ஆங்கராகத் தொடங்கி காமெடி, கேரக்டர் ஆர்டிஸ்டுனு கலக்கின பிரியங்கா, ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு இப்போ சீரியல்லயும் வில்லியா மிரட்டிட்டு இருக்காங்க. அவங்களுக்கு Tamilnadu Now Golden Carpet அவார்டு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
பிரியங்கா – தண்டர் வுமன்
திரை அனுபவம்: 26 வருடங்கள்
ஹிட் ஹிஸ்டரி: அசராமல் காமெடி ஆர்.டி.எக்ஸ்-களை வெடிக்கும் லேடி காமண்டர்.
ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி தன்னுடன் இணைந்து நடித்தது யாரென்று தெரியாமலேயே நடித்துவிட்டு வந்தார். அந்த மாணவி பிரியங்கா… அந்த நடிகர் வடிவேலு.. அந்தப் படம் காதல் தேசம்.
காம்பியர், டாப் ஹீரோயின்களின் தோழி என நடித்தவர், ஆண்களின் கோட்டையாக இருந்த காமெடி ஏரியாவில் தனக்கென ஒரு பேட்டை அமைத்துக் கொண்டார். எவரும் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரங்களை தைரியமாக ஏற்று நடிக்கும் இந்த தைரியலட்சுமி, நிஜ வாழ்க்கையிலும் பல சங்கட சோகங்களை சிரித்தே கடந்திருக்கிறார்.
சினிமாவில் கில்லி… சீரியல்களில் வில்லி என கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்காவுக்கு தங்கக் கம்பளம் விரித்து வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறது Tamilnadu Now Golden Carpet Awards. பிரியங்காவுக்கு Tamilnadu Now சார்பாக best character artist விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Also Read – `இனிமே எந்த அவார்டும் வேண்டாம்; இதுதான் ஒன் அண்ட் ஒன்லி’ – டெல்லி கணேஷ்
நடிகை பிரியாங்காவுக்கான விருதை நடிகர், இயக்குநர் தம்பி ராமையா வழங்கி கௌரவித்தார். அழகான சிரிப்போடு மேடையேறிய பிரியங்கா மேடையில் இருந்த தருணம் முழுவதுமே புன்சிரிப்போடே இருந்தார். மைக் பிடித்தவுடனேயே சிரிக்கத் தொடங்கிவிட்டார். `இதுதான் ஃபர்ஸ்ட் டைம் அவார்டு வாங்குறேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு பேசலாம் தெரியாது… ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும் தம்பி ராமையா சார்கிட்ட இருந்து இந்த அவார்டை வாங்குறது அவ்ளோ சந்தோஷம். நான் முதன்முதலா கிளிசரின் போட்டு அழுத சீன் சாரோட படம்தான். ஃபர்ஸ்ட் டைம் சார் வந்து என்னைக் கூப்பிட்டு பாராட்டுனாரு. எல்லாரும் கைதட்டுனாங்க. அது எனக்கு ஃபர்ஸ்ட் டைம்’ என்று நெகிழ்ந்தார்.
அவர் மேலும் பேசுகையில்,அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா எங்க அப்பா, அம்மாவுக்கு செருப்பாகப் பிறக்கணும்’ என்று சொன்னார். முதன்முதலில் நடித்த காதல் தேசம் காமெடி சீன் பற்றி நினைவுகூர்ந்த அவர்,
ஷூட்டிங் பெங்களூர்ல நடந்துச்சு. யார் கூட நடிக்கிறோம்னு தெரியாமலேயே நடிச்சுட்டு வந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய பேர் இருந்ததைப் பார்த்ததும், வீட்டுக்கே திரும்பிடலாமானு அம்மாகிட்ட கேட்டேன். நடிக்கணும்னு சொல்லிட்டு வந்தபிறகு அப்படியெல்லாம் பண்ணக் கூடாதுனு அம்மா சொன்னாங்க. நல்லவேளை எனக்கு டயலாக்கும் இல்லை. பே பே பேதான். எப்படியோ சமாளிச்சு நடிச்சுக் கொடுத்துட்டு வந்துட்டேன். அந்தப் படத்தை ரொம்ப நாளா நான் பார்க்கவே இல்லை. ஏன்னா எனக்கு கறுப்பு கலர் மேக்கப் போட்டு நடிக்க வைச்சிருந்தாங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் நான் நடிச்ச முதல் படமான காதல் தேசம் படத்தையே பார்த்தேன்’ என்றார். அதேபோல், வடிவேலுவுடன் நடித்த மருதமலை ஸ்டேஷன் சீனுக்குப் பிறகு இனிமேல் நடிக்கவே மாட்டேன் என போன் பண்ணி, அம்மாவிடம் அழுதாராம். அதன்பிறகு என்ன நடந்துச்சுனு ரொம்பவே கியூட்டாகப் பகிர்ந்துக்கிட்டாங்க பிரியங்கா… அந்த எமோஷனல் மொமண்டை மிஸ் பண்ணாமப் பார்க்க நம்ம Tamilnadu Now யூடியூப் சேனல்ல வெளியாகியிருக்க Tamilnadu Now Golden Carpet Award ஷோவை முழுசா பாருங்க… லிங்க் கீழே..!