2016 ஆகஸ்ட் 9-ம் தேதி காலை…. சேலம் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்ல இருந்து சேலம் – சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் டிரெயினோட ஸ்பெஷல் பார்சல் வேன்ல வந்த ரூ.342 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கன்சைன்மெண்டைத் திறந்து பார்த்த ஆர்பிஐ ஆபிஸர்ஸ் பயங்கர அதிர்ச்சிக்குள்ளாகுறாங்க. அந்த டிரெயின் கம்பார்மெண்ட்ல மேல இருந்து ஓட்டை போட்டு அதுல இருந்து 5.78 கோடி ரூபாய் பணம் திருடப்பட்டிருந்துச்சு. இந்தத் தகவல் தீ மாதிரி பரவி எப்படிடா ரன்னிங் டிரெயின்ல கூரை மேல ஓட்டையப் போட்டு கொள்ளையடிச்சாங்கனு பரபரப்பாச்சு. கொஞ்ச நேரத்துலயே The Great Indian Train Robbery-னு நேஷனல் மீடியாக்கள் வரை சென்சேஷனலாச்சு. அந்த கேஸ்ல 2 வருஷம் போராடி குற்றவாளிகளை தமிழ்நாடு சிபிசிஐடி போலீஸ் டிரேஸ் பண்ணாங்க. தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு கொஞ்சம் குறைவில்லாத சன்பென்ஸ் கதை அது… எப்படி அந்த கேங்கை போலீஸ் சுத்தி வளைச்சாங்க… அந்த கேஸ்ல எப்படி முடிச்சு அவிழ்ந்துச்சுனு பார்க்கலாம் வாங்க…
ரயில்வே போலீஸ்கிட்ட இருந்து தமிழ்நாடு சிபிசிஐடிக்கு கேஸ் மாறுது. டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலான டீம் அந்த டிரெயினோட ரூட்டை டிரேஸ் பண்ணி விசாரணையை ஆரம்பிக்குறாங்க. சேலத்துல பணத்தை லோட் பண்ண இடத்துல ஆரம்பிச்சு, நேஷனல் ஹைவேஸ்ல இருக்க டோல்கேட் சிசிடிவி, ரயில்வே சிசிடிவினு அலசி ஆராய்ஞ்சும் அவங்களுக்கு எந்தவொரு துப்பும் கிடைக்கல. அதுக்கப்புறம் டெக்னிக்கலா இறங்கி, அந்த டைம்ல ரயில்வே ஸ்டேஷன்களைக் குறிவைச்சு ஆக்டிவா இருந்த மொபைல் நம்பர்களை லிஸ்ட் அவுட் பண்றாங்க. அதுல சந்தேகப்படுற மாதிரியான சில நூறு நம்பர்களைத் தனியா எடுக்குறாங்க. அந்த நம்பர்ஸ்தான் சிபிசிஐடி விசாரணைல முக்கியமான லீட் கொடுத்துச்சு. குறிப்பா சில நம்பர்களைக் கவனிச்சுப் பார்த்ததுல அது எல்லாமே நார்த் இண்டியாவைச் சேர்ந்தவை. அதுவும் குறிப்பான சில நம்பர்களோட ஓனர்ஸ் எல்லாருமே ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவங்கங்குறதை போலீஸ் கண்டுபிடிக்குறாங்க.
டிரெயின் ரன்னிங்ல இருக்கும்போது எந்த ஸ்டேஷன்களுக்கு இடைல கூரை மேல துளையிட்டாங்கங்குறது புதிராவே இருந்துச்சு. கிட்டத்தட்ட 2 வருஷங்களா எந்தவொரு துப்பும் கிடைக்காம இருந்த நிலைமைல, டிரெயின் பயணிச்ச 350 கி.மீ தூரத்தை செயற்கைக் கோள் படங்களா நாசா அனுப்புச்சு. அந்த லீடை வைச்சுதான் செல்போன் டவர்ஸைக் கணக்குப் பண்ணி குறிப்பிட்ட டீமை போலீஸ் சுத்துப் போட்டாங்க.
அந்த குறிப்பிட்ட கேங் மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்துல இருக்க கெஜ்ராசக்குங்குற கிராமத்தைச் சேர்ந்தவங்கங்குறதைக் கண்டுபிடிச்சு சிபிசிஐடி டீம் அங்க போறாங்க. அங்க போனபிறகுதான் தெரிஞ்சது பார்திங்குற பழங்குடியின மக்கள் அதிகமா வாழ்ற அந்த ஊர்ல இருக்கவங்க பெரும்பாலானவங்களோட தொழிலே கூட்டமா போய் கொள்ளையடிக்குறதுதாங்கிறது. அதுக்கப்புறம் உள்ளூர் போலீஸோட உதவியால மோஹர்சிங் கேங்தான் டிரெயின்ல பணத்தைக் கொள்ளையடிச்சதுங்குறது தெரிய வருகிறது. 2018ல தினேஷ், மோகன் பர்திங்குற ரெண்டு பேரை அரெஸ்ட் பண்ணாங்க. டீம் லீடர் மோஹர் சிங் உள்பட சிலர் குணா ஜெயில்ல இருக்க அவங்களையும் கஸ்டடில எடுத்தாங்க.
