சத்யம் தியேட்டர் நிறைய பேருக்கு பிடிக்க ஒரு முக்கியமான காரணமே அவங்களோட பாப்கார்ன்தான். அதுக்கு மட்டும் ஒரு தனி டேஸ்ட் இருக்கும். அதுலயும் அவங்க கொடுக்குற அந்த ஃப்ளேவர்ஸ் டேஸ்ட் அள்ளும். இந்த பாப்கார்னுக்கும் ஒரு கதை இருக்கு. நாடு நாடா தேடி உலகத்தோட வேற மூலைல இருந்து மைனஸ் 18 டிகிரி குளிர்ல போய் இந்த பாப்கார்னைக் கண்டுபிடிச்சாங்க சத்யம் டீம். அது மட்டுமில்லாம அவங்களோட ஃப்ளேவர்ஸை கண்டுபிடிச்சது ரெண்டு ஸ்கூல் பசங்கதான். சத்யம் தியேட்டர் பாப்கார்னோட வரலாறைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
போன வீடியோல சொன்ன மாதிரி 1999-ல சத்யம் தியேட்டர் கிரண் ரெட்டி கைக்கு வந்தது. அப்போ இருந்துதான் இந்த தியேட்டரோட எக்ஸ்பீரியன்ஸை மாத்த ஆரம்பிக்குறாங்க. அப்போ அந்த தியேட்டருக்கு Cold Coffee சப்ளை பண்ற வெண்டாரா இருந்தவர் பாவேஷ் ஷா. இந்த பாவேஷோட ஒர்க்கை பாத்துட்டு கிரண் ரெட்டி அவரோட எஸ்.பி.ஐ கம்பெனிலயே ஜாயின் பண்ணுங்கனு கேக்குறாரு. அவரும் 2003-ல எஸ்.பி.ஐல சேருறாரு. அப்போ அவருக்கு கொடுக்கப்பட்ட முதல் அசைன்மெண்ட், உலகத்தோட பெஸ்ட் பாப்கார்ன் எதுனு கண்டுபிடிங்க. அது சத்யம் தியேட்டர்ல கிடைக்கணும். இந்த அசைன்மெண்ட்டை ரொம்ப சீரியஸா எடுத்துட்டு தேட ஆரம்பிக்குறாங்க. பெரிய சினிமா ஈவண்ட் எங்க நடந்தாலும் அங்க போய் கலந்துக்க ஆரம்பிக்குறாங்க. அப்படி மக்காவ்ல நடந்த ஒரு சினிமா கான்க்ளேவ்ல கலந்துகிட்டப்போ அமெரிக்காவுல நப்ராஸ்கால இருக்குற Preferred Popcorn-ங்குற கம்பெனிதான் பெஸ்ட்டான பாப்கார்ன் தர்றாங்கனு தெரிஞ்சுக்குறாங்க.
இந்த Preferred Popcorn கம்பெனி முழுக்க முழுக்க மக்காச்சோள விவசாயிகளே நடத்துற கம்பெனி. ஏன் இவங்களோடது பெஸ்ட்னா இங்கதான் High Expansion Corn- கிடைக்குமாம். அதாவது சின்ன விதையா இருக்கும் அதை பொரிச்சா வர்ற பாப்கார்ன் பெருசா இருக்கும். இந்த High Expansion Corn இந்தியாவுல விளைவிக்க முடியாது. அதனால இந்த கம்பெனியோட பாப்கார்னை தேர்வு பண்றாங்க. எப்படி விளைவிக்குறாங்கனு நேர்ல போய் பார்க்கலாம்னு பாவேஷை ஃப்ளைட் ஏத்தி அமெரிக்காவுக்கு அனுப்புறாங்க. அப்போதான் முதல் முறையா அமெரிக்க போறாரு மனுஷன். அப்போ அந்த ஊர்ல மைனஸ் 18 டிகிரி குளிர் இருந்திருக்கு. அந்த குளிர்ல 7 நாள் தங்கி அந்த கார்ன் எப்படி உருவாகுதுனு கத்துக்குறாரு. 2004 ஜனவரில முதல் கண்டெய்னர் சத்யம்க்கு வருது.
