலகக்கோப்பைல அர்ஜெண்டினாவை ஜெயிக்க வைச்சு கடைசிவரை நான் G.O.A.T-தான்னு கம்பீரமா சொல்லிருக்காரு மெஸ்ஸி. உலகக்கோப்பை ஜெயிச்சதும் மெஸ்ஸி கண்ல தண்ணீரோட இருக்குற தன் மனைவியை கட்டித்தழுவின மொமண்ட் செம்ம வைரல் ஆனது. அந்த போட்டோவிலேயே இவங்க ரெண்டு பேரோட காதல் எந்தளவுக்கு இருக்கும்னு புரிஞ்சுக்கலாம். அப்படியே அந்த போட்டோவை போட்டு பிகில்ல வர்ற “உனக்காக வாழ நினைக்கிறேன்…” பாட்டை ஒலிக்கவிட்டா Wholesome-ஆ இருக்கும்ல.