Redmi 10

OPPO Reno 6 முதல் Redmi 10 வரை… ஜூலை மாதம் வெளியாகும் கேட்ஜெட்கள்!

டெக் உலகில் ஜூலை 2021-ல் அறிமுகமாகப்போற புது கேட்ஜெட்கள் பற்றிதான் இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப்போறோம்.

புதுப்புது கேட்ஜெட்கள் மீதான ஆர்வத்துக்கு மட்டும் எப்போதும் மவுசு குறைவதில்லை. சந்தையில் அறிமுகமாகும் நியூ கேட்ஜெட்கள் பற்றி தெரிஞ்சுக்கவும் அதை டிரை பண்ணிப் பார்க்கவும் நினைப்பவரா நீங்கள்?… அப்போ உங்களுக்கான கட்டுரைதான் இது…

ஜூலை 2021-ல் ரிலீஸாக இருக்கும் கேட்ஜெட்கள்

OPPO Reno 6

OPPO Reno 6 சீரிஸ் போன மே மாசத்துல சீன மார்க்கெட்டுல அறிமுகமாச்சு. இந்த வகையில் 3 மாடல் போன்களை OPPO நிறுவனம் அங்கு அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. ஃபிளிப்கார்ட்டில் லாஞ்ச் இந்த மாதத்துக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OPPO Reno 6 Series

Specs

சீன மாடலைப் போலவே OPPO Reno 6 pro மாடல் 6.55 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் OLED டிஸ்பிளே, MediaTek Dimensity 1200 SoC சிப்செட், 12 ஜிபி – 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளோடு இது அறிமுகமாக இருக்கிறது. OPPO Reno 6 Pro 64 மெகாபிக்சல் மெயின் கேமராவும், 8 மெகாபிக்சல் செகண்டரி கேமராவையும் கொண்டிருக்கிறது. 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 4,500 mAh பேட்டரி, 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டிருக்கும்.

இதுவே OPPO Reno 6-ல் 6.33 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, MediaTek Dimensity 900 SoC சிப்செட்டுடன் 12 ஜிபி – 25 ஜிபி ரேம். டிரிபிள் கேமரா செட்டப்புடன் வரும் இதன் மெயின் கேமரா 64 மெகாபிக்சல் கொண்டதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. 8 மெகாபிக்சல் செகண்டரி கேமராவையும் கொண்டிருக்கிறது. 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 4,300 mAh பேட்டரி, 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் இந்த மாடல், டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாடல்களும் Color OS 11 வெர்ஷனோடு அறிமுகமாக நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. சீன மார்க்கெட் விலையைப் பார்க்கையில் Reno 6 சீரிஸின் இரண்டு போன்களும் ரூ.35,000 – ரூ.40,000 என்ற விலையில் பொசிஷன் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Samsung Galaxy F22

சாம்சங்கின் A22 ஸ்மார்ட்போன்கள் Samsung Galaxy F22 என்ற பெயரில் ரீபிராண்டிங் செய்யப்பட இருக்கின்றன. ஜூலை இரண்டாவது வாரத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவல் இருக்கிறது. ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது போலவே 5ஜி, 4ஜி என இரண்டு வேரியண்டுகளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டிருக்கிறது. இந்த மாடல் OnePlus Nord CE-க்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுவதால், அதன் விலையான ரூ.22,999 என்றரீதியிலேயே ரிலீஸ் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Samsung Galaxy F22

Specs

Specs பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், 6.40 இன்ச் ஸ்கிரீன் சைஸில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதேபோல், ஆண்ட்ராய்டு 11 வெர்ஷனோடு, ஆக்டோ கோர் புராசஸர், 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், 48 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் கேமரா, 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 5,000 mAh பேட்டரியுடன் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டைப் C போர்ட்டோடு வரும் இந்த மாடல் ரொம்பவே மெலிதாக டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த மாடல் மொத்தமாகவே 186 கிராம்தான் எடை இருக்கும் என்கிறார்கள்.

Redmi 10

Redmi 10

ஷாவ்மியின் பட்ஜெட் செக்மெண்ட் ஸ்மார்ட்போனான Redmi 10 இந்த மாதம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரிலீஸ்களில் ஒன்று. டெக் உலகில் பேசப்படும் தகவல்களின்படி, இது 6.22 இன்ச் IPS LCD பேனலுடன் HD+ ரெசல்யூஷன் கொண்டதாக இருக்கும். முந்தைய மாடலான Redmi 9 போலவே 4 GB + 64 GB, 4 GB + 128 GB என இரண்டு வேரியண்டுகளிலும் லான்ச் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13 மெகாபிக்சல் மெயின் கேமரா, 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ், 5,000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது. விலையில் விளையாடும் ஷாவ்மி இந்த ஸ்மார்ட்போனை ரூ.6,500 – ரூ.14,000 என்ற ரேஞ்சில் பொசிஷன் செய்யலாம்.

இவை தவிர Realme Beard Trimmer, Hair dryer, Realme Buds 2 Neo மாடல்களும் அறிமுகமாக இருக்கின்றன. அதேபோல், POCO F3 GT, OnePlus Nord N200, Asus-ன் Zenfone 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் இந்த மாதத்தில் ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன.

Also Read – Google Jio next… பட்ஜெட் செக்மெண்ட் ஸ்மார்ட்போன் – விலை என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top