‘மண்ணில் போட்ட காசு வீணாகாது’ என்று பொதுவாகச் சொல்வார்கள். சொந்தமாக ஒரு வீடு வைத்திருப்பவர்கள்கூட முதலீடு என்ற பெயரில் வீட்டுமனைகளை வாங்கி வருகின்றனர். இந்த முதலீடுகளில் முக்கியமாக எல்லோரும் கவனிப்பது போக்குவரத்து, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மருத்துவமனைகளைத்தான். இது எல்லாமே அமைந்துவிட்டால் கேள்வியே கேட்காமல் வீட்டுமனைகளை வாங்கி அதில் வீடு கட்டி விடுகிறார்கள். இதில் தொழில்நகரங்கள் என்றாலே வீட்டுமனைகளை வாங்குவதில் போட்டியே உருவாகி விடுகிறது. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில நிறுவனங்கள் விலையை அதிகப்படுத்தியும் லாபம் பார்க்கிறது. இந்த நிலையில் மிகவும் குறைந்த விலையில் ஶ்ரீபெரும்புதூரில் வீட்டுமனைகள் குறைந்த அளவில் விற்பனையாகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், போக்குவரத்து, மருத்துவமனைகள், கல்லூரிகள், ஷாப்பிங் கடைகள் என அனைத்துமே ஒருங்கிணைந்த ஓர் இடத்தில் விலை குறைவாக வீட்டு மனைகள் விற்பனை செய்கிறது, ஜி ஸ்கொயர் நிறுவனம். உலகதரம் வாய்ந்த 35 வசதிகளை உள்ளடக்கிய மனைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஏன் ஶ்ரீபெரும்புதூர்?
1999-ல் ஹூண்டாய் நிறுவனம் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2008-ம் ஆண்டில் ஶ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாறியது. பல நிறுவனங்கள் இங்கு வந்தன. அப்போதே சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருந்தன. இன்று மொத்தமாக BMW, Samsung, Dell, Royal Enfield உள்ளிட்ட 500 நிறுவனங்களுக்கு மேல் ஶ்ரீபெரும்புதூரில் முதலீடு செய்திருக்கின்றன. ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் ஹார்டுவேர் என இத்தொழில்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுமார் 10 வருடங்களில் 20 மடங்காக மக்கள் தொகை குடியேற்றம் அதிகரித்திருக்கிறது. இதுதவிர, ஶ்ரீபெரும்புதூரைச் சுற்றியுள்ள இருங்காட்டுக்கோட்டை, பென்னலூர் போன்ற பகுதிகள் வர்த்தகத்திற்காக துறைமுகங்களுடன் இணைக்கப்படவிருக்கிறது. ஜப்பானிய நிறுவனங்கள் ஏற்கனவே இந்த பகுதிகள் குறித்து விரிவான ஆய்வுகளை நடத்தி, தங்கள் முதலீட்டை இங்கு குவிக்கவும் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் இந்த பகுதியில் முதலீடு செய்வது எதிர்காலத்துக்கான சரியான திட்டமிடலாக இருக்கும்.
வேலை செய்யும் இடத்துக்கு அருகிலேயே வீட்டுமனை!
ஸ்ரீபெரும்புதூருக்கு தினமும் உங்கள் வேலைக்காக நீண்ட தூரம் பயணம் செய்வதால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம், உங்களுக்காகவே தயாராக இருக்கிறது, G Square Symphony திட்டம். இங்கு அதிநவீன தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டு மனைகள் அதுவும் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் அப்பார்ட்மெண்ட்டை விட வீட்டுமனை முதலீடுதான். பூந்தமல்லி – ஶ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது, G Square Symphony திட்டம்.
போதுமான இடவசதி, இயற்கையான சூழல், சுத்தமான குடிநீர், சுகாதாரமான சூழல், அருகில் மருத்துவமனை, கல்லூரிகள், பள்ளிகள் என எல்லா வசதிகளுடனும் கூடிய வகையில் 17.5 ஏக்கரில் 86 வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. சதுர அடிகள் தலா1000 சதுர அடி முதல் 2050 சதுர அடி வரை பிரிக்கப்பட்டுள்ளன. விலை 32.5 லட்சம் முதல் துவங்குகிறது. இயற்கையான கார்டன், வெளிப்புற உடற்பயிற்சிக்கூடம் உள்ளிட்ட 36 வகையான உலகத் தரம் வாய்ந்த வசதிகள், 5 வருட இலவச பராமரிப்பு, 24×7 சிசிடிவி கண்காணிப்பு, வீட்டு மனைகள் முழுவதும் தெருவிளக்குகள், அகலமான உள்சாலைகள் என அதிநவீன கட்டமைப்பில் மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. மனை வாங்கியவுடன் தாராளமாக கட்டுமானத்தை ஆரம்பிக்கலாம். அதேபோல் மனை வாங்கியவுடன் குறைவான செலவில் வீடு கட்ட ஆலோசனையும் தருகிறார்கள். ஶ்ரீ பெரும்புதூரிலிருந்து 11 நிமிட பயண தொலைவிலும், பூந்தமல்லியிலிருந்து 30 நிமிட தொலைவிலும் அமைந்துள்ளது. இன்னும் குறிப்பாக பரந்தூரில் அமையவிருக்கும் விமான நிலைய இடத்துக்கு அருகிலேயே வீட்டு மனைகள் அமைந்துள்ளன.
ஶ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் மேல்நோக்கிச் செல்வதால், DTCP அங்கீகரிக்கப்பட்ட மனைகளுக்கான தேவை கடந்த ஐந்தாண்டுகளில் உயர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் ஶ்ரீபெரும்புதூர் நிலத்தின் விலை இன்னும் ஏற்றம் காணும். இந்தப் பகுதியில் வீட்டு மனை வாங்குவது எதிர்காலத்துக்கான முதலீடு.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல, வீடு வாங்குவதற்கான சக்தி இருக்கும் போதே, குறிப்பாக நல்ல வேலையில் வருவாய் ஈட்டும் போதே, அதை வாங்குவது புத்திசாலிதனம். கட்டுமானப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தச் சூழலில், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து வீடு கட்டுவது நடுத்தர மக்களுக்கு பெரும் சிரமமாக இருக்கலாம். எனவே இப்போதே வீடு கட்டுவது சாலச்சிறந்தது என்கிறார்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உங்கள் விவரங்களைப் பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்புகொள்கிறோம்
[ninja_form id=15]