Also Read – “டாஸ்மாக்கே இல்லாத பட்ஜெட் சாத்தியம்” – ஆராய்ச்சி எழுத்தாளர் ராம்தாஸ் கதை!
கஸ்டடில எடுத்தபிறகுதான் போலீஸுக்கு நிறைய விஷயங்கள் தெரிய வந்துச்சு. பர்தி கேங் நார்த் இண்டியால பல இடங்கள்ல கொள்ளையடிச்சு அந்தப் பணத்தைப் பிரிச்சுக்குவாங்களாம். அந்த கேங் மெம்பர்ஸ் இடைல ஒரு கைகலப்பாகி அந்த கேங்கோட தலைக்கட்டா இருந்தவரையும் அவரோட ரைட் ஹேண்டையும் மோஹர் சிங் கொலை பண்ணிடுறார். அங்க இருந்தா பிரச்னைனு சௌத் இந்தியாவுக்கு மோஹர்சிங் கேங் வருது. 2016 ஆரம்பத்துல தமிழ்நாட்டுக்கு வர்றாங்க. எந்த ஊருக்குப் போனாலும் ரயில்வே டிராக்குகள் பக்கத்துல சின்னதா குடிசையைப் போட்டு பொம்மை விக்குறது மாதிரியான தொழில் பண்றது இவங்களோட பழக்கம். அப்படி சேலத்துல இருந்த ஒரு டீம் மூலமாத்தான் பணம் டிரெயின்ல சென்னைக்குப் போகுதுங்குற தகவல் மோஹர் சிங் அண்ட் கோவுக்குக் கிடைச்சிருக்கு. அங்க இருந்து பிளான் பண்ண ஆரம்பிச்சு, அயோத்தியா பட்டினம் – விருதாச்சலம் ரூட்ல மட்டுமே ஒரு வாரத்துக்கும் மேல டிரெயின்ல டிராவல் பண்ணி ஸ்கெட்ச் போட்டிருக்காங்க. அப்படித்தான், சின்னசேலம் – விருதாச்சலம் இடைல 45 நிமிஷம் எந்தவொரு ஸ்டாப்பும் இல்லாம டிரெயின் போறப்போ ரூஃப்ல ஓட்ட போடலாம்னு திட்டம் போட்டிருக்காங்க.
சின்ன சேலம் ஸ்டேஷன்ல மோஹர்சிங் அண்ட் கேங் டிரெயின்ல ஏறி கொஞ்ச தூரத்துல டிரெயின் ரூஃப்ல பேட்டரி, மேனுவல் கட்டர்ஸ் மூலமா ஓட்டை போட்டிருக்காங்க. அப்படியே டிரெயின்ல இருந்த மரப்பெட்டிகளை உடைச்சு, பணத்தை தங்களோட லுங்கிகள்ல சுருட்டி வைச்சிருக்காங்க. ஏற்கனவே பிளான் பண்ணபடி விருதாச்சலம் ஸ்டேஷன் பக்கத்துல இருக்க வயலூர் ஓவர் பிரிட்ஜ்கிட்ட வெயிட் பண்ணிட்டு இருந்த மத்த கேங் மெம்பர்ஸ்கிட்ட பணத்தை கைமாத்தி விட்டுட்டு எஸ்ஸாகியிருக்காங்க. அடுத்த நாள் காலைலதான் பணம் கொள்ளை போன விஷயம் வெளில தெரிய வந்துருக்கு. அதுக்குள்ள சௌத் இந்தியாவையே இந்த கேங் தாண்டியிருக்காங்க. The Great Indian Train Robbery-னு வர்ணிக்கப்பட்ட சேலம் ரயில் கொள்ளை கேஸ்ல சிபிசிஐடி போலீஸார் கிட்டத்தட்ட ரெண்டு வருஷ விசாரணைக்குப் பிறகு இப்படித்தான் கொள்ளையர்களை அரெஸ்ட் பண்ணாங்க.
பழைய ரூபாய் நோட்டுகளை இந்த கேங் கொள்ளையடிச்ச 3 மாசத்துல டிமானிடைசேஷனை கவர்மெண்ட் அறிவிச்சுச்சு. பழைய 500, 1,000 நோட்டுகள் செல்லாம போனதால கிட்டத்தட்ட 2 கோடி ரூபாயை யூஸ் பண்ண முடியாம எரிச்சதா அந்த கேங்ல இருந்தவங்க போலீஸ்ல வாக்குமூலம் கொடுத்திருந்தாங்க.