தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களையும் குணச்சித்திரக் கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக Tamilnadu Now நடத்திய மிகபிரமாண்ட விருது விழா Golden Carpet Awards சென்னை மியூசிக் அகாடெமியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் சினிமாவின் மினி ஆச்சியாகத் திகழும் சுஜாதா அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த சுவாரஸ்யங்களை இங்கே பார்ப்போம்.
ஊரும் போலீஸூம் மிரளும் பருத்திவீரனையே வறுத்தெடுப்பார்… கோலிசோடா பசங்களை God Mather ஆக அரவணைக்கவும் செய்வார். முகத்தில் சுளிப்பும், கண்களில் கோபமும் கொப்பளிக்க பேசுவதாகட்டும்…. விஜய், சூர்யா தொடங்கி சிவகார்த்திகேயன் வரை டாப் ஸ்டார்களை அதட்டிக் கொஞ்சும் தாயாக நடிப்பதாகட்டும்… பின்னியெடுப்பார் சுஜாதா. எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி கேரக்டர் ‘கோலிசோடா’ ஆச்சி. நூற்றாண்டுகளாக ஒரே மாதிரி இருக்கும் கேரக்டர் ‘பசங்க’ அம்மா. இரண்டிலும் விரட்டி விரட்டி வெரைட்டி காட்டுவார் தமிழ் சினிமாவின் மினி ஆச்சியான சுஜாதாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும், இயக்குநர் சிம்புதேவனும் விருது வழங்கி கௌரவித்தனர்.
“விருமாண்டிதான் எனக்கு முதல் படம், அதுக்குப் பிறகு பருத்தி வீரன் ல நடிக்கும் போதுதான் நான் முதல் விருது வாங்கினேன். அதுக்குப் பிறகு இத்தனை வருஷம் கழிச்சு இப்போதான் விருது வாங்குறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றார் சுஜாதா.
விருமாண்டி படத்தில் அபிராமிக்கு அந்த வட்டார வழக்கை சொல்லிக்கொடுக்கத்தான் அழைக்கப்பட்டிருக்கிறார். கமல் சார் பாத்துட்டு ‘நீங்களும் நடிங்க’ என்னை நடிக்க வச்சது கமல்சார்தான் என்றார்.
பள்ளிக்காலத்தில் படிக்கும் போது, அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாருக்கு ஒரு காதல் கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார். வீரம் படத்தில் நடிக்கும் போது அஜித்திடமே அந்த சம்பவத்தை சொல்லி இருக்கிறார்.
Also Read – ‘நாட்டாமை கதை என்கிட்ட சொன்னதே வேற..!’ – விஜயகுமார் பகிர்ந்த சுவாரஸ்யம்!
விருது விழா மேடையிலேயே அவர் கணவர் கையில் ஒரு ரோஜாப்பூவோடு வந்து, அவர் எழுதிக் கொண்டு வந்த காதல் கடிதத்தை கவிதையாக மேடையில் படித்தார். அவர் ப்ரபோஸ் செய்து அசத்திய போது… சுஜாதாவும் பதிலுக்கு ‘லவ் யூ டூ…” என வெட்கப்பட நம்ம DJ Black சொல்லிட்டாளே அவ காதலை என டைமிங்கில் அசத்தும் போது சுஜாதா கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே வெட்கப்பட்டார்.
கோலி சோடாவில் அவருடன் நடித்த பசங்க ஒரு அழகான பரிசுடன் ‘தாய்க்கெழவி’ என அழைத்துக்கொண்டு மேடைக்கு வந்து இன்னுமொரு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.
இவ்விருது விழாவின் அத்தனை சுவாரஸ்யங்களையும் Tamilnadu Now YouTube Channel-ல் முழுமையாகப் பாருங்கள்.