ஆண்ட்ரியாவுக்கு இன்று பிறந்தநாள். ஆண்ட்ரியா எவ்வளவு சூப்பரான சிங்கர்… எவ்வளவு அசத்தலான ஆக்டர் என்பதெல்லாம் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்ததே. அதையெல்லாம் தாண்டி அவ்வப்போது சில அதிரடிகளை காட்டுவது ஆண்ட்ரியா ஸ்டைல். அப்படி நமக்கு ஆண்ட்ரியா கொடுத்த 11 ஆச்சர்யங்கள்தான் இவை.
- முதல் பாடலே ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’. தமிழை இவ்ளோ ஸ்டைலா பாடமுடியுமானு ஆச்சர்யப்படுத்துனாங்க.. அதுவும் அந்த ‘கொலையாளி…’ ஹார்ட்டு ஹார்ட்டு ஹார்ட்டு!
- முதல் படமே சரத்குமாருக்கு ஹீரோயினா அதுவும் 5 வயசு குழந்தைக்கு அம்மாவா நடிச்சாங்க. வேற லெவல்ங்க நீங்க!
- அடுத்த படமே டக்குனு யூ-டர்ன் அடிச்சு ஹாட்டா டெரரா ஆயிரத்தில் ஒருவன் பண்ணாங்க. எம்புட்டு கெட்ட வார்த்தை!
- ஒரே வருசத்துல ஜனவரில ‘இதுவரை இல்லாத’னு மயிலிறகுல வருடிவிடுவாங்க டிசம்பர்ல ‘ஹூ இஸ் தி ஹீரோ’னு தௌசண்ட் வாலாவ தெறிக்க விடுவாங்க. ஆண்ட்ரியா வாய்ஸ் கொடுத்த புஷ்பா `ஊ சொல்றியா மாமா…’ பாட்டுதான் இப்போ அதிரிபுதிரி டிரெண்ட்.
- தரமணி ஆண்ட்ரியாவைவிட Swag-ஆன ஹீரோயினை தமிழ் சினிமால வரலாற்றுல காட்டுறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்டுடா!
- ஈ லோகத்தில் பெண்களுக்கு ஒரு ஃபெர்பக்ட்டான பிரேக்கப் சாங் உண்டெங்கில் ஆயிரத்தில் ஒருவன் ‘மாலை நேரம்’ பாட்டுதான்.
- ‘ஆடுகளம்’ டாப்ஸி, ‘தங்கமகன்’ ஏமி, ‘நண்பன்’ இலியானா… யார் தமிழுக்கு வந்தாலும் ஆண்ட்ரியாதான் டப்பிங். இது என்ன பிரமாதம் Avengers End Game ல Scarlett Johansson-யே தமிழ் பேச வச்சது தலைவிதான்.
- ஒரு பக்கம் ‘என்னடி மாயாவி’னு காதல்… இன்னொரு பக்கம் ‘என்னை என்ன ** னு நினைச்சியா’ வில்லத்தனம்னு கலந்து கட்டி விருந்து வச்ச வடசென்னை சந்திராவுக்கு ஆஸ்கார் அவார்டு குட்றா ட்ரம்ப்பு…!
- தமிழ் சினிமால கம்மியான சம்பளம் வாங்குற ஹீரோயின் பிசாசு 2-ல கிளாமரா நடிக்க கேட்ட சம்பளம் ஒரு கோடியாம்ப்பே…!
- திடீர்னு கடல் கன்னியா மாறி டாப்லெஸ்ஸா போஸ் கொடுத்து ஷாக் கொடுப்பாங்க.
- ’36 வயதினிலே’ க்ளப்ல சேர்ந்தப்பறம்கூட ஆளும் குரலும் அப்படியே இருக்குறதும் சர்ப்ரைஸ். அது எப்படிங்குறது கூகுளுக்கே புரியாத சீக்ரெட்!