தமிழ்சினிமா வரலாற்றில் முதல்முறையாகக் குணச்சித்திர நடிகர்களைக் கொண்டாடும் விதமாக Tamilnadu Now, Golden Carpet Awards என்ற விருது விழாவை சென்னை மியூசிக் அகாடெமியில் பிரமாண்டமாக நடத்தியது. இவ்விழாவின் சுவாரஸ்யங்களை நீங்கள் Tamilnadu Now Youtube channel-ல் முழுமையாகப் பார்க்கலாம். இங்கே இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் சந்தான பாரதி பற்றி பார்ப்போம்.

முதல் வாய்ப்பு கேட்டு இயக்குநரின் வீட்டு வாசலிலேயே அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டவர், அதன்பின் கோடாம்பாக்கத்தில் பதித்த முத்திரைகள் அழுத்தமானவை. கலைஞர் எழுதிய திரைக்கதையில் திருத்தம் சொன்ன தைரியசாலி. கடமை கண்ணியம் கட்டுப்பாடு, குணா, மகாநதி என இவருடைய இயக்கம் கமலுக்கு மட்டுமல்ல… தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்தவை.
மிரட்டல் வில்லன், அலட்டல் இல்லா நடிகர், சிறந்த இயக்குநர், தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர் என பல பரிமாணங்களுடன் 44 ஆண்டுகளாக உற்சாகத்துடன் பயணிக்கும் சந்தான பாரதி அவர்களுக்கு சிவப்புக்கம்பளம் அல்ல… தங்கக் கம்பளம் விரித்து வரவேற்றது Tamilnadu Now.
தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கோலிவுட்டின் எனர்ஜி பூஸ்டர் சந்தான பாரதி-க்கு Tamilnadu Now சார்பாக Lifetime Achievement விருது வழங்கி கௌரவித்தனர்.
Also Read – `வடிவேலு இல்லைனா நான் இல்லை’ – நெகிழ்ந்த வெங்கல் ராவ்!
ஏஜெண்ட் உப்பிலியப்பனாக விக்ரம் படத்தில் கலக்கிய சந்தான பாரதி பேசுகையில், `1986-ம் ஆண்டு வெளிவந்த விக்ரம் படத்திலேயே எனக்கு தொடர்பு இருக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸின் தொடக்க காலத்தில் இருந்தே நான் இருக்கிறேன், ஒரு சின்ன அளவிலாவது இருக்கும், கமல் சார் சம்பந்தப்பட்ட எல்லா படங்களிலுமே என்னுடைய பங்களிப்பு இருக்கும், அது யாருடைய படமா இருந்தாலும் நான் இருப்பேன்’ என்றார்.

விக்ரம் படத்தில் ஒரு ஏஜெண்ட் கேங்க்னா, உண்மையாவே சந்தான பாரதி ஒரு கேங் வச்சிருக்காராம், அந்த கேங் பேரு “ஆழ்வார்பேட்டை கேங்”. “அதில் கமல் சார் அப்போ அப்போ வருவார், எப்பவும் நான், பி.சி.ஶ்ரீராம், பி.வாசு, மனோ பாலானு பல பேர் இருப்போம். அப்போ அப்போ அந்த ஏஜ் குரூப்ல என்னென்ன பேசுவோமோ அத்தனையும் அந்த அரட்டையில் இருக்கும்.” என்றவர், ஆல் இன் ஆல் அழகுசுந்தரம் படத்தில் அவர் நடித்த காதர் பாய் கதாபாத்திரம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்துகொண்டார்.
இவ்விருது விழாவின் சுவாரஸ்யமான தகவல்களை Tamilnadu Now Youtube Channel-ல் முழுமையாகப் பார்க்கலாம்.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.