தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தவர் கவுண்டமணி. இன்றைக்கு மக்கள் மத்தியில் பயன்பாட்டில் இருக்கும் பல கவுன்டர்களுக்கு சொந்தக் காரர் இவர் தான். கவுன்டர் நாயகன் கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று. அவரின் பிரபலமான ஆன் ஸ்கிரீன் மற்றும் ஆஃப் ஸ்கிரீன் பஞ்ச் வசனங்களில் சில இங்கே…
Also Read : நடிகர் கார்த்தியைப் பிடிக்க ஐந்து காரணங்கள்! #HBDKarthi
-
1 என்னடா இது தேவையில்லாத தத்துவங்கள்...
செந்தில் : ``ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கி தான் குடிக்கும்”
கவுண்டமணி : வேறென்ன ஸ்ட்ரா போட்டா குடிக்கும். அது வாய் இருக்குற அமைப்புக்கு அப்படிதான் குடிக்க முடியும்.
செந்தில் : நாய குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும் அது வாலாட்டிட்டு தான் இருக்கும்.
கவுண்டமணி : ஆட்டும்னு தெரியுமல்ல.. வால வெட்டிட்டு உட்கார வைக்க வேண்டியதான.. அப்புறம் ஏன்டா நடு வீட்டுல கொண்டு போய் உட்கார வைக்கிறீங்க.
என்னடா இது தேவையில்லாத தத்துவங்கள்... கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைங்கறது, அது இப்போ தெரிஞ்சு என்ன செய்ய போகுது. கழுதை எந்த நூற்றாண்டுல உண்டானது! கற்பூரம் ஒரு கெமிக்கல்.. இப்போ உண்டானது. ரெண்டையும் ஏன்டா கம்பேர் பண்ணி பேசுறீங்க. பனை மரத்துக்கு கீழ உட்கார்ந்து பால குடிச்சாலும் பாக்குறவங்க கள்ளுனு சொல்லுவாங்க. சொல்லுவாங்கனு தெரியுமல்ல. அப்புறம் நாயே அதை ஏன்டா பனை மரத்துக்கு கீழ வச்சு குடிக்கிறீங்க. பக்கத்து தெருவுல வச்சு குடிக்க வேண்டியதான. -
2 டெரரிஸ்ட் - சூட்கேஸ்
செந்தில் : நான் டெரரிஸ்ட் ஆயிட்டேன்.
கவுண்டமணி : என்னது சிரைச்சுட்டு வந்துட்டியா?
செந்தில் : டெரரிஸ்ட்னா தமிழ்ல தீவிரவாதினு அர்த்தம். என் யூனிஃபார்ம பாத்தாதுமே உங்களுக்கு புரிஞ்சிருக்கனும்.
கவுண்டமணி : சூட்கேஸ்க்கு கூட இந்த துணிலதான் உறை தச்சு போடுவாங்க. -
3 துபாய் பாட்டு..
கவுண்டமணி : ஒரிஜினல் துபாய் பாட்டு ஒண்ணு பாடுறேன் கேக்குறியா?
செந்தில் : என்னது?
கவுண்டமணி : பாட்டு?
செந்தில் : கேக்கவே இல்ல.
கவுண்டமணி : துபாய்ல இருந்து பாடுனா மயிராடா கேக்கும்.
-
4 அதுசரி, தேங்காயக் கீழ வை!
கூட்டத்துல பெருசு : என்னதான் பேசியிருந்தாலும் பழகியிருந்தாலும் அந்தந்த காரியங்கள் வரும்போது அவங்களுக்கு கூச்சமும் வெக்கமும் வரத்தான செய்யும். அதுதாங்க தமிழர் பண்பாடுங்குறது.
கவுண்டமணி : அதுசரி, தேங்காயக் கீழ வை. இதை தூக்கிட்டு ஓடுறதுக்குதான் இவ்வளவு பெரிய வசனம் பேசினியாக்கும். நல்ல வேளை நகை டப்பாவ இங்க வச்சிருந்தோம். இல்லைனா நாலடியார், திருப்புகழ் எல்லாம் பொளந்து கெட்டிருப்பியே. பெருசு நீ என்னதான் சொந்தமா இருந்தாலும் கொஞ்சம் தள்ளி உட்காரு.
பெருசு : இல்லங்க, இங்கையே இருக்கேங்க.
கவுண்டமணி : வேணாம்பா கல்கண்டு தட்டுலாம் இருக்கு, நீ எச்சி ஊத்திருவ.
-
5 அட வர முடியாதுப்பா...
சத்யராஜ் : வீரநடைனு ஒரு படம் நானும் அண்ணனும் நடிச்சிட்டு இருக்கோம். எனக்கும் படங்களே இல்ல. ஒருநாள் என்னை ஒரு டைரக்டர் பாக்க வரேன்னு சொல்லி இருந்தாரு. சீமான் கிட்ட என்ன சீக்கிரம் விட்ருங்கனு சொல்லி இருந்தேன். உடனே, கவுண்டமணி அண்ணே, ``எப்படி இருந்தாலும் அந்தக் கதைய நீங்க வேண்டாம்னு சொல்லப் போறது இல்ல. ஏன்னா, நமக்கு கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் எவனும் வரல.. கதவ சாத்தி தாள் போட்டுட்டுதான் கதையே கேக்க போறீங்க. அதுனால எதுக்கு இவ்வளவு பில்டப்”னு பேசி சிரிச்சுட்டு இருந்தோம். உடனே, அசிஸ்டென்ட் டைரக்டர் வந்து, ``சார், ஷாட் ரெடி” அப்டின்னாரு. கவுண்டமணி அண்ணே உடன, ``வர முடியாது போப்பா.. இருக்குறது ஒரே படம் இதையும் நாங்க நடிச்சு தீத்துட்டோம்னா அடுத்து எங்க போறது” அப்டின்னாரு.
-
6 நாய் காமெடி...
இயக்குநர் ராம்தாஸ் : எனக்கு கல்யாணம் 89 ல நடந்துச்சு. கவுண்டமணி அண்ணன் வீட்டுக்குப் போயி்ருந்தேன். ``வா ராம்தாஸ்” அப்டின்னாரு. பக்கத்துல ஒரு நாய் உட்கார்ந்து இருந்துச்சு. இதுக்கு என்னங்க பேரு.. அப்டின்னே! ``அதுக்கென்ன பேரு.. நாய்தான். அதுக்கொரு பேரு வச்சு. அதை வேற நியாபகம் வச்சி கூப்பிட்டு கிடக்கனுமா” அப்டின்னாரு.
-
7 மேடையாவது.. எதாவது..
சந்தானம் : பேசிட்டு இருக்கும்போது வாப்பா ரெஸ்ட்ரூம் போய்ட்டு வரலாம் அப்டின்னாரு. அண்ணே.. மேடை நாகரிகம் அப்டின்னேன் நான். `அட வாப்பா மேடையாவது எதாவது... போய்ட்டு வரலாம். இவனுங்க பேசுறத பார்த்தா ஒண்ணுக்குப் போய்ட்டு வந்து டிஃபன்லாம் ஆர்டர் பண்ணனும்போல இருக்கு’னு கலாய்ச்சார்.
0 Comments