மக்காச்சோளம் ரெடி. அடுத்து பாப்கார்ன் உருவாக்குற மெசின். சத்யம்ல இருக்குற பாப்கார்ன் மெசின் Cretors ங்குற கம்பெனி உருவாக்குனது. இவங்கதான் முதல்முதல்ல பாப்கார்ன் மெசின் உருவாக்குன கம்பெனி. சிகாகோ போய் இந்த மெசின் வாங்கப்போனப்போ ஒரு சம்பவம் நடந்திருக்கு. அங்க இருந்த ஒருத்தர், ‘எனக்கு தெரிஞ்ச ரெண்டு ஸ்கூல் பசங்க இருக்காங்க. அவங்க ஏதோ பாப்கார்ன் ஃப்ளேவர்ஸ் கண்டுபிடிச்சிருக்காங்கனு சொல்லிட்டு இருக்காங்க. நீங்க போய் பார்க்குறீங்களா’னு கேட்டிருக்காரு. ரெண்டு ஸ்கூல் பசங்க பாப்கார்ன்ல ஃப்ளேவர்ஸ் கண்டுபிடிக்கிறாங்க. அதை பாப்கார்ன்ல சேர்த்து சாப்பிட்டா நல்லாருக்கும்னு சொல்றாங்க. ஆனா எந்த தியேட்டரும் அதை வாங்கிக்க ரெடியா இல்லை. அதனால ஃப்ரீயாவே வச்சிக்கோங்கனு ஒரு தியேட்டர்ல கொடுத்திருக்காங்க. கொஞ்ச நாள்ல அவங்களுக்கு வேற ஒரு தியேட்டர்ல இருந்து போன் வருது. ‘ஏங்க அவங்களுக்கு மட்டும் ஃப்ளேவர்ஸ் கொடுத்திருக்கீங்க. எங்க தியேட்டருக்கும் வேணும்’னு சண்டைக்கு வந்திருக்காங்க. அப்போதான் அந்த ஃப்ளேவர்ஸ் பயங்கர ஹிட் ஆகிடுச்சுனு தெரிஞ்சிருக்கு. கொஞ்ச நாள்ல ஏரியா முழுக்க அந்த ஃப்ளேவர்ஸ் பிரபலமாகிடுச்சு. இந்த விஷயம் பாவேஷ்க்கு தெரிஞ்சு நம்மளும் இந்த ஃப்ளேவர்ஸ் யூஸ் பண்ணலாம்னு அதை வாங்குறாங்க.
ஆனா வெளிநாட்டுல இருந்து ஃப்ளேவர்ஸ் வாங்குறது சத்யம் தியேட்டருக்கு கட்டுபடியாகல. நஷ்டமாதான் இருந்தது. இருந்தாலும் பரவாயில்லனு இரண்டு வருசம் இதை வாங்கி பயன்படுத்துறாங்க. அதுக்கப்பறம் அந்த ஃப்ளேவர்ஸை சென்னைல தயாரிக்க ஆரம்பிக்குறாங்க. ஆனா இன்னைக்கு வரைக்கும் சத்யமோட பாப்கார்ன்ஸ் நப்ராஸ்கால இருந்துதான் வருது. சத்யம்ல மொத்தம் மூணு ஃப்ளேவர்ஸ் இருக்கும். Sweet chilli BBQ, Sour cream and Onion, Mexican Cheese. இந்த மூணுல சில பேர் ரெண்டு மிக்ஸ் பண்ணி சாப்பிடுவாங்க. சில பேர் மூணுமே கலந்து சாப்பிடுவாங்க.
சத்யம் தியேட்டர்ல ஒரு Invention Lab இருக்கு. அங்க இருக்குற ரெண்டு செஃப்களோட வேலையே வேற என்னென்ன வெரைட்டில பாப்கார்ன் கொடுக்கலாம்னு தினம் ரிசர்ச் நடக்குமாம். எண்ணெயே இல்லாமல் பாப்கார்ன் தயாரிக்குறது Frozen பாப்கார்ன் தயாரிக்குறதுனு வேற லெவல்ல ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க.
சத்யம்ல பாப்கார்ன் சாப்பிடுறதுக்காகவே படத்துக்கு போறவங்கள்லாம் இருக்காங்க. இதனாலே சத்யம்ல சில மாற்றங்கள் கொண்டு வந்தாங்க. நீங்க படத்துக்கே போகாம டைரக்டா சத்யம்குள்ள வந்து பாப்கார்ன் மட்டும் வாங்கலாம். ஓடிடி வந்தப்பறம் நீங்க வீட்டுல படம் பார்த்தாலும் சத்யம் பாப்கார்ன் சாப்பிடலாம்ங்குற மாதிரி ஆன்லைன் டெலிவரி கொண்டு வந்திருக்காங்க.
சத்யம் தியேட்டர் பாப்கார்ன் